இலங்கைச் செய்திகள்


பொட்டம்மானின் கட்டளைப்படியே அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்பட்டனர் - கருணா தனது கட்டளையின்படி அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்படவில்லை எனவும் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டம்மானின் கட்டளையின்படியே இந்த பிக்குகள் கொலை செய்யப்பட்டதாக புலிகளின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவரும், தற்போதைய இலங்கை





துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு பாதுகாப்புச் செயலாளர்அங்கீகாரம் வழங்கினார் – விக்கிலீக்ஸ்

துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் அங்கீகாரம் வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.




துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு பாதுகாப்புச் செயலாளர்அங்கீகாரம் வழங்கினார் – விக்கிலீக்ஸ்


துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் அங்கீகாரம் வழங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.


அமெரிக்கத் தூதரக அதிகாரகளினால், அந்நாட்டு ராஜாங்கத்திணைக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓபிளக்கினால் இந்தத் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணி வரும் ஜே.ஸ்ரீரங்காவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் மிகவும் இரகசியமானவை என பிளக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் துணை இராணுவக் குழுக்களுக்கு பணம் வழங்கி வந்ததாக பிளக் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் துணை இராணுவக் குழுக்களுக்குநிதி உதவிகள் வழங்கப்பட்டதாக ஸ்ரீரங்கா குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவலை சில வெளிநாட்டு ராஜதந்திரிகளும் உறுதிப்படுத்தியதாக பிளக் அனுப்பி வைத்த குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், தற்போதைய அரசாங்கம் துணை இராணுவக்குழுக்களுக்கு நிதி உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டதாக ஸ்ரீரங்கா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலாக ஈ.பி.டி.பி. மற்றும் கருணா தரப்பு போன்றோர் தமிழ்வர்த்தகர்களிடம் கப்பம் பெற்றுக் கொள்ள பாதுகாப்புச் செலயாளர் அங்கீகாரம் வழங்கியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே நாட்டின் சட்டம் ஒழுங்கு வெகுவாக பாதித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

கருணா தரப்பும், டக்ளஸ் தரப்பும் தமிழ் சமூகம் மீதுஅடக்குமுறைகளைப் பிரயோகித்து வந்ததாக பிளக் தமது குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளாதகவிக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.


பொட்டம்மானின் கட்டளைப்படியே அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்பட்டனர் - கருணா







தனது கட்டளையின்படி அரந்தலாவ பிக்குகள் கொலை செய்யப்படவில்லை எனவும் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டம்மானின் கட்டளையின்படியே இந்த பிக்குகள் கொலை செய்யப்பட்டதாக புலிகளின் முன்னாள் முக்கிய தளபதிகளில் ஒருவரும், தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொட்டம்மான் உள்ளிடோரே அரந்தலாவ பிரதேசத்தில் பிக்குகளை கொலை செய்தனர். இநத தாக்குதலுக்கு 6 பேர் கொண்ட சிறிய குழு சென்றுள்ளது. நான் அப்போது தொப்பிகல பிரதேசத்திற்கு பொறுப்பான தலைவராக இருந்தேன். கடற்புலிகளுக்கும், புலனாய்வு பிரிவினருக்கும் பொட்டம்மானே நேரடியாக கட்டளைகளை வழங்கினார். ஆயுதப்படைகளை அவர் கட்டுப்படுத்த முடியாது. எது எப்படி இருந்த போதிலும், பிரபாகரன் மற்றும் தமிழ்ச் செல்வன் போன்றவர்களும், பொட்டம்மானின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின்னரே என்னை கிழக்கு மாகாண தலைவராக நியமித்தனர் எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.




கொல்லங்கலட்டியில் பாழடைந்த கிணற்றில் மண்டை ஓடுகள்,எலும்புகள் கண்டுபிடிப்பு




வலிகாமம் வடக்கு கொல்லங்கலட்டி பகுதியில் நீண்டகாலமாகப் பாவனையற்ற கிணற்றைத் துப்புரவு செய்யும்போது கிணற்றிலிருந்து மனித எலும்பு எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. கொல்லங்கலட்டி பகுதி நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த நிலையில் அண்மையில் இந்தப் பகுதிக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தப் பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தினை அண்டியுள்ள வீடொன்றின் உரிமையாளர் வெளிநாட்டிலிருந்து வந்து வளவினை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீட்டின் கிணற்றைத் துப்புரவு செய்யும்போது நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் அதனுள்ளிருந்து மண்டை ஓட்டின் பகுதிகள் மீட்கப்பட்டன.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்குத் தகவல்கொடுக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றுக் காலை இந்தக் கிணற்றை மேலும் துப்புரவு செய்த பொலிஸார் அதனுள்ளிருந்து மேலும் சில எலும்புகளை மீட்டுள்ளனர். 1991 ஆம் ஆண்டு இந்தப்பகுதியிலிருந்து இடம்பெயரும்போது சம்பவம் இடம்பெற்ற கிணற்றிற்கு அருகிலுள்ள வீட்டில் மூன்று முதியவர்கள் இடம்பெயர மறுத்து அங்கேயே இருந்ததாகவும் அவர்கள் பின்னர் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே அவர்களுடைய எலும்பு எச்சங்களாக கூட இவை இருக்கலாமென நம்பப்படுகின்றது.எனினும் இது தெடர்பான விசாரணைகளை காங்சேசன்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இதேவேளை நேற்றுக் காலை சம்பவ இடத்திற்கு வந்த மல்லாகம் நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டார். மேலும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மண்டையோடு மற்றும் எலும்புகளை அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.



No comments: