உலகச் செய்திகள்

*  சோமாலியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 70க்கும் மேற்பட்டோர் பலி

* சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு: 17 பேர் பலி

* ஐ.நா. சபையில் இணையத் துடிக்கும் பலஸ்தீனத்திற்கு முதல் வெற்றி




சோமாலியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 70க்கும் மேற்பட்டோர் பலி


4/10/2011
சோமாலியத் தலைநகர் மொகடிசுவிற்கு அருகில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அரசாங்க அமைச்சுக்கு அருகில் சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் டிரெக் வண்டியொன்றிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றதாக இச்சம்பவத்தை நேரில் பார்த்த அந்நாட்டவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் 70க்கும் மேற்பட்டோரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் பாடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பலியானவர்களில் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களும் அடங்குவதாகவும் பெருமளவான சடலங்கள் எரிந்த நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி
 
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு: 17 பேர் பலி _


5 /10/2011
தென் மேற்கு சீனாவில் நிலக்கரி சுரங்கமொன்றில் எரிவாயு கசிவால் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 16 சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.

லிஹிவா நகரிலுள்ள அன்பிங் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த வெடிப்பு அனர்த்தத்தின் போது இரு சுரங்கத் தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

சீனாவில் இவ்வாறான நிலக்கரி சுரங்க வெடிப்புச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்த்க்கது
நன்றி வீரகேசரி


ஐ.நா. சபையில் இணையத் துடிக்கும் பலஸ்தீனத்திற்கு முதல் வெற்றி
6/10/2011

ஐ.நா. சபையில் உறுப்பு நாடாக இடம்பெற முயற்சி செய்யும் பலஸ்தீனத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த ஐ.நா.வின் யுனெஸ்கோ செயற்குழு கூட்டத்தில் பலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு ஆதரவாக 40 நாடுகளும் எதிராக 4 நாடுகளும் வாக்களித்தன.

இதன்போது 14 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

இந்த முடிவுகள் இம்மாத இறுதியில் ஐ.நா. பொது சபையில் சமர்ப்பிக்கப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி








No comments: