தமிழ் சினிமா

.
வானம்
"மாப்பிள்ளை"
வானம்

அன்பே சிவம் என்பதை உணர்த்து அதை யோசித்து ஐந்து கதைகளை ஒரே திரைக்கதையின் மூலம் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் க்ரிஷ்.

தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற வேதம் படத்தின் ரீமேக் தான் இந்த 'வானம்'.

ஏழையாக பிறந்தாலும் எப்படியாவது பணக்கரானாக ஆகிவிட வேண்டும் எனபதற்காக பணக்கார வீட்டு பெண்னை காதலிக்கும் சிம்பு, இசைத் துறையில் சாதனை செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட பரத், பட்ட கடனுக்காக கூலி வேளை செய்யும் தனது மகனை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தனது கிட்னியை விற்கும் சரண்யா பொன்வன்னன், பாலியல் தொழிலாக இருந்தாலும், அதை சொந்தமாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் அனுஷ்கா, பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட பாதிப்பால் வீட்டை விட்டு ஓடிப்போகும் தம்பியை தேடி அலையும் இஸ்லாமியரான பிரகாஷ்ராஜ் என



வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் இந்த ஐந்து கதாபாத்திரங்களும் காலத்தின் சூழ்நிலையில் ஒரு இடத்தில் சந்திக்க நேரிடுகிறது. அப்படி அவர்கள் சந்திக்கும் சூழ்நிலை என்ன, அங்கு நடந்தது என்ன என்பதுதான் படத்தின் முடிவு.

ஐந்து வெவ்வேறு கதைகளை ஒரே திரைக்கதையில் சுவாரஸ்யமாக பயணிக்க வைப்பது சாதாரண விஷயமில்லை. இதை இயக்குநர் க்ரிஷ், படத்தின் முதல் பாதியில் செய்ய தவறியிருந்தாலும், இரண்டாம் பாதியில் சரியாகவே செய்திருக்கிறார்.

ஐந்து கதைகளும் ஒவ்வொரு விதத்தில் உணர்வு பூர்வமான விஷயங்களை சொன்னாலும், தனது மகனின் படிப்பிற்காக கிட்னியை விற்கும் தாயின் கதை மற்றும், தீவிரவாதிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்பதையும், அதே சமயத்தில் இஸ்லாமியர்களின் மீது உள்ள தவறான பார்வையையும் விளக்கிய கதை மனதில் அழுத்தமாக பதிகின்றது.கொமெடி, காதல், சோகம் என அனைத்து இடத்திலும் அபாரமாக தேர்வு பெற்றிருக்கிறார் சிம்பு.

இப்படிப்பட்ட வேடத்தில் நடித்தற்காக சிம்புவை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும், அதே சமயத்தில் இதுபோன்ற கதையம்சம் கொண்ட படத்தில் கூட தலை புராணம், பஞ்ச் டயலாக் என மாஸ் ஹீரோ மோகத்திற்குள் செல்வது கதாபாத்திரத்திற்கு பின்னடைவை ஏற்படுகிறது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்குள் கச்சிதமாக பொருந்தியிருக்கும் பரத், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் அவருடைய கதாபாத்திரத்தின் பாதிப்பு பெரிதாக இல்லை. கவர்ச்சியில் காட்டியிருக்கும் தாரளத்தை நடிப்பில் காட்டவில்லை அனுஷ்கா.

மகனுக்காக கிட்னியை விற்கும் தாயாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனும், அவருடைய மாமாவாக நடித்திருக்கும் அந்த பெரியவரும் அளவான நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் வேடத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், சில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் ஏற்படும் சலிப்பை தனது கொமெடி மூலம் சரி செய்திருக்கிறார் சந்தானம்.

யுவனின் இசையில் எவண்டி உன்ன பெத்தான் என்ற பாடல் ஆட்டம் போடவைக்கிறது, மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். படத்தில் இடம்பெறும் ஐந்து கதையமைப்பும் சுவாரஸ்யம் என்றாலும், அதில் குறிப்பிட்ட கதாபாத்திரங்களின் நீலமான மற்றும் அதிகமான காட்சியமைப்புகளின் மூலம் படத்தின் முதல் பாதி படம் பார்ப்பவர்களை சற்று வெருமையடைய வைத்தாலும், இரண்டாம் பாதியில் ரசிகர்களை அமைதியாக்கி புகழாரம் வாங்குகிறார் இயக்குநர்.

நன்றி விடுப்பு

 "மாப்பிள்ளை"


இருபது வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக் தான் இந்த மாப்பிள்ளை. வீடு விட்டால் கோயில் என்று பக்திப்பழமாக இருக்கும்

தனுஷ் மீது கோடீஸ்வரி மனிஷாவின் மகள் ஹன்சிகாவிற்கு காதல் வருகிறது.

ஏற்கனவே மனிஷாவின் மகனுக்கும் தனுஷின் தங்கைக்கும் காதல்- கர்ப்பம் என்று சைடில் இன்னொரு கதையும் ஓடுகிறது. வெள்ளை சொர்ணக்காவான மனிஷா கொய்ராலா, இந்தக் கல்யாணத்தை எதிர்ப்பார் என்று பார்த்தால், அவர் தனுஷை வீட்டோடு மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார். காரணம் பக்திப் பழமான தனுஷ், தனக்கு அடங்கி இருப்பார் என்று தான்.

ஆனால் கல்யாண ஏற்பாடுகள் முடிந்து விட்ட நிலையில் தனுஷ் ஒரு பொறுக்கி என்று தெரிய வருகிறது. ஆத்திரமடையும் மனிஷா, தன்னுடன் ஒரே பிசினஸில் இருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தியின் மகனுக்கு மகளைக் கொடுக்க திட்டமிட, தனுஷ் அதை முறியடித்து ஹன்சிகாவை மணமுடிக்கிறார். ஆத்திரமடையும் மனிஷா, தனுஷிடம் மகளின் மனதை மாற்றி, இருவரையும் பிரிப்பேன் என்று சவால் விடுகிறார். இடையில், முடிவில் யார் ஜெயித்தார்கள் என்பதை கொஞ்சம் மொக்கைத்தனமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

தனுஷ் உங்க மாமனாரு கிட்ட ட்ரைனிங் எடுத்து இந்த படத்தில் நடித்திருக்கலாம். அந்த பழைய மாப்பிள்ளையில் உங்க மாமனாரு அப்படியே சிகரெட்டை நாக்கில் வைத்து மடித்து, உள்ளே செலுத்தி, மீண்டும் வெளியை எடுத்து புகையை விடுவார். அட! அட! தனுஷுக்கு பீடியை கூட புடிக்க தெரியவில்லை. அவ்வப்போது தன்னையே கிண்டல் செய்யும் வசனங்களால் அந்தக் கேரக்டரை தனக்கு ஏற்றதாக மாற்றிக் கொண்டிருக்கிறார் தனுஷ். நல்ல 'பிரெஷ் பீசான' கொடைக்கானல் ப்ளம்ஸ் பழம் போல் இருக்கிறார் ஹன்சிகா மோத்வானி. தனுஷை விரட்டி விரட்டி காதலிக்கிறார். கொஞ்சம் பெரிய, ஆனால் குழந்தைத்தனமான முகம், நல்லா எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கக்கூடிய முக அமைப்பு, வெள்ளாவியில் வெளுத்த கலர், வெள்ளந்திச் சிரிப்பு என்று கலக்கலான அறிமுகம் ஹன்சிகா. தமிழனுக்குப் பிடித்தமாதிரி எல்லா அம்சங்களுடன் ஓரளவு ரவுண்டாக ஹன்சிகா இருப்பதால், தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று நம்பலாம்.

படத்துக்குப் பெரிய மைனஸ் பாயிண்ட் மனிஷா கொய்ராலா தான். கொஞ்ச வருஷத்திற்கு முன் இந்தப் படத்தை எடுத்திருந்தால் ஸ்ரீவித்யாவையே நடிக்க வைத்திருக்க முடியும். ஸ்ரீவித்யாவிடம் இருந்த கம்பீரம், மனிஷாவிடம் மிஸ்ஸிங். அதுவும் க்ளோஸ்-அப் காட்சிகளில் பார்க்கவே சகிக்க முடியவில்லை. பத்து வருடங்களுக்கு முன் வந்த 'பாபா'விலேயே பாட்டியாகத் தெரிந்தவர் அவர். படத்திற்கு முதுகெலும்பே அந்தக் கேரக்டர் தான். அது அடிவாங்கியதில், படமே உட்கார்ந்து விடுகிறது.

இருந்தும் நம்மைத் தியேட்டரில் உட்கார வைப்பவர்கள் இருவர். முதலாமவர் விவேக். 'படிக்காதவன்' மாதிரியே இதிலும் வடிவேலுவைக் காப்பி அடித்தே நடித்துள்ளார். அது உங்களுக்குப் பிடித்திருந்ததென்றால், இந்தப் படத்துக் காமெடியும் பிடிக்கும். விவேக்கும் அவரது நண்பர்கள் குரூப்பும் வசனங்களில் கலக்குகிறார்கள். ஆரம்பக்காட்சியில் "நமிதா ரசிகர் மன்றத் தலைவராக அறிமுகம் ஆகி உடல் மண்ணுக்கு, உயிர் நமிதாவுக்கு. முடிந்தால் உடலும் நமிதாவிற்கே" என்று சொல்லும்போது தியேட்டரே அதிர்கிறது. முதல் அரைமணி நேரம் இவர் தான் ஹீரோவோ என்று நினைக்கும் அளவிற்கு தனுஷை பக்திப் பழம் என்று கூறி டம்மி ஆக்கியுள்ளனர். படத்தில் நிறைய இடங்களில் ரசிக்க வைக்கிறார். ஜோசியராக படம் முழுக்க வரும் மனோபாலாவும் சிரிக்க வைக்கிறார்.

படத்தில் ஒரு ஆறுதல், காட்சிக்குக் காட்சி ரீமேக் என்ற பெயரில் சுடாமல் மெயின் ஸ்டோரியை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வில்லன் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கைப்புள்ள மாதிரி வண்டி மையில மீசை வரைஞ்சிருந்தப்போவே மைல்டா டவுட் வந்திச்சு. இவரு காமெடி பீஸா இருப்பாரோன்னு? மூணு மணி நேரத்துல சத்தியமா க்ளைமேக்ஸ்ல அவரு பண்ணின காமெடிக்கு சிரிப்பை அடக்க முடியல. ஜே.பி. என்ற பெயரில் போலி தொழிலதிபராக வேடமிடும் விவேக்கிடம் - மிகப்பெரிய தொழில் அதிபர் மனிஷா கொய்ராலா ஏமாறுவதாகக் காட்டுவது சிறுபிள்ளைத்தனம். இதற்கு நித்தியானந்தா செக்ஸ் வீடியோ காட்சியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

எல்லாமே வலுக்கட்டாயமான திணிப்பாக தெரிகிறது. மணிசர்மாவின் இசையில் அறிமுகப் பாடலாக ஒரு முருகர் பாடலைப் போட்டிருக்கிறார். நன்றாக உள்ளது மற்ற பாடல்களும் ஓ.கே. புதிய பாடல்களை விட 'என்னோட ராசி' ரீமிக்ஸ் ஓ.கே ரகம். பழைய பாட்டைக் கெடுக்காமல் அப்படியே கொடுத்திருக்கிறார். இயக்குநர் சுராஜும், சன் டிவியும் காமெடியை மட்டுமே போதும் என்று நம்பிக் களமிறங்கி இருக்கிறார்கள்.

நடிகர்கள்: தனுஷ், ஹன்சிகா மோத்வானி, மனிஷா கொய்ராலா, மனோபாலா, விவேக், பாண்டு, ஆஷிஷ் வித்யார்த்தி, ராஜா
இசை: மணிசர்மா, இயக்கம்: சுராஜ், தயாரிப்பு: கலாநிதி மாறன்

நன்றி தினக்குரல்

No comments: