_
27/10/2011
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து இலங்கை மீது சர்வதேச போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மெல்கொலம் ப்ரெசெர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுநலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை பேர்த் சென்றுள்ள நிலையில் அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை குறித்து முறையான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டுமானால் அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச போர்க் குற்ற நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த அவுஸ்திரேலியா ஆதரவு அளிக்காமை குறித்து அதன் முன்னாள் பிரதமர் விமர்சித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களைக் கருத்திற் கொண்டு போர்க் குற்ற விசாரணையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் மென்மையான போக்கை கடைபிடிக்குமானால் அவுஸ்திரேலியா முன்னர் தெரிவித்த கூற்றுக்களை மறந்து வருகிறது எனத் தான் நினைப்பதாக அவர் கூறியுள்ளார்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment