எங்கிருந்தோ
எங்கிருந்து
வந்தோம் நாங்கள்
எங்கு போவோம்-இனி
எங்கு போவோம்
எழுதா விதியின் பயணம்-இங்கே
எழுதித் தொடர்கிறதே
எதிலிகளாய் தமிழன் வாழ்வு
தெருவில் கிடக்கிறதே
காந்திதேசமும் எம்மை
கண்டு கொள்ளவில்லை-அதன்
கபட நாடகமும் தீர்ந்த
பாடும் இல்லை
தூரதேசம் ஏதும் எமக்கு
துணைக்கு வருமோடா
தூக்கி எம்மை தாலாட்டும்–என்று
தூங்கலாமோடா
சிறையில் இருந்து வந்தவரா
சீரழிந்து வாழ்ந்தவரா
கறைகள் ஏதும் படிந்தவரா-தமிழர்
”கல்லா” இனத்தை சேர்ந்தவரா
கப்பல் ஓட்டிக் காட்டிய தமிழன்
கடல்கள் பலவும் தாண்டிய தமிழன்
கல்வித் தலைமை தாங்கிய தமிழன்
கண்டங்கள் பலவும் ஆண்டவன் தமிழன்
இன்றோ.... இன்றோ ....
எங்கிருது வந்தோம் நாங்கள்.
எங்கு போவோம்-இனி
எங்கு போவோம்.
No comments:
Post a Comment