கையடக்கத்தொலைபேசியை உபயோகித்தால் போர்க் குற்றவாளி! _

வடகொரியாவில் மறைந்த முன்னாள் தலைவர் கிம் ஜொங் Il இற்கு 100 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு யாரும் கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிக்ககூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது.

கையடக்கத்தொலைபேசிகள் உபயோகிப்பதினை அந்நாட்டின் ஆளும் தொழிலாளர் கட்சி "போர்க் குற்றமாக" அறிவித்துள்ளது.

கையடக்கத்தொலைபேசிகளை யாராவது பயன்படுத்தினால் போர்க்குற்றவாளியாக கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

.



எகிப்து, லிபியா, துனிசியா நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சி நடத்திய ஜனாதிபதிகளுக்கு எதிராக ஏற்பட்ட கிளர்ச்சி வடகொரியாவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.






வெளிநாடுகளில் உள்ள வடகொரிய அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்களுக்கு நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை எவரும் தகவல் அனுப்பிவிடக் கூடாது என்பதற்காக இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் நாட்டை விட்டு வெளியேறி தென்கொரியாவில் அடைக்கலம் கோருவோருக்கு வெளியில் இருந்து தகவல்கள் கிடைப்பதையும் தடுக்கும் நோக்கத்தில் வடகொரிய அரசு இந்நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும் அண்டை நாடான சீனாவுக்குள் அகதிகளாக செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து வடகொரிய அரசு இத்தகைய தடையை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 ___

No comments: