அந்தமானில் தமிழ் வழிக்கல்வி


.
அந்தமான் நிகோபார் தீவுகள் வங்கக் கடலில் அமைந்துள்ள அற்புதமானஇயற்கை அழகு நிறைந்த பசுமைத் தீவுகள்.  அந்தமான் தீவுகள் இயற்கைவிரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.அருமையான சுற்றுலாத்தலம்.அந்தமானின் கடற்கறைகள் மிகத்தூய்மையானவைஅழகானவை.அந்தமான்,நிகோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572. இதில் 36தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள்.இங்குள்ளமக்களில்  தமிழர்களும் கணிசமாக வசிக்கிறார்கள்தீவுத்தலைநகர்போர்ட் ப்ளேயர்அந்தமான்நிகோபார் தீவுகள் நமது தாய் தமிழ் நாடில்இருந்து 1200 கி.மீதூரத்தில் இருந்தாலும் தமிழர்களுக்கும் தமிழ்மொழிக்குமான உறவு 11ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. 2ம்ராஜேந்திர சோழ மன்னர் அந்தமான்நிகோபார் தீவுகளைக் கைப்பற்றிஅங்கு தமது படைகளை விட்டு சென்றார் என வரலாற்று நூல்கள்குறிப்பிடுகின்றனதஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டின்தொடர் கல்வெட்டு ஒன்று இங்குள்ள பிலோ பாபித்தீவில்இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.


 ஆங்கிலேயர் காலத்தில் குற்றபுரிக்கு சிறைக்கைதிகளாக தமிழர் பலர்வந்திருக்கிறார்கள் எனவும்அவர்கள் நாளடைவில் தங்கள் இனம்மறந்துமொழி மறந்துஅடையாளங்கள் இழந்து தீவெங்கும்காணப்படுகிறார்கள் எனவும் கூறுகிறார்கள்.ஆங்கில ஏகாதிபத்தியத்தைஎதிர்த்து தீரமுடன் போராடிய செக்கிழுத்த தியாகச்செம்மல் தெய்வத்திரு..சிதம்பரனார் அவர்களின் சுதேசிக்கப்பல் நிறுவனத்தின் கப்பல்முதன் முதலாக அந்தமான் தீவுகளுக்குத்தான் பயணம் செய்ததுஎன்கிறது வரலாறு.

 நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் பல தமிழர்கள் தீவுகளை விட்டு தமதுசொந்த ஊருக்கு சென்று விட்டதாகத்தெரிகிறது.அந்த நேரத்தில் தீவில்தொழிலாளர் வேலைகளுக்கு ஆள் எடுப்பதாகவும்அந்ததொழிலாளர்களுக்கு வீட்டு மனைவிளைநிலம் ஒதுக்கீடுசெய்வதாகவும் தீவு நிர்வாகம் விளம்பரம் வெளியிட அந்த நேரத்தில்இங்கு தங்கி வியாபாரம் செய்து கொண்டிருந்த வணிகப்பெருங்குடிமக்கள் பல தமிழர்களை தமிழகத்திலிருந்து தீவிற்கு அழைத்துவந்துஅரசு வேலை கிடைக்கும் வரை அவர்களுக்கு இலவச உணவு,தங்குமிடம் கொடுத்து பராமரித்து வந்துள்ளனர்.

 தீவில் தமிழ் வழிக்கல்விக்கு வழியில்லாத காரணங்களினால் தமிழர்குடும்பமாக வாழ இயலாத ஒரு சூழல் இருந்திருக்கிறதுஅதற்கும் ஒருதீர்வாக அந்தமான் தமிழர் சங்க வளாகத்திலேயே தமிழ் குழந்தைகளுக்குஎட்டாம் வகுப்பு வரை கல்வி கற்பித்துள்ளனர்.அதன் பிறகுபோராட்டங்கள் பல நடத்திஉண்ணாவிரதங்கள் பல இருந்துதீக்குளிப்புபோராட்டங்கள் நடத்தி1969-70ம் கல்வி ஆண்டில் தீவுகளில் தமிழ்வழிக்கல்வி தரும் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அதன்பிறகு தமிழர்கள் குடும்பம் குடும்பமாக ஏராளமானோர்குடியேறியிருக்கின்றனர்.

       
தாய்மொழியில் கல்வி கற்பது தாய்ப்பால் குடித்து வளர்வது போலாகும். பிறமொழியில் கல்வி கற்பது புட்டிப்பால் குடித்து வளர்வது போலாகும்” இந்தச்செய்தி நாம் அனைவரும் அறிந்ததே! ஆனாலும், தாய்மொழி வழிக்கல்வி பற்றிப் பல்வேறு கருத்துக்கள் இருப்பதை நம்மால் மறைக்க முடியாது; மறுக்கவும் முடியாது.

அந்தமானில் தமிழ்வழிக்கல்வியின் நிலை: அந்தமான், நிகோபார் தீவுகளில் தொடர்பு மொழியாக விளங்குவது இந்தி தான். ஆங்கில, இந்தி, வங்காள மொழிக்கல்வி நிலையங்களே 1965க்கு முன்பு வரை இருந்தன. அன்றைக்கு இங்கிருந்த தமிழ்ப்புரவலர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பல போராட்டங்கள் நடத்தி, ரத்தம் சிந்தி தமிழ்வழிக்கல்வி நிலையங்களைக் கொண்டு வந்தனர். அவர்களெல்லாம் போற்றுதலுக்கும், வழிபாட்டிற்கும் உரியவர்கள். அன்றைய நிலையில் அக்கல்வி நிலையங்களில் மாணாக்கர் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.
       
இத்தனை ஆண்டுகளுக்குப்பிறகும் ஐந்து மேல் நிலைப்பள்ளிகளே தமிழ் வழிக் கல்வியில் இருக்கின்றன. அந்தப் பள்ளிகளிலும் பாத்து பஸ்தி மற்றும் மோகன் புரா பள்ளிகளில் மட்டுமே மாணவர்களின் எண்ணிக்கை சொல்லிக் கொள்ளும் நிலையில் உள்ளது.ஆனால், இந்த இரண்டு பள்ளிகளிலும் ஆண்டுதோறும் தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்து வருவதுதான் அச்சத்தையும், கவலையையும் தருகின்றன. நாளடைவில் தமிழ் வழிக்கல்வி நிலையங்களே காணாமல் போய்விடும் நிலைக்கு இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலை ஏற்படக்காரணங்கள் பின்வருமாறு:

1. தமிழ் தவிர்த்த மீதிப் பாடங்களுக்கான நூல்கள் ஆங்கிலத்திலேயே இருப்பதும், வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியிலேயே அமைவது.
2.தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பின் எல்லை சுருங்கி விடுவது.
3. தமிழ் உணர்வு அருகி வந்து கொண்டிருப்பது.

தாய்மொழி வழிக்கல்வி தரும் பயன்கள்: தாய் மொழி வழிக்கல்வியினால் புரிந்து கொள்ளும் உணர்வு சிறந்ததாக அமையும். எனவே, பாடத்தில் தெளிவு ஏற்படும். ஜப்பானிய மக்கள் தாய் மொழியில் பயின்று தான் இன்று அவர்கள் இருக்கும் இந்த உன்னத நிலையை எட்டியுள்ளனர். அவரவர் இனத்திற்குரிய பண்பாடும், பழக்க வழக்கங்களும் எளிதாகக் கடைபிடிக்க வழி ஏற்படுகிறது. நீதி நெறிகளும் ஒழுக்க உணர்வும் மேலோங்கச்செய்யவும் வழிகாட்ட முடியும்.

தமிழ் நாடு தவிர்த்த பிற இடங்களில் தமிழ் வழியில் கற்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல சலுகைகளை அறிவிக்க வேண்டும். இத்தகையோர்க்கு தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தரவேண்டும்.


”கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றி மூத்த குடி” என்று பழம்பெருமை பேசினால் போதாது. நாம் வாழுகின்ற காலத்தில் தமிழுக்கு என்ன செய்தோம்? தமிழ் இனத்திற்கு என்ன செய்தோம்? என்று ஒவ்வொரு தமிழனும் நினைத்துப்பார்க்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக நம் மக்கள் இருப்பதை விட, பண்பாட்டில் சிறந்தவர்களாய், இனவுணர்வு, மொழியுணர்வு மிக்கவர்களாய் வாழ வழிசெய்ய வேண்டும்.

இரத்தம் சிந்திப்பெற்ற தமிழ் வழிக்கல்வி நிலையங்கள் படிப்படியாக மூடப்படுமானால் அந்தச்சிறுமையில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அந்த நிலை ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவரும் அவரவர் நிலைக்கு ஏற்றவாறு உதவிட வேண்டும் காலம் கடந்து கொண்டிருக்கிறது. விரைந்துசெயல்படுவோம்.

தீவில் தமிழ் உட்பட 5 போதனா மொழி பள்ளிகள் உயர் வகுப்பு வரைபோதிக்கப்படுகின்றனஅது போல் தமிழ் உட்பட 7 மொழிகளில்வானொலி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.ஒவ்வொரு நாளும் மாலை 5மணி முதல் 5.30 மணி வரையிலும்வெள்ளி மற்றும்ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மணி 6.15 முதல் மணி 6.30 வரைதமிழில் பக்திப்பாடல்களுமாக தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புசெய்யப்படுகிறது.


அந்தமான் தமிழர் சங்கம்உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம்தமிழ்இலக்கிய மன்றங்கள் தீவில் தமிழர் கலைகலாச்சாரம் மற்றும்பண்பாட்டை எடுத்தியம்பும் பணியைச்செய்கின்றனதவிர வடக்கேடிக்லிப்பூர் தமிழர் சங்கம்மாயா பந்தர் தமிழர் சங்கம்நடு அந்தமான்இரங்கத் அண்ணா படிப்பகம்கட்சால் தமிழர் படிப்பகம் ஆகிய சிறுசிறுதீவுகளில் கூட தமிழர் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆங்காங்கே,தமிழர்கள் பொங்கல் விழாசித்திரை விழாபாரதி - பாரதிதாசன் விழாகொண்டாடும் போது இயல்இசைநாடகம் இணைந்த பண்பாட்டைகட்டிக் காக்கும் விதத்தில் கொண்டாடி மகிழ்கின்றனர்..

        இன்று தீவுகளின் பெரும் வணிகர்களாகஅரசுத்துறைகளில்இயக்குனர்களாகஅரசு அலுவலகங்கள் அனைத்திலும் பதவிவகிப்பவர்களாகபள்ளிகல்லூரி ஆசிரியர்களாக,அரசியலில்பிரமுகர்களாக தமிழர்கள் பெருமையுடன் தங்கள் பண்பாடு காத்துஒளிர்கிறார்கள்.இந்தத் தீவு இன்று ஒரு வளமிக்க சுற்றுலாத் தளமாக,இயற்கை வனப்புடன் மனித வாழ்க்கைக்கு தகுதி உடையதாகஇருக்கிறதென்றால் அதற்கு தமிழனின் உழைப்பும்ஒற்றுமையுமேகாரணம்காடழித்து நாடாக்கிய கரங்கள் தமிழனுடையது.இன்றுஉணவுப்பொருட்கள் முதலாய் போக்குவரத்து வரை புரட்சிநடந்திருக்கிறதென்றால் அது தமிழனின் சாதனை.

1 comment:

kirrukan said...

[quote]இனவுணர்வு, மொழியுணர்வு மிக்கவர்களாய் வாழ வழிசெய்ய வேண்டும்.quote]

இந்த காலத்தில் இந்த உணர்வு இருந்தால் அவன் பயங்கர வாதி என முத்திரை குத்தி போடுவாங்கள்