பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்

.
பாகம் 5

விரயம்:

அதே போலவே பணத்தை வீணாக்காதீர்கள். சில மாணவர்கள், ஹோட்டலில் சாப்பிடுவதிலும், சீட்டு விளையாடுவதிலும், சூதாடுவதிலும் பணத்தை விரயம் செய்கிறார்கள். பணத்தை வீண் செலவு செய்வது மிகத்தீமையானது. உங்கள் வேலையை நீங்களே செய்யுங்கள். யாரிடமும் நீங்கள் சார்ந்திருக்காதீர்கள். நேரம் கிடைக்கும் போது உங்கள் துணிகளை நீங்களே துவைத்துக் கொள்ளுங்கள். நீங்களே துவைக்க முடியும்போது இதற்காக துணி வெளுப்பவரிடம் தரவேண்டிய அவசியம் ஏன்? உங்கள் தந்தையின் பணத்தை விரயம் செய்ய உங்களுக்கு உரிமையில்லை.

காலம்தான் கடவுள். அதனால் தான் இறைவனை ‘காலய நமஹ’ கால காலாய நமஹ, காலதர்ப்ப தமனாய நமஹ, காலாதீதாயநமஹ’ எனப் போற்றுகிறோம். காலத்தை விரயம் செய்வது வாழ்க்கையை வீணாக்குவதற்குச் சமம். உலகியல் சௌகரியங்களுக்காக உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அதற்குப் பதில் இறைவன் நாமத்தைச் சொல்லி அதன் இனிமையில் தெய்வீகத்தை உணருங்கள்.


சக்தியையும் வீணாக்காதீர்கள். சக்திதான் இறைவன். புனிதமற்ற பார்வையால், தீய எணண்ங்களால், தீயவற்றைக் கேட்பதால், அதிகமாக பேசுவதால் என இன்றைய இளைஞர்கள் அதிகமான சக்தியை இழக்கிறார்கள். நம் உடலை ஒரு ரேடியோவுக்கு ஒப்பிடலாம். ஆதிகமாக அதைப்பயள்படுத்தினால் அதிலுள்ள “ஊநடட” கள் தங்கள் சக்தியை சீக்கிரம் இழந்துவிடுகின்றன. அதைப்போல, நீ அதிகமாகப் பேசினால், உனது சக்தியை இழந்து விடுகிறாய். அதனால்தான் பண்டைய முனிவர்களும், மகரிஷிகளும் மௌனத்தைக் கடைப்பிடித்தனர். ஆகவே வாரம் ஒரு முறையாவது மௌனத்தைக் கடைப்பிடித்து சத்தியைச் சேகரியுங்கள். நான் அடிக்கடி மாணவர்களுக்கு எடுத்துக் கூறுவேன். குறைவாகப்பேசி, நிறைவாகப் பணி செய்யுங்கள். அப்போதுதான் உள்ளிருக்கும் சக்தி வளருகிறது. இதன் காரணமாகவே, சன்னியாசிகளும், மகரிஷிகளும் அனேக ஆன்மீக சாதனைகளைக் கடைப்பிடித்தனர். உள்ளிருக்கும் சக்தி வளரும்போது உங்களது நினைவாற்றல் அதிகரிக்கிறது. மனம் நன்கு குவியும். சுpல மாணவர்களால், ஒரு கணம்கூட மனதைக் குவித்துச் செயல்பட முடியாததால், பரீட்சை சரியாக எழுதமுடிவதில்லை.

கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் ரேடியோ செய்திகளையும், கிரிக்கெட் வர்ணனைகளையும், விடாமல் கேட்கிறார்கள். இவ்வளவு கவனச்சிதறல்களை உடன் வைத்துக் கொண்டு எங்ஙனம் அவர்களால் நினைவாற்றலை நிலைநிறுத்திக் கொள்ளமுடியும்?

குருகுலம்:

பண்டைக்காலத்தில் மாணவர்களுக்க கல்வி, குரு குலங்களில் கற்பிக்கப்பட்டு வந்தது. மாணவர்கள்தான் கற்பதனைத்தும் நினைவிலேயே தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அக்காலத்தில் பேப்பர், பேனா, பென்சில் போன்ற எதுவும், ஆசிரியர்கள் கற்பிப்பதைக் குறிப்பெடுத்துக் கொள்ள உதவியாகக் கிடையாது. அவர்கள் கற்றதெல்லாம், ஆசிரியர் கூறுவதைக் கவனமாகக் கேட்பதினால் மட்டுமே. எனினும், அவாகளால் உயர்ந்த கல்வியறிவு பெறமுடிந்தது. நவீன கால மாணவாகளுக்கு பேப்பர்கள், பேனாக்கள் என்ற வசதிகள் இருந்தும் பாடங்களில் கவனம் செலுத்தாதாலும் நினைவாற்றல் இல்லாதாலும் அதிகமாக தேர்ச்சி யடைய முடியவில்லை.

இளைஞர்களே! யுவதிகளே!

உங்களுடைய பௌதிக, மனோரீதியான, ஆன்மீகமாக, சக்திகளைப் பாதுகாக்கும் போது நீங்கள் தெய்வீகமாகி விடுகிறீர்கள். உங்கள் தேகம் நல்ல செயல்களில் ஈடுபடட்டும். மனம் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளட்டும். புத்தி, தெய்வீகத்துடன் ஐக்கியமாகட்டும். தேகம், மனம், புத்தி ஆகியவையெல்லாம் வெறும் கருவிகளே. இந்தக் கருவிகளை இயங்கச் செய்யும் அந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள். நவீன கல்வி முறையனைத்தும் Computer (கணினி) ஐ அடிப்படையாகக் கொண்டுள்ளது. தற்போது எங்கு பார்த்தாலும் கம்ப்யூட்டருக்குச் சற்று அதிகமான மதிப்பு இருக்கிறது. நீங்கள் வெறும் Computer அல்ல. Computer. இருந்திருந்து கம்ப்யூட்டர் என்ன செய்யும்? நீங்கள் முன்னேற்பாடாக “Programme” பண்ணியதால் தான் அது இயங்குகிறது. அதனால்தானாக இயங்கவோ, எதையும் செய்யவோ முடியாது. கடவுள் பரிசாகக் கொடுத்த மூளைதான் உண்மையில் நிஜயமான கம்ப்யூட்டர். ஆதனை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். துரதிருஷ்டவசமாக, நவீன மனிதன் மிஷின்களை நம்புகிறானே தவிர, இறைவனின் பரிசான மூளையை நம்புவதில்லை. தற்போதெல்லாம் சாதாரண கணக்கு போடுவதற்குக் கூட மக்கள் ‘Calculator’ களை நம்பும், தாழ்ந்த இழிநிலை வந்துவிட்டது. நீங்கள் உங்களை, உங்கள் ஆற்றலை நம்பவேண்டும். இறைவனிடமிருந்து மட்டும் உதவி பெறுங்கள். வேறு எவரிடமிருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள். இறைவனை, அவரது கருணையை, உதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை நடத்துங்கள்.

Help Ever Hurt Never

வயாச மகரிஷி கூறினார்.

பரோபகார புண்யாய்
பாபாய பர பீடனம்

(மற்றவருக்கு உதவி செய்தல் புண்ணிய காரியம், பாவம் என்பது பிறரைத் துன்புறுத்துதல்). இதுதான் அனைத்துப் புனித நு}ல்களின் சாரம். உங்களுக்கிடையே தவறான எண்ணங்களுக்கும், சச்சரவுகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். ஒற்றுமையே மிகச் சிறந்த வலிமை. ஆகவே ஒற்றுமையாகச் செயலாற்றுங்கள்

எங்கே ஒற்றுமையோ, அங்கே தூய்மையிருக்கிறது.

எங்கே தூய்மையோ, அங்கே தெய்வீகம் இருக்கிறது

உங்கள் இதயம் தூயதாக இருந்தால், இறைவன் உங்களது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார். உதாரணமாக, உங்களுக்குப் பேனா வேண்டுமென்றால், இறைவனுடம் தீவிரமாகப் பிராத்தனை செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய பையில் பேனா வந்து சேரும். தூய இதயம் இருப்பின், உங்களால் சாதிக்க முடியாதது என்று எதுவும் கிடையாது. கடவுளைப் புரிந்து கொள்ளுதல் என்பது இயலாது. உங்களைப்பற்றியே உங்களால் புரிந்து கொள்ள முடியாக போது, இறைவனை எவ்வாறு புரிந்து கொள்ள இயலும்? அன்று பேசிய உமா பாரதி, இங்கு மக்கள் வருவது இறைவனை தெரிந்து கொள்ள, எனக்கூறினார். அது தவறான கருத்து. இறைவனைப் பற்றிப்புரிந்து கொள்ள இங்கே வரத் தேவையில்லை. முதலில் உங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளுங்கள். எவராலும் என்னை புரிந்து கொள்ள முடியாது.

No comments: