வெள்ளிக்கிழமை

.பசிபிக் சமுத்திரத்தில் சமோவா என்ற மிகச் சின்னத் தீவு ஒன்று இருக்கிறது. சர்வதேச தேதிக் கோடு இதற்கு மிகச் சமீபமாகச் செல்கிறது. கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் கோட்டில் இது அமெரிக்கா பக்கம் இருக்கிறது. இந்தக் கோட்டை தாண்டும்போது ஒரு நாள் கூடுகிறது; அல்லது குறைகிறது. அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் ஒருவர் இந்தக் கோட்டை தாண்டியதும் ஒரு முழு நாளை கடந்துவிடுவார்.

இந்த ஆண்டு, 2011 டிசெம்பர் 29 வியாழக்கிழமை சர்வதேச தேதிக்கோட்டை மாற்றி வரைகிறார்கள்.  சமோவா அவுஸ்திரேலியா பக்கம் போய்விடும். டிசெம்பர் 29, வியாழக்கிழமை சமோவாவில் நடு இரவு வந்து அது விடியும்போது டிசெம்பர் 31, சனிக்கிழமையாக இருக்கும். ஒரு முழு நாள் மறைந்துபோகும்.

180,000 பேர் சனத்தொகை கொண்ட சமோவாவில் அன்று ஒருவரும் பிறக்க மாட்டார்கள். இறக்க மாட்டார்கள். பள்ளிக்கூடம் இல்லை. அலுவலகம் இல்லை. சினிமா இல்லை. விளையாட்டு இல்லை. தூக்கம் இல்லை. சமையல் இல்லை. சாப்பாடு இல்லை. வெள்ளிக்கிழமையே இல்லை. உலகத்து நாடுகள் எல்லாம் 365 நாட்களைக் கொண்டாட இந்த வருடம் சமோவாவில் மட்டும் 364 நாட்கள்தான்.

Nantri:Amuthu.net

No comments: