உலகச் செய்திகள்

ஈரானுக்கு மீண்டும் அடி: முகங்கொடுக்க தயாரென ஈரான் அறிவிப்பு
பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு: 25 பேர் பலி

ஈரானுக்கு மீண்டும் அடி: முகங்கொடுக்க தயாரென ஈரான் அறிவிப்பு

5/1/2012
ஐரோப்பிய நாடுகளுக்கான ஈரானின் எண்ணெய் இறக்குமதி மீது ஐரோப்பிய ஒன்றியம் விரைவில் தடை விதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தடையானது முன்னரே தீர்மானிக்கப்பட்ட போதும் படிப்படியாக தற்போது நடைமுறைப்படுத்தப்படுமெனவும் ஐரோப்பிய இராஜதந்திரிகள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதன்காரணமாகவே உலக எண்ணெய் விலை அடிக்கடி தளம்பல் அடைந்ததாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஈரான் நாளொன்றுக்கு 450,000 பெரல்கள் மசகு எண்ணெயினை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.


சீனாவுக்கு அடுத்ததாக ஈரானிடமிருந்து அதிக எண்ணெயினை இறக்குமதி செய்யும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாகும்.

எனினும் இதற்கான மாற்றுவழிகள் தம்மிடம் உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதியின் ஒரு பகுதியினை சீனாவிற்கும், மற்றையதை ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய தம்மால் முடியுமென ஈரான் தெரிவிக்கின்றது.

ஈரானின் யுரேனிய செறிவாக்கல் நடவடிக்கையானது நீண்டகாலமாக மேற்குலக நாடுகளுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவருகின்றது.

எனினும் தமது மின்சாரம் மற்றும் மருத்துவ தேவைகளுக்காகவே யுரேனிய செறிவாக்கல் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக ஈரான் தெரிவிக்கின்றது.

இதற்கு தமது எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஈரானின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவை மட்டுமன்றி சர்வதேச நிறுவனங்கள் ஈரானில் முதலிடுவதையும், நிதி நிறுவனங்கள் எவ்வித தொடர்புகளையும் பேணாத வண்ணம் ஈரானை முடக்கியுள்ளன.

இதன் மற்றுமொரு கட்டமே இத்தடையெனத் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் அழுத்தமே ஐரோப்பிய ஒன்றியம் இத்தடையை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

நன்றி வீரகேசரி
 
 
பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு: 25 பேர் பலி

கவின்
5 /1/2012

தென் பிலிப்பைன்ஸில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100 க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

அந்நாட்டின் மின்டானாஹோ தவுப்பகுதியில் உள்ள பண்டுகான் நகரத்திலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அங்கு தற்போது மீட்புப் பணிகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதியில் வாழும் அநேகமானோர் தங்கம் அகழ்வதை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள்.

அங்கு சட்டவிரோதமான முறையில் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுவதனால் இத்தகைய அனர்த்தங்கள் அடிக்கடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி வீரகேசரி


No comments: