ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்களுக்கு கல்வி மந்திரியின் சான்றிதள்கள்

 .


NSW Community Languages Schools இனால் 05.09.2011 இல் நடாத்தப்பட்ட Minister’s Award for Excellence in Student Achievement 2011 நிகழ்ச்சியில் ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய மாணவர்களான செல்வி அபிராமி ரவீந்திரன் மேற்பிரிவில் Commended Award இனையும், செல்வி கேசவி விக்னராஜா கீழ்பிரிவில் Highly Commended Award இனையும் பெற்றுள்ளார்கள். இவர்கள் 2010ம் ஆண்டின் சிறந்தமாணவர்களாக ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையத்தில் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



 மேலும் இவ்வைபவத்தில் ஒரேஒரு கலைநிகழ்ச்சியாக ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் Community Languages Schools இனது அழைப்பினை ஏற்று தமிழ் பீட்ஸ் (Tamil Beats) எனும் நடனநிகழ்வினை Dr.யசோதரபாரதி சிங்கராயரின் பயிற்சியில் மேடையேற்றி UNSW மண்டபம் நிறைந்த அனைத்து இன மக்களின் பாராட்டைபெற்றது என்பதனை தமிழ்க் கல்வி நிலையம் அறியத்தருகின்றது. 



.இந்நடன நிகழ்ச்சியின் ஒருபகுதியினை ஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலைய இணையத்தளத்தில் http://www.tsch.org.au/web/photo-gallery/videogallery.html   பார்க்கலாம்.



செய்தி: திரு.த.சச்சிதானந்தம். தமிழ்க் கல்வி நிலையம் ஹோம்புஷ்


1 comment:

Anonymous said...

சான்றிதழ்கள் பெற்ற பிள்ளைகளுக்கு எனது பாராட்டுகள். தமிழ்க்கல்வி நிலையத் தகவலில் தலைப்பிலேயே தமிழ்க்கொலை (சான்றிதள்) செய்திருக்கிறீர்கள். உடனடி திருத்தம் தேவை. - கேஎஸ்டி