MONA LISA வை சந்தித்தேன் -

.
                                                                                 நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
                                                                                         
இன்று உலகிலேயே அதிகப்படியாக பேசப்படும் ஓவியம் LEONARDO DA VINEI  என்ற 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓவியரது MONA LISA ஓவியமே. இந்த ஓவியம் Paris தொல்பொருட்காட்சி சாலை Louvre இல் உள்ளது. அண்மையில் நான் Paris சென்ற போது Louvre காட்சி சாலையில் MONA LISA ஓவியத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. LEONARDO வரைந்த வேறு பல ஓவியங்களும் அங்கிருந்தது. இந்த ஓவியம் மட்டும் ஏன் பிரபலமானது. மற்ற ஓவியங்களில் காணாத அழகை இதில் காணவில்லை. அப்படிஇருக்க இதுமட்டும் ஏன் உலக பிரசித்தி பெற்றது என்ற கேள்வி எழுந்தது.
ஓவியங்கள் இன்று உலகசந்தையில் கோடி கணக்கில் விலைப்படும் பொருள். ஆனால் அவை அத்தனை விலை மதிப்புள்ளவையா? நிட்சயமாக இல்லை என்கிறார் ஒரு பிரபல ஓவிய வியாபாரி. ஓவியத்தின் விலை எத்தனை பிரபலமான ஓவியர் அதை வரைந்தார், அல்லது அதன் உரிமையாழர் யார் என்பதை உலக சந்தையில் ஓவியத்தின் விலையை நிர்ணயிப்பது.

பிரபல கோடீஸ்வரர்  Rock Fallar  காரியாலயத்தில் தொங்கவிட்டிருந்த ஓவியத்தை மத்திய கிழக்கு இழவரசர் பல கோடி கொடுத்து வாங்கினார். காரணம் Rock Fallar   காரியாலய வாயிலில் அந்த ஓவியம் இருந்தது என்பதே காரணம். இந்த பின்னணியில் தான் நாம் MONA LISA ஓவியத்தையும் நோக்கவேண்டும். இது ஒன்றும் உலக அதிசயம் அல்ல. அவரது புன்னகைதான் அதிகபப்டியாக பேசப்படுவது. ஆனால் Leonardo Da Vinci யின் வேறுபல ஓவியங்களிலும் அந்த புன்னகையை காணமுடியும்.

இன்று வரைக்கும் இந்த MONA LISA  விற்கு MODEL ஆக இருந்தவர் யார் என்பது குழப்பமானதாகவே உள்ளது. Florentine வியாபாரி ஒருவரின் மனைவியை DA VINCI வரைய ஒப்பந்தமாகி வரைய தொடங்கினார். ஆனால் அதை கையளிக்கவில்லை எனபடுகிறது. இருந்தும் இதை யாரும் தீர்க்கமாக கூறமுடியவில்லை. வேறு சிலரோ DA VINCI  யே தன்னை பெண் தன்மையுடன் வரைந்த ஓவியம். இந்த ஓவியத்தில் ஆண் தன்மை இளையோடுகிறது என்கின்றனர். France யை சேர்ந்த ஓவியர் Mareel Duchamp 1919 இல் MONA LISA ஓவியத்தில் மீசை தாடி வரைந்து "She's got a hot ASS" அதாவது கழுதை என திட்டினார். எந்த ஒரு சிறந்த கலைஞனுக்கும் இந்த MONA LISA  ஓவியம் வெறுப்பை வரவிற்கும் என்பதில் சந்தேகம் கிடையா. காரணம் அழகிய வியப்பூட்டும் பல ஓவியங்களின் மத்தியில் இதுவும் ஒரு அழகிய ஓவியமே. அவ்வாறு மீசை தாடி வரைந்ததும் MONA LISA  தோற்றம் ஆணாகவே மாறிவிடும் விந்தையாயும் காணலாம். இவ்வாறு இருக்க பேர் அழகி என்றால் MONA LISA எனலாமா?


அமரிக்க பொப் கலைஞர் Andy Warhol MONA LISA என்ற தனது தயாரிப்புக்காக பல MONA LISA  படங்களை SCREEN PRINTS  மூலம் பல இடங்களில் பரப்பினார் இன்றோ உலகின் பல பாகங்களிலும் MONA LISA  வரையப்படுகிறார். கணக்கற்ற புத்தகங்கள் விளம்பரங்கள் தபால் அட்டைகள் TEE SHIRTS என 20ம் நு}ற்றாண்டின் மிகைப்படுத்தப்பட்ட விந்தை இது.

மாறிவரும் மனித சிந்தனையும் MONA LISA  என்ற ஓவியத்தை வௌ;வேறு வகையாக நோக்குவதை உணரலாம். 17ம் நு}ற்றாண்டுவரை MONA LISA  ஒரு தத்துரூபமான சிறந்த ஓவியம் மிகைப்படுத்தல் இல்லாது ஒருவரை வரைந்த ஒவியம் என கொள்ளப்பட்டது. பிற்பாடு LEONARDO DA VINCI பன்முக மேதை, பறக்கும் யந்திரம் முதல், நீர் அடியில் மனிதன் போவதற்காக உடையில் விந்தை பொறியியலாளர் விஞஞான மேதை, கட்டட கலை நிபுணர்.

முதலிலே எண்ணி செயல்படுத்திய மேதை என்ற இந்த பின்னணியில் MONA LISA  மேதையின் ஓவியம் என கொள்ளப்பட்டது. 1911 இல் PARIS LOUVRE காட்சி சாலையில் இருந்து, ஒரு இத்தாலியனால்  திருடப்பட்டு மீட்டு, மீண்டும் LOUVRE கொணரப்பட்டது. உலக பத்திரிகை யாவிலும் படத்துடன் வெளியானது. இச்செய்தி அதுவரை கலை பொக்கிஷமாக  இரசிக்கப்பட்ட MONA LISA  உலக பிரபலமானார்.

அதையடுத்து LONDON விளம்பரத்தாரர் SMILING LADY  என தனது விளம்பரத்தில் பயன்படுத்துகிறார். இவ்வாறாகவே இந்த MONA LISA  பிரபலமானது. இப்போ MONA LISA  கலை பொக்கிஷம் அல்ல. நான் பாரிஸ் போன போது அவர் JAPAN போக போகிறார் என்றார்கள்.
ஓவியர்  LEONARDO DA VINEI

உலக பிரபலங்களில் அவரும் ஒருவர். நான் PARIS போனபோது அவரை சந்திக்க முடிந்தது. பாவம் HOUSE ARREST பலத்த கண்ணாடி கூண்டிலே இரு காவலர்கள் பக்கத்திலே நிற்கிறார்கள். இப்படியுமா ஒரு ஒவியம் இம்சைபட வேண்டும். LEONARDO இந்த ஓவியத்தை இறுதிவரை தன்னுடனேயே வைத்திருந்தாராம். அவர் இத்தாலியில் இருந்து FRANCE க்கு போகும் போதும் இந்த ஓவியத்தை தன்னுடன் எடுத்து போய் உள்ளார். தனது ஓவியம் இப்படி இம்சை படுகிறது என் அவர் அறிந்தால் பாவம். எத்தனை வேதனைப்படுவார்.


No comments: