மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

61. கடமை

கடமையே கடவுள், பணி புரிதலே   வழிபாடு: மிக சிறுபணியாக இருந்தாலும் அது கடவுளின் திருவடிவில் சார்த்த பெற்ற ஒரு மணி மலரே.

62. சிறந்த சேவை
ஒரு நல்ல முன் மாதிரியானவனாக வாழ்ந்து காட்டுவதே சேவைகளில் எல்லாம் மிகச் சிறந்த சேவை ஆகும்.

63. உண்மையான உற்றார் உறவினர்

உண்மையே தாய்! (சத்யம் மாதா)
மெய்யறிவே தந்தை! (பிதா ஞானம்)
தருமமே உடன்பிறந்தவன்! (தர்மோ பிரதா)
கருணையே நண்பன்! (தயா சகா)
அமைதியே மனைவி! (சாந்தம் பத்னி)
பொறுத்தலே மகன்! (சஷமா புத்ர:)

- இந்த அறுவர் மட்டுமே ஒவ்வொருவரின் உற்றார் உறவினர் ஆவார்.


64. எதற்கு முதலிடம்

கடவுளுக்கே முதலிடம்:
உலகிற்கு அடுத்த இடம்:
தனக்குக் கடைசி இடம்!
65. அபரிகிரகம் - வேண்டாமை

ஒழுங்குக் கட்டுப்பாட்டில் (டிசிப்ளின்) ஐந்தாவதாக வருவது ‘அபரிகிரகம்’ ஆகும். இதன் பொருள் யாதெனில், பிறரிடம் இருந்து எந்த ஒரு பொருளையும் ஏற்றுக்கொள்ளா திருத்தல். உங்களுடைய பெற்றோரிடம் இருந்து பரிசுகள் அல்லது பிறபொருட்களைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு எல்லாவித உரிமைகளும் உண்டு. நீங்கள் உங்கள் பெற்றோர்களால் உண்டாக்கப்பட்பவர்கள், எனவே அவர்கள் எதைக் கொடுத்hலும் அவர்களிடமிருந்து அதனை ஏற்றுக் கொள்ளலாம்.

‘அபரிகிரகம்’ என்பது சில நுண்மையான பாதிப்புகளை தாக்கங்களை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, உங்கள் மாமனாரிடம் இருந்துகூட பரிசுப்பொருட்களை வாங்கிக் கொள்வது என்பது முறையானது அன்று: அல்லது மாமனாரின் பிள்ளைகளிடம் இருந்து, ஏன்? ஒருவனுடைய சொந்தச் சகோரனிடம் (உடன்பிறப்பு) இருந்து கூட ஒருவன் எதனையும் வாங்கிக் கொள்ளக்கூடாது! இந்த உறவினர்களிடமிருந்து எந்த ஒரு பரிசுப் பொருளை வாங்கினாலும் சரி, அதற்குச் சமமான பொருளை நீங்களும் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு உங்களுக்கு உண்டு! இன்று, ‘அபரிகிரகம்’ என்ற விதியானது, அப்பட்டமாக மீறப்படுகின்றது!

எடுத்துக்காட்டாகப் பையன்கள் படிப்பை முடித்ததும் திருமணம் செய்து கொள்கின்றனர்: திருமணத்தின் போது ‘வரதட்சணை’ (டவ்ரி)யைப் பெற்றுக் கொள்கின்றனர். இது மிகமிகத் தவறானது. ஆதனை ஒரு பாபச்செயல் என்றே கூறலாம் . ஒரு பெண், மிகச்சிறந்த முறையில் நன்றாக வளர்க்கப்பட்டவள், திருமணத்தின்போது ஒர் இளைஞனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றாள். அதுவே ஒரு பெரிய பரிசுதான்! ஏன் ஒருவன், ‘மணப்பெண்’ணுடன் கூடப் பணமும் வேண்டும். என்று கேட்க வேண்டும்? பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் பெண்ணுக்கு என்ன கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்களோ அவற்றைக் கொடுக்கலாம். ஆனால், மணமகன் எதனையும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கவோ, ஏற்றுக்கொள்ளவோ கூடாது. இத்தகைய மனப்பாங்குதான், பிறர் கொடுக்கும் பரிசுப் பொருட்களின் பால் ஒருவனுக்குக் கட்டாயம் இருக்க வேண்டியது!



No comments: