முதன் முதலாக அப்பிளின் தந்தைக்கு ஒரு சிலை

 .

அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகரும், தொழில்நுட்ப உலகில் தனி முத்திரை படைத்து ஜாம்பவானாகத் திகழ்ந்தவருமான ஸ்டீவ் ஜொப்ஸ் புற்று நோயுடன் கடந்த பல மாதங்களாகப் போராடி வந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி உயிரிழந்தார்.

தொழில்நுட்ப உலகிற்கு இது மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படுகின்றது.

இந்நிலையில் அவரை கௌரவிக்கும் முகமாக ஸ்டீவ் ஜொப்ஸின் உருவச் சிலையொன்று புடாபெஸ்ட் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஹங்கேரி தலைநகரான புடாபெஸ்ட்டிலுள்ள சயன்ஸ் பார்க் ஒன்றிலேயே இச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஸ்டீவ் ஜொப்ஸுக்காக முதன் முதலாகத் திறந்து வைக்கப்பட்ட சிலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கிராபி சொப்ட் என்ற நிறுவனமே இச்சிலையைத் திறந்துவைத்துள்ளது. குறித்த நிறுவனத்திற்கு ஆரம்பகாலத்தில் ஸ்டீவ் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெண்கலத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலை 6.5 அடி உயரம்கொண்டதுடன் ஹங்கேரிய நாட்டு சிற்பி ஹேர்னோ டொத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

அப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸிற்கென இதுவரை சிலை எதுவும் திறந்து வைக்கவில்லை.

இனிமேலும் திறந்துவைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதிலும் ஸ்டீவ் ஜொப்ஸை மறந்து விட்டதா அப்பிள் 










ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பான எமது முன்னைய செய்திகள் சில


Nantri :virakesari.lk

அப்பிள் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகினார் ஸ்டீவ் ஜொப்ஸ் 

அப்பிள் உற்பத்திகள் மூலம் உலகை மாற்றிய ஸ்டீவ் ஜொப்ஸ் தனது 56 ஆவது வயதில் மரணம்_

ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்நாளில் முக்கிய தருணங்கள் (பட இணைப்பு) 

ஸ்டீவ் ஜொப்ஸ் உலகிற்கு விட்டுச் சென்ற இறுதி வடிவமைப்பு: ஐ போன் 5 ? 

ஸ்டீவ் ஜொப்ஸை மறந்த அப்பிள்? 
___


na


Nbmnbb

No comments: