தமிழ் சினிமா


 

மேக்கப் போடுவதில் ஆர்வம் இல்லை: திரிஷா


திரிஷாவுக்கு படங்கள் குறைந்துள்ளன மூத்த நடிகை என பட உலகினர் ஒதுக்குவதாக ‘கிசு கிசு’ கிளம்பியுள்ளது. கதாநாயகர்களும், அவருடன் ஜோடி சேர விரும்பவில்லையாம். ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக தெலுங்கில் நடிக்கும் ‘தம்மு’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது.

ஆனாலும் புதுப்படம் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்து ரிலீசான ‘பாடிகாட்’ படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இருந்தும் படங்கள் வரவில்லை. இது குறித்து திரிஷாவின் தாய் உமாகிருஷ்ணன் கூறும்போது பாடிகாட் படத்தில் திரிஷாவின் நடிப்புக்கு பரவலாக பாராட்டுகள் குவிந்தன. அடுத்து நல்ல கேரக்டருக்கான கதையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்றார்.

அதே நேரம் திரிஷாவின் போட்டி நடிகைகளான அனுஷ்கா, காஜல் அகர்வாலுக்கு நிறைய படங்கள் குவிகின்றன. திரிஷா தற் போது தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு உள்ளார். அதிக மேக்கப் இன்றி வருகிறார். இது குறித்து திரிஷா கூறும் போது, அழகை மிகைப்படுத்தி காட்ட மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் இல்லை. இயற்கையான தோற்றமே பெண்களுக்கு அழகு தரும். அப்படி இருக்கவே நான் விரும்புகிறேன். கண்களில் மட்டும் மேக்கப் போடுகிறேன். ஆடைகளிலும் எனக்கு பொருத்தமானவற்றையே தேர்வு செய்து அணிகிறேன் என்றார்.


அதுக்குள்ள மாத்திட்டாங்களே…! சினேகா புலம்பல்!!


மற்ற இயக்குனர்களின் சம்மதத்துடன் கோச்சடையானில் நடிக்கலாம் என்று இருந்தேன்; அதுக்குள்ள என்னை மாற்றிவிட்டார்களே… என்று நடிகை சினேகா வேதனை தெரிவித்துள்ளார். நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்யவிருக்கும் நடிகை சினேகா, தற்போது விடியல், முரட்டுக்காளை என இரு தமிழ் படங்களிலும் ஜோஸட்டன்டே ஹீரோ என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களில் நடித்து முடித்ததும் திருமணம் செய்யவிருப்பதாக ஏற்கனவே சினேகா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.இந்நிலையில் ரஜினியின் கோச்சடையான் படத்தில், ரஜினியின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு சினேகாவுக்கு கிடைத்தது. இதனால் திருமண தேதி தள்ளிப்போகலாம் என கூறப்பட்டு வந்தநிலையில், சினேகாவை நீக்கிவிட்டு ருக்மணியை தேர்வு செய்துள்ளனர்.

இது குறித்து சினேகா அளித்துள்ள பேட்டியில், கோச்சடையான் படத்தில் நடிக்க கால்ஷீட் பிரச்னைகள் இருந்தன. நான் நடிக்கும் மற்ற படங்களின் இயக்குனர்கள் சம்மதத்துடன், கோச்சடையான் படத்தில் நடிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதற்குள் என்னை மாற்றிவிட்டனர், என்று கூறியிருக்கிறார்

கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?


ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் உலக நாயகன் கமல் ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகின்றது.
ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் பெயரைச் சொன்னாலே குட்டீஸ் எல்லாம் ஆ, ஊ என்று ஆரம்பித்துவிடுவார்கள். அவர் தனது நடிப்பால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இந்நிலையில் இதுவரை ஹாலிவுட் மற்றும் சீன படங்களில் நடித்த ஜாக்கி சான் முதன்முறையாக கோலிவுட்டில் நடிக்கிறார். கமல் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை இயக்குகிறார் அல்லவா. அதில் நடிக்குமாறு கமல் ஜாக்கியை அணுகியுள்ளார். அவர் ஒப்புக் கொண்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மேலும் அவருக்கு என்ன மாதிரி கதாபாத்திரம் என்ற தகவலையும் கமல் கசிய விடவில்லை.

தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஜாக்கி சான் வந்தார் என்பது நினைவிருக்கலாம். அந்த விழாவில் அவர் கமல் ஹாசனின் நடிப்பை மனதாரப் பாராட்டினார்.
ஊழலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.No comments: