நான் ரசித்த Aithra's Musical Night - செ.பாஸ்கரன்

.
தொடர்ச்சி 
.

ஞாயிறு மாலை ரம்மியமான மாலைப்பொழுது விஜேய் யேசுதாஸ் பாட்டு நிகழ்சிசி இருக்கின்றது என்பதே ஒரு இன்ப நினைவாக இருக்கிறது. சிம்பொனி என்ரரைனேர்ஸின் Aithra's Musical Night ,  5.30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்க இருக்கின்றது அதற்கு முனபே போய்விடவேண்டும் என்று செல்கின்றோம்.
கார் நிறுத்தும் போதே 5.35 ஆகிவிட்டது வழமை போல் அப்போதுதான் என்னைப்போல் பலரும் உள்ளே வருகின்றார்கள். சற்று மன நிறைவோடு உள்ளே சென்று அமர்கின்றேன். பிரம்மாண்டமான The Hill Center மண்டபம் நிறைந்து கிடக்கிறது. 5.50 மணிக்கு விளக்குகள் அணைகின்றது வழமைக்குமாறாக பட்டுப்பாவாடை கட்டிய ஒரு சிறு பெண் குழந்தை மேடைக்கு வருகின்றது. வந்தவர் "நான்தான் வாணிஜெயராம் " என்று கூறி நிறுத்துகின்றார். ஜயையோ வாணிஜெயராம் இவ்வளவு சின்ன குழந்தையாக மாறி விட்டாரா என்று எண்ணும்போது மீண்டும் அந்த சிறுமி "நான்தான் வாணிஜெயராம் அவர்களையும் விஜே யேசுதாஸ் அவர்களையும் ஹரிச்சரன் அண்ணா அவர்களையும் அறிமுகம் செய்வதற்கு சின்மயி அக்காவை அழைக்கின்றேன்" என்று மழலைக் குரலில் கம்பீரமாக கூறி முடிக்கின்றார். வித்தியாசமான அந்த அறிமுகத்தை தந்தவர் வேறுயாருமல்ல விஜயாள் விஜே அவர்கள்தான். புதியதோர் அறிவிப்பாளர் அறிமுகமாகியுள்ளார்.




அதனைத் தொடர்ந்து பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் சின்மயி மேடையில் தோன்றி தான் பாடகி மட்டுமல்ல சிறந்த அறிவிப்பாளரும் கூட என்பதை சிட்னி மக்களுக்கு நேரடியாக காண்பிக்கின்றார். இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்துவிட்டு  இலங்கைத் தமிழர்கள் தான் தங்களையெல்லாம் உலகம் எங்கும் அழைத்து நிகழ்ச்சி செய்கின்றார்கள் என்று நன்றி கூறி இலங்கையில் கொல்லப்பட்ட மக்களுக்காக ஒரு நிமிட அஞ்சலி செலுத்த கோருகின்றார். அதைத்தொடர்ந்து ஒரு தெய்வம் தந்த பூவே என்ற அவரின் பாடலோடு இசை நிகழ்சி ஆரம்பமாகின்றது. சின்மயிக்கே உரிய அற்புதமான குரலில் பாடல் ஒலித்தோய கரகோசம் மண்டபத்தை அதிர வைக்கிறது.


அடுத்து விஜேயின் குரல் கணீர் என்று கேட்கிறது "என்னைத் தெரிகிறதா" என்ற குரல் மட்டும் மண்டபம் எங்கும் ஒலிக்கிறது. மீண்டும் ஒலித்த அந்தக் கேள்வியைத் தொடர்ந்து தீபாவளியாய் என்ற பாடல் கேட்கிறது. மண்டபத்தின் பின்புறம் கரகோசம் ஒலிக்க பின்பக்கம் திரும்புகின்றோம் மண்டபத்தின் பின்புறமிருந்து விஜே பாடிக்கொண்டு வருகின்றார் துள்ளவைக்கும் இசையுடன் கூடிய அந்தப் பாடலும் அவரின் குரலும் ரசிகர்களை கொள்ளை கொள்ளுகின்றது. அந்தப்பாடல் முடிந்ததும் விஜே ஹரிச்சரணை அழைக்கிறார் அவரும் துளித்துளியென மழையாய் வந்தாளே என்ற பாடலோடு அனைவரையும் இசைக்கேற்ப ஆடவும் வைக்கின்றார்.


அந்தப்பாடல் முடிந்தவுடன் சின்மயி வாணி ஜெயராமைப்பற்றி குறிப்பிடுகின்றார் அவர் கூறிமுடிக்கவும் விஜே தனது அற்புதான குரலில் தந்தையாரின் பாடலான கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் என்று தந்தையாரான கே.யே.யேசுதாஸின் குரலைப் போன்றே பாடி அழைக்க இசை உலகின் அரசியான வாணிஜெயராம் அவர்கள் மேடைக்கு வர மண்டபமே அதிர கைதட்டல்கள் கிழம்பியது. விஜே ஜேசுதாஸ் வாணிஜெயராமின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு உள்ளே போகின்றார். நாமும் நாற்காலியில் சாய்ந்து உட்காருகின்றோம்.




வாணி ஜெயராம் சபையை வணங்கிவிட்டு 20பது வருடங்களாக என்னை அழைத்தார்கள் ஏதோ காரணங்களால் வரமுடியாமலேயே போய்விட்டது தற்போது கதிர் அழைத்தபோதுதான் என்னால் வரமுடிந்திருக்கின்றது. உங்களையெல்லாம் பார்க்கின்ற பாக்கியம் கிடைத்திருக்கின்றது முதல் தடவையாக சிட்னியில் நிற்கிறேன் என்று கூறியதும் கரகோசம் மண்டபத்தை மீண்டும் அதிரவைத்தது. தெடர்ந்து பேசியபோது அவரின் அடக்கம் அவரின் பண்பு என்பன தெரிந்தது. மிகப்பெரிய பாடகியாக இருந்தவர் எந்தவித கர்வமும் இல்லாமல் பணிவாக நடந்து கொண்டது என்னை மிகவும் கவர்ந்திருந்தது.

வாணி என்றால் மன்னன் மயங்கும் மல்லிகை என்றல்லவா நம் மனங்களில் பதிந்திருக்கின்றது முதல் பாடலாக அவர் அந்தப்பாடலையே பாடத் தொடங்கியது மகிழ்வாக இருந்தது. 70 பதுகளில் ஓயாமல் ஒலித்த பாடல் இலங்கை வானொலியில் தினம்தோறும் கேட்ட குரல் இன்று அவர் பாடியபோது  சுருதி சற்றுக் குறைவாக காணப்பட்டது. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இவ்வளவு அருமையாக பாடுகின்றாரே என்ற எண்ணம்தான் மேலோங்கியது. நான் எதிர்பார்த்து போன அளவிற்கும் மேலாகவே அது அமைந்திருந்தது. அந்தக்கால நினைவுகளோடு பின்னிப் பிணைந்த நம் வாழ்வின் தொடர்புகள் காட்சியாய் தெரிய பாடல் காதை நிறைத்துக்கொண்டிருந்தது.
தொடர்ந்து நானேநானா என்ற பாடலும் அதைத் தொடர்ந்து எஸ் பி பாலாவுடன் பாடிய பாடலான ஒரே நான் என்ற பாடலை ஹரிசரனோடு சேர்ந்தும் பாடினார். ஹரிசரண் பாலாவிற்கு ஈடுகொடுத்துப் பாடியது அருமையாக இருந்தது. திரைஇசைப்பாடல்களில் இப்போது நல்ல பாடல்களை தந்து கொண்டிருப்பது ஹரிசரனும் கார்த்திக்கும் அந்த வகையில் சிட்னி மேடையிலும் ஹரிசரண் வாணியுடன் இணைந்து கொண்டது பொருத்தமாக இருந்தது.

மனதைத் தொடும் படியான ஒரு பாடலாக அமைந்தது “அந்த மானைப்பாருங்கள் அழகு” என்று வாணி ஜெயராம் பாடிய பாடல் இந்தபாடலை விஜே யேசுதாசுடன் இணைந்து பாடினார். இந்தப்பாடலுக்கு பக்க வாத்தியம் வாசித்த புல்லாங்குழல் இசைக் கலைஞர் நிகில் ராம் அவர்களை பாராட்டியே தீரவேண்டும். வரிக்குவரி அற்புதமான இசையை பரவவிட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்ந்து “காட்டுச் சிறுக்கியே” என்ற பாடலை ஹரிசரணும் “லேசாப்பறக்குது மனசு” என்ற பாடலை சின்மயி ஹரிசரணோடும் சேர்ந்து பாடினார்கள். உற்சாகமாக ஆரம்பித்த இந்த பாடல்கள் சபையை கவர்த பாடல்களாக இருந்தாலும், இருந்து கொண்டே கையை ஆட்டி நடனம் ஆடுவதற்கு சிட்னி மக்களை  உற்சாகப் படுத்தியது கல்லில் நாருரிக்கும் முயற்சியாகவே இருந்தது. ஹரிசரண் சிட்னி ரசிகர்களை தமிழ்நாட்டு ரசிகர்கள் போல் பார்த்துவிட்டார் என்று எண்ணத் தோன்றியது. சிட்னி ரசிகர்களோ ஏலுமென்றால் ஆடவைத்துவிடு பார்ப்போம் என்று இருந்ததுபோல் இருந்தது.

வாணிஜெயராமின் ஏழுஸ்வரங்களும் ஒரு பாடலுக்குள் சங்கமித்ததென்றால் அது “ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்” என்ற பாடலாகத்தான் இருந்திருக்கும். மிக அற்புதமாக இருந்தது. முடிவில் எழுந்த கரவோசை அதை பறைசாற்றியது. அதே வேளை வாணியின் “மேகமே மேகமே” பாடலில் சுருதி குறைத்துப் பாடியதுபோல் தோன்றியதோடு வேகம் குறைவாகவும் இருந்தது. வாணியின் பாடல்களுள் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் அது. அன்றைய இரவு மேகம் பொழியவில்லைப் போல் தோன்றியது. விட்டதை பிடிப்பதுபோலவும் நினைவாலே சிலைசெய்து மண்டபத்துள் வைத்ததுபோலவும் அந்தமான் காதலியின் பாடலான “நினைவாலே சிலை செய்து” என்ற பாடல் மிக அருமையாக இருந்தது. மீண்டும் காற்றோடு விளையாடிய நிகில் ராமின் புல்லாங் குழலுக்கும். தபேலா கலைஞர் விக்ரமனுக்கும் பாராட்டுக்கள். நாம் இளைஞர்களாக இருந்த காலத்தில் மேசையில் தபேலா வாசித்தது இந்தப்பாடலுக்காகத்தான் இருக்கும். இந்தப்பாடலை கவனித்துக் கேட்டால் ஒவ்வொரு பல்லவிக்கு பின்பும் தபேலா வாத்தியம் அற்புதமாக வாசிக்கப்பட்டீருக்கும். அதை மிக அழகாக செய்திருந்தார் விக்ரமன்.
அதன் பின் அண்பிளக் என்ற வகையில் விஜே ஹரிசரண் சின்மயி சேர்ந்து செய்தது. நன்றாக இருந்தாலும் பொருத்தமில்லாத இசைகளை கலந்து செய்தது போன்ற ஒரு தன்மையை கொடுத்திருந்தது. பாடல் தெரிவை மாற்றியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்  போல் தோன்றியது. தொடர்ந்து பல பாடல்கள் பாடப்பட்டாலும் “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது,, நிலா நீ வானம் காற்று , ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம், கல்யாணத் தேன்நிலா , இரவா பகலா”  இப்படியான பாடல்கள் மனதைக் கொள்ளை கொண்டது. சின்மயி நூறுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் அவரது எத்தனையோ நல்ல பாடல்கள் இருக்கின்றது. அவைகளில் சிலவற்றைப் பாடியிருக்கலாம் ஏனோ பாடவில்லை. ஹரிசரண் நல்ல பாடல்களை தந்தது நிறைவாக இருந்தது. அவரது குரல் எல்லாப்பாடல்களுக்கும் பொருத்தமான அழகிய குரல். வாணிஜெயராமிடம் தான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று கூறியபோது ரசிகரகளின் சிரிப்பொலி அவரையும் சிரிக்கவைத்தது. வளர்ந்து வரும் நல்ல பாடகர். விஜே யேசுதாஸ் தந்தையாரின் பாடல்கள் சிலவற்றை பாடுவார் என எதிர்பார்த்த எமக்கு சற்று ஏமாற்றமாகவே இருந்தது. அவர் பாடிய கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் என்ற இரண்டு வரிகளே அரங்கை அதிர வைத்தது. சில பாடல்களையாவது பாடியிருக்க வேண்டும். அவர் பாடிய பாடல்கள் எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. அத்தோடு மாற்றி மாற்றி போட்ட உடைகளும் அதற்கு ஹரிசரன் கூறிய பகிடியும் ரகிச்சக் கூயெதாக இருந்தது. ஒட்டுமொத்தமாக ஜந்து மணித்தியாலங்கள் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சியில் ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருந்த இசைக் குழுவினருக்கு ஒரு பாராட்டு.
ஒரு மிகப்பெரிய இசை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்த கதிர் அவர்களும் சிம்பொனி என்ரரைனேர்சும் நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கிய பிரமிட் வீடியோ அன்ட் ஸ்பைஸ் நிறுவனர் லிங்கம் அவர்களும் பாராட்டப் பட வேண்டியவர்களே. அறிவிப்பாளராக வந்த சின்மயி முதல்பாடலோடு தொலைந்து போனது ஏன் என்று விளங்கவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு நல்ல ஆளுமையுள்ள அறிவிப்பாளராக தோன்றும் சின்மயி இதையும் நெறிப்படுத்தியிருக்கலாம். அது இல்லாமல் எல்லோரும் கதைத்ததும் அடுத்தது என்ன என்பதில் அவர்களே குழம்பி நின்றதும் ஒரு தரமான நிகழ்ச்சிக்கு ஒரு குறையாகவே இருந்தது. இது மட்டுமல்ல பாடகர்களை கௌரவிக்கும் போது வந்தவர்களைக் கொண்டே வந்தவர்களைப்பற்றி பேசவைத்ததும் சற்று சங்கடமாக இருந்தது. முதலில் வந்து நல்வரவு செய்த விஜயாளாளைக் கொண்டுகூட செய்திருக்கலாம். அல்லது சிம்பொனிசார்பாக யாருமொருவர் செய்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.
இறுதியாக ஒரு நல்ல இசைக்குழு, நல்ல பாடகர்கள் இவர்களை வைத்துக்கொண்டு ஒலிஅமைப்பு வழமைபோல் அமைந்து விடுமோ என்று பயந்த நமக்கு பத்மஸ்ரீயும் அல்லூரும் அருமையான ஒலிஅமைப்பை செய்ததற்கு பாராட்டப் படவேண்டியவர்களே. நீணட நாட்களுக்குப் பின்பு ஒரு நல்ல இசை நிகழ்வை பார்த்த திருப்தியோடு வீடுதிரும்ப கூடியதாக இருந்ததற்கு மீண்டும் சிம்பொனி என்ரரைனேரஸ் பாராட்டப் படவேண்டியவர்களே.  






21 comments:

Anonymous said...

It was an absolute treat to watch Vani Jeyaram perform live! What a voice! The talents of Vijay Jesudas, Chimaye, Haricharan and not forgetting the musicians, added class to the show. Thanks to the organisers who gave us, Sydney siders an opportunity to witness so much talent on the stage.....Well Done

It was a lovely gesture to have the little girl open the show who spoke very good Tamil. Good on her!

Anonymous said...

singer Haricharan was the best. It was a waste bringing Vani Jeyaram. Chinmayee and Vijay sang well to but the band was bad. Some of the songs were played by the cd. Bad sound controlling.
Why do these Indian musicians cheat us by playing some songs as Kareoke. waste of money. could have listened to it on my car cd player.
good effort by the organisers.

Anonymous said...

As far as the singers and the band are concerned it is really the best show. I think the sound was really good and this is one of the shows they controlled and managed well without any mess up. As far as I know they did not sing any song on -1 track as stated here. All the singers, band members and the sound engineers did an excellent job in this show. This is purely my opinion. Vani Jeyaram's voice and the song selections were really good. As a person she is very down to earth. The way she bent and acknowledged the appreciation of the crowd itself would have shown her character. A remarkable and a memorable show in Sydney brought by Symphony Entertainers and Pyramid Spice and Video. I am sure they will do a good job in Melbourne too.

Madhura

Anonymous said...

Vani Jeyaram is a good person no problem there. But the show did not need her and she couldn't sing properly. Its time she retired.
One good example of kareoke is Kilimanjaaro song. Madhura ...you need to observe more before commenting.
At least there were another 1 or 2.
Melbourne audience is not stupid. They will find out.
Anyway a good effort by Se and PS.

Quote: I think the sound was really good and this is one of the shows they controlled and managed well without any mess up....
Are you sarcastically referring to the ATBC?

Anonymous said...

பொழுது போக்கான நிகழ்ச்சிதான். தரம் இருக்கவில்லை. சில பாடல்களை வாத்தியக் கலைஞர்கள் வாசிக்காமல் கரோகே இடப்பட்டது உண்மை.
ஹரிசரண் தரமாக பாடினார். அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் ஒன்றுமில்லை, அவை தரமானதாகவும் இருக்கும்படி தயாரிக்க வேண்டும். நான் ரசித்தேன் ....கவலையுடன்.....கொடுத்த காசுக்கான தரம் இருக்கவில்லையென.
தேவையில்லாத announcer என்கிற ஒருவரை தவிர்த்தது நன்று.
இளையவன்

Anonymous said...

After confirming only I made that comment. Anyway it is your opinion and as I said the comment I wrote was purely my opinion. By the way you have mentioned that the show did not need her etc....I am sure you knew before you went to the show that it was a show of Vani Jeyaram and also her age. Then what made you to go? Anyway all the five fingures are not the same, like wise taste also differs. When 90% of the people who attended liked the show means it is a successful one for SE and PS.

Also regarding the sound problems, it will be good if you can give your feed back to the Sound Engineers, they will be able to improve in the future if they can rectify it in the future. I think writing a comment with the name carries more value to it rather than to write a comment without a name and in false name.

Thaks
Madhura

kirrukan said...

<<>>

<<>>
தமிழ் முரசு ஆசிரியர் குழுவினர் காலில் விழுதலையும்,குனிந்து பணிவாக நடப்பதையும் ரொம்பத்தான் விரும்புகிறார்கள் போல இருக்கு....


நான் நிகழ்ச்சிக்கு போகவில்லை தமிழ் முரசு மூலமும் சென்று வந்தவர்கள் மூலமும் நிகழ்ச்சியை பற்றி அறிந்து கொண்டேன்...சிலர் நல்லம் என்றார்கள் 40 வயதை கடந்தவர்கள் நல்லம் என்றார்கள்...30 வய‌துக்கு குறைந்தவர்கள் குற்றம் கண்டார்கள்

Kiri said...

திரைப்படங்களுக்கு 40 வருஷங்களுக்கு மேல் பாடிவருபவர், 60 வயதைக் கடந்த ஒரு பாடகி இப்படியான சிறப்பைக் கொண்டவரிடம் இருந்து இன்றைய நிலையில் 15 வயசுக்குமரியின் குரலைத்தேடும் ஞானங்களைக் கண்டு சிரிப்பதா அழுவதா? வாணி ஜெயராம் என்ற பழம்பெரும் பாடகிக்கான கெளரவமாகத் தான் பலர் இந்த நிகழ்வுக்கு வந்தார்கள். 70 டொலரோ அதிக பட்சம் 500 டொலரோ எறிந்து விட்டு இந்தப் பெரும் பாடகி ரிட்டார்ட் ஆகவேண்டும் என்றெல்லாம் பொது மேடையில் கருத்துவைப்பதை அநாகரீகமாகத் தான் பார்க்கத் தோன்றுகிறது. கொடுத்த காசுக்கு மேலாக 5 மணி நேரம் இசை நிகழ்வு நடந்தது, வாணி ஜெயராம் தன்னுடைய வயதைத் தாண்டிச் சிறப்பான நிகழ்வைக் கொடுத்திருந்தார். கூடவந்த இளம் பாடகர்களும் தங்கள் பங்கை செவ்வனே செய்தார்கள். இதுவே என் கருத்து. நல்ல விமர்சனம் என்பது கலைஞனையும் ரசிகனையும் புடம்போட வைக்கும். ஆனால் அது விமர்சனமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே. ஆனால் நேரெதிரானஅநாகரீகமான வாழ்க்கைச் சூழலில் தான் வாழவேண்டிய நிர்ப்பந்தம். எல்லாவற்றிலும் நொள்ளை சொள்ளை பார்த்துக் கொண்டு திரிவதும் பலருக்குச் சுகம்.

Anonymous said...

I am sure the show was a success because of Vanni Jeyaram. The quality of her singing has not decreased in any way because of her age. The programme catered for all age groups. Infact, the selection of songs by the 3 vibrant young singers were from more recent movies which I thought would have pleased our younger generation. If we want to be 'picky', we will always find something to find fault with. All in all I think (so did many many others) it was a great show.

Anonymous said...

We went to support SE and not Vani jeyaram or any one else. We do not have to disclose our names. If this is not acceptable then Tamilmurasu would not have had a choice of going anonymous in the "comment as" drop down menu.
We don’t need to disclose our real names also. That is our privacy.
What makes you think that 90 percent enjoyed it? Did you do a survey? Going just on the basis of applause is not absolute judgment.
Anyway will continue to support SE no matter what the quality of the program is.
But it is our duty to pinpoint the downfalls so that it may be used as a quality checking tool in the future.
Just plain praise from people like you does not support that purpose.

Quote:“After confirming only I made that comment”…..I sympathize with you…some one is lying to you.
Take care,
Anonymous

Kiri said...

நிகழ்ச்சி நடத்தினவைக்கு சப்போர்ட் பண்ணப்போனால் பிறகு ஏன் நொள்ளை சொள்ளை, வாணியின் குரலைப்பற்றிக் கவலை?

Anonymous said...

ஒருவருக்கு சப்போர்ட் என்பது வேறு எனது அபிப்பிராயம் என்பது வேறு. குறைகளை சுட்டிக்காட்டுவது என்பது வேறு.
புரியவில்லையா?

Kiri said...

ஆரம்பத்தில் இருந்தே புரிந்தது ஆனால் இப்படியான தரத்தில் தான் குறைகள் சுட்டிக்காட்டப்படும் என்றால் வாழ்க உமது பணி

Anonymous said...

பணி தொடரும்

Anonymous said...

6 மணித்தியாலம் என்று Quantity பார்க்காமல் எத்தனை பாடல்கள் Qualityஆக இருந்தது என்று பாருங்கள். 2 மனித்தியாலமானாலும் பரவாயில்லை, தரமானதாக இருக்க வேண்டும். மீண்டும் கூறுகிறேன் அன்று கலக்கியவர் ஹரிசரண் தான்.

வாணி ஜெயராம் நல்ல பாடகி தான். அனால் இப்போது அல்ல, அப்போது. இசைக்கலைஞர்களின் தரம் போதாது. புல்லாங்குழலும் தபேலாவும் வாசித்தவர்கள் தரமானவர்கள்.

Anonymous said...

என்ன மதுரா எழுத்து தொனியில் இருந்து அந்த பெயர் போட திராணி இல்லாத உங்கள் நண்பரை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லையா? மிகவும் கவலைக் கிடமான விடயம். வானொலியிலும் மேடையிலும் அடாவடித் தனத்தை நடாத்திக் கொண்டு இருக்கும் உங்கள் நண்பரின் கருத்துகள் தான் அவை. இன் நிகழ்ச்சியைப் பற்றி பல நொள்ளை சொள்ளை கூறிக்கொண்டு திரியும் இவரை இன்னமும் இனம் கண்டுகொள்ளவில்லையா....
மதன்

Anonymous said...

Haha Well said Mathan ITO did review No one didn't complain all said good about the program. Keep up your good work SYMPHONIE ENTERTAINERS And all Promotors and sponsors.

MP

kirrukan said...

போர போக்கைப்பார்த்தால் வாணிஜெயராமுக்கு சிட்னியில கோயில் கட்டினாலும் கட்டுவினம் போலகிடக்கு ...குறைஞ்சது ஒரு ரசிகர்மன்றம் ஆவாது வைக்கதான் வேணும் போலகிடக்குது

Anonymous said...

Good idea! I am sure Vaani Jeyaram has a fan club in India. Don't see any reason why there shouldn't be one in Sydney and it won't be hard getting members to join.

Anonymous said...

Melbourne இல் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த நிகழ்ச்சியை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. சிட்னியில் பாடப் பட்ட பாடல்களே பாடப்பட்டன. ஆனால் எல்லாப் பாடல்களும் பாடப் படவில்லை. அம்மா என்றழைக்காத பாடலை விஜய் ஜேசுதாஸ் அங்கே பாடியிருந்தார். காட்டுச் சிறுக்கி, சகான சாரல் தூவுதோ, காத்தாய் பறக்குது மனசு போன்ற பாடல்கள் அங்கு விடுபட்டுவிட்டன.

சிட்னி இசை ரசிகர்கள் எழுந்து நின்று வாணி ஜெயராமை கரகோஷத்துடன் வரவேற்றதைப் போன்று Melbourne ரசிகர்கள் செய்யாதது சற்று மனதை நெருடும் படியாக இருந்தது. இந்த மாதிரியான Legendary பாடகர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கும் பண்பு நமது சிட்னி ரசிகர்களிடம் இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நேரம்மின்மை கருதி கலைஞர்களை கௌரவிக்கத்தவறவில்லை Melbourne நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர்கள். நீங்கள் கூறியது போன்று அந்த புல்லாங்குழல் மற்றும் தபேலா போன்ற இசைக் கருவிகளை வாசித்தவர்களைப் பற்றி Melbourne நகர ரசிகர்களும் மிகவும் பாராட்டி இருந்தார்கள். ஒலி அமைப்பு சிட்னியில் மிகவும் சிறப்பாக அமைந்தது நிகழ்ச்சியை சிட்னியில் மேலும் மெருகு ஊட்டியதற்கு இன்னும் ஒரு காரணியாக அமைந்ததில் எந்த வித சந்தேகமும் இல்லை. மொத்தத்தில் நல்லதொரு இசை நிகழ்ச்சியை நடாத்திய ஒருங்கமைபாளர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

நன்றி
மாலா

kirrukan said...

quote:சிட்னி ரசிகர்களோ ஏலுமென்றால் ஆடவைத்துவிடு பார்ப்போம் என்று இருந்ததுபோல் இருந்தது.

சிட்னிடமிழ்ஸா கொக்கா?

எங்கன்ட சனம் இதில கொஞ்சம் உசார் கண்டியளோ...40 வயசுக்கு மேல் ஆடி விழுந்து போனால் எப்படி இன்சுரஸ் கிளைம் பண்ணுறது அதுதான் சனம் அமைதியாக இருந்து பார்த்து போட்டு வந்திருப்பினம் ...