உலகச் செய்திகள்

.

காசாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன் மீது செருப்பு வீச்சு! _

எம்மால் கோடிஸ்வரராகும் ஷூக்கர் பேர்க்: சொத்தின் மதிப்பு தெரியுமா?


எகிப்திய நாட்டு உதைபந்தாட்ட மைதானத்தில் கலவரம் : 74 பேர் பலி; 150 பேரின் நிலை கவலைக்கிடம்!
 _


காசாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன் மீது செருப்பு வீச்சு! _
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூன் மீது காசாவில் செருப்பு வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலில் சிறைப்பட்டிருக்கும் பலஸ்தீனியர்களின் உறவினர்கள், காசாவுக்குள் நுழைய முயன்ற போதே, பான்கீமூனின் காரை மறித்து அவர் மீது செருப்புகளை வீசி எறிந்தனர்.

அவர்கள் சிறையில் இருக்கும் தங்கள் உறவினர்களின் புகைப்படங்களை ஏந்தி, "இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தது போதும்..." என்று எழுதப்பட்டிருந்த போஸ்டர்களை பான்கீமூனிடம் காண்பித்தனர்.


பாதுகாப்புப் படையினர் அவர்களை அங்கிருந்து போகும்படி கூறிய போது, "இஸ்ரேல் சிறையில் வாடும் பலஸ்தீனியர்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கவே, பான்கீமூனைச் சந்திக்க வந்தோம்" என்று போராட்டக்காரர்களின் செய்தித் தொடர்பாளர் ஜமால் பர்வானா தெரிவித்தார்.

இஸ்ரேலில் சுமார் 7 ஆயிரம் பலஸ்தீனியர்கள் சிறையில் வாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ___


எம்மால் கோடிஸ்வரராகும் ஷூக்கர் பேர்க்: சொத்தின் மதிப்பு தெரியுமா?


பலரும் எதிர்பார்த்ததைப் போல பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களைப் பேஸ்புக் அமெரிக்க பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (US Securities and Exchange Commission) சமர்ப்பித்தது. 

இதன் மூலம் வெளியுலகுக்கு பல சுவாரஸ்யமான தகவல்கள் சிறிது சிறிதாகக் கசிந்த வண்ணம் உள்ளன.

இதேவேளை பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர்பேர்கின் பெறுமதி என்னவாக இருக்கலாம் அதாவது அவரின் சொத்து மதிப்பு எவ்வளவாக இருக்கலாம் என விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் எவ்வளவு பிரபலம் பெற்று விளங்குகின்றதோ அதே அளவிற்கு அதன் ஸ்தாபகர் ஷூக்கர்பேர்க்கும் புகழ்பெற்றுத்திகழ்கின்றார்.

பலரின் கணிப்பின் படி ஷூக்கர்பேர்கின் பெறுமதி சுமார் 28 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

அதாவது ஆரம்பப் பொது வழங்கலுடன் பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பு 100 பில்லியன் டொலர்களாகக் கணிக்கப்படுமாயின் அதில் 28% பங்கு ஷூக்கர் பேர்க்கின் உடையது .எனவே அவரின் பெறுமதியானது 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இப் பெறுமதியின் படி போர்ப்ஸ் சஞ்சிகையின் உலக பணக்காரர்கள் பட்டியலில் இவருக்கு கிடைக்கும் இடம் 9 ஆகும்.

என்ன? கேட்கும் போதே தலை சுற்றுகின்றதா? எங்களை வைத்தே அதாவது எமது தரவுகளை வைத்தே ஷூக்கர் பேர்க் கோடிஸ்வரராகி விட்டார் என குற்றஞ்சாட்டுகின்றனர் இன்னொரு பகுதியினர்.

கடந்த வருடம் ஷூக்கர் பேர்க்கின் மொத்த சம்பளம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள். (ஊக்குவிப்புக் கொடுப்பனவு உட்பட)

எனினும் அடுத்த வருடம் முதல் அப்பிளின் ஸ்டீவ் ஜொப்ஸைப் போல ஒரு டொலரை மட்டுமே ஊதியமாகப் பெறப்போவதாகவும் ஷுக்கர்பேர்க் அறிவித்துள்ளார்.

தனது நிதி திரட்டலுக்கான காரணம் சிறப்பான சேவைக்கே தவிர, பணம் பெறுவதற்காக அல்ல "we don’t build services to make money; we make money to build better services." எனவும் தெரிவித்துள்ளா. 
___

எகிப்திய நாட்டு உதைபந்தாட்ட மைதானத்தில் கலவரம் : 74 பேர் பலி; 150 பேரின் நிலை கவலைக்கிடம்! _
எகி்ப்திய நாட்டில் இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் 74 பேர் உயிரிழந்தனர். சுமார் 1000 பேர் படுகாயமடைந்தனர். 150 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

எகிப்திலுள்ள சிட்டி ஒஃப் போர்ட் நகரில் உள்ள மைதானத்தில் உள்ளூர் உதைபந்து அணிகள் மோதிய போட்டி ஒன்று நடைபெற்றது. அல்அலி மற்றும் அல்மாஸ்ரி அணிகள் இந்தப் போட்டியில் மோதின. 

இரு அணியின் ரசிகர்களும் பெருந்தொகையினராக மைதானத்தில் குழுமியிருந்தனர். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, ஓர் அணியைச் சேர்ந்த ஆதரவாரர்கள் திடீரென மைதானத்துக்குள் புகுந்து, மற்றத் தரப்பு அணி வீரர்களைத் தாக்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து மற்ற அணி ரசிகர்களும் மைதானத்தில் இறங்கி கைகலப்பில் ஈடுபட்டனர். 

ஜன நெரிசல், தாக்குதலில் அடைந்த காயம் என மைதானத்தில் 74 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எகிப்தின் உதைபந்து வரலாற்றில் இது படுமோசமான, துயரமான சம்பவம் என அந்நாடு அறிவித்துள்ளது. 

Nantri verakesari

cv

No comments: