உலகச் செய்திகள்

.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆராய்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக கொண்டுவரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க அரச உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என இலங்கை வந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான அமெரிக்க உதவி செயலாளர் மரியா ஒட்டேரே ஊர்ஜிதப்படுத்தினார்.



இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாசினை அமுல்படுத்துவது குறித்து தனது விருப்பத்தை தெரிவிக்கவும் நல்லிணக்கத்தை முன்னெக்கவும் பொறுப்புக்கூறல் மனித உரிமை மற்றும் ஜனநாயம் தொடர்பில் பதிலளிக்கவும் இது உதவும் என அவர் குறிப்பிட்டார்.

'ஆணைக்குழுவின் சிபாரிசுகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நான் கலந்துரையாடினேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை அமுல்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருவதாக அவர் எனக்கு உறுதியளித்தார்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவுகளை தொடர்பிலான திட்டங்களை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்' என ஒட்டேரோ தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் நம்பகமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அமெரிக்க அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியான ஒட்டேரோ குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பெண்களின் பாதுகாப்பு தொடர்பிலும் அவர் கரிசனை தெரிவித்தார்.
இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்கு இலங்கை போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.; பொறுப்புக் கூறாலை முழுமையாக ஆராய வேண்டும் என பிரகடணப்படுத்தப்படும் பிரேரணைக்கு ஆதரவளிப்போம் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போதியளவான விடயங்களை கவனத்திற் கொள்ளவில்லை. என்ன நடந்ததென விசாரிப்பது பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் முக்கிய பகுதியகும் என அவர் குறிப்பிட்டார்.



சர்வதேசத்தில் மட்டத்தில் விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும் திட்டம் ஏதாவது அமெரிக்கவிடம் உள்ளதா என வினவியதற்கு, தற்போது அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை பிரேரணை தொடர்பிலேயே கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால் நம்பகமான உள்ளூர் பொறிமுறை ஏற்படுத்தப்படும் என நாம் நம்புகின்றோம் என பிளெக் தெரிவித்தார்.

உள்நாட்டு பொறிமுறையை ஏற்படுத்துவதில் ஏதாவது குறைகள் காணப்படுமாயின் சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்கள் நிச்சயம் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்

'அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையானது தேசிய பிரச்சினைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்களுக்கான அடிப்படைகளை உருவாக்க வேண்டும்.



தற்போது, அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை நல்லமுறையில் நிறைவு பெற அமெரிக்கா உதவும். அவற்றில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாட முடியும்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த பொதுமக்கள் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான அமெரிக்க உதவி செயலாளர் மரியா ஒட்டேரோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர் என பலதரப்பட்டவர்களுடன் பேச்சு நடத்தினர்.


இலங்கை மீது சர்வதேச விசாரணை தேவை என ஐரோப்பிய பாராளுமன்றில் அழுத்தம

இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகள் பொறுப்புக்கூறுதல் தொடர்பாக இலங்கை அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி வரும் நிலையில், ஐரோப்பிய பாராளுமன்றம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் பரிந்துரைகளை ஐ.நா நடைமுறைபடுத்த வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், ஐ.நா பாதுகாப்புச் சபை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய அமைப்புகளுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments: