இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 22 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்


.  
 மெல்பனில்
      இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின்
       22 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்


 இலங்கையில் முன்பு நீடித்த போரினால், பெற்றவர்களை, குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு மெல்பனிலிருந்து கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக நிதியுதவி வழங்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 22ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டமும் - தகவல்  அமர்வு- ஒன்றுகூடல் இராப்போசன விருந்தும் எதிர்வரும் 15-10-2011 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மெல்பனில் வேர்மன் சவுத் சமூக மண்டபத்தில் நடைபெறும்.
  நிதியத்தின் நடப்பாண்டு தலைவர் மருத்துவ கலாநிதி மதிவதினி சந்திரானந்த் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 2010-2011 ஆண்டுகளுக்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
 இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு. அம்பாறை, திருகோணமலை ஆகிய தமிழ் மாவட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மேலும் பல மாணவர்களின் நிதிக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிதியத்திற்கு கிடைத்துள்ளன. அவற்றை பரிசீலனை செய்து உதவ விரும்பும் அன்பர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
 இராப்போசன ஒன்றுகூடலில் திரட்டப்படும் நிதி கல்வி நிதியத்தின் நிருவாகச்செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் நிதியத்தின் உறுப்பினர்களின் மாதாந்தக்கொடுப்பனவுகள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் உதவும் அன்பர்கள் இதுவரையில் இல்லாமல் தொடர்ந்து நிதியுதவி பெறும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாகவும் கல்வி நிதியத்தின் பரிபாலன சபை அறிவித்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு:-      
               
சபீனா உலகநாதன் மதிவதினி சந்திரானந்த் வித்தியா ஸ்ரீஸ்கந்தராஜா
 
( செயலாளர்)                (தலைவர்)                (நிதிச்செயலாளர்)

 04222 58124                       (03) 9708 1218                 04048 08250

No comments: