உலகச் செய்திகள்


யார் இந்த ஒசாமா? (ஒரு சிறப்புப் பார்வை) _


அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

யார் இந்த ஒசாமா?

பிறப்பு: 1957,சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை.

பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார்.

1979 -சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான் தலைவர்களை பாகிஸ்தானில் வைத்து சந்தித்தார், பின்னர் ஆப்கானுக்காக நிதித் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார்.1984 -தனது உல்லாச விடுதியை அமைத்து, (பாகிஸ்தான் எல்லை) அங்கிருந்து தன் கண்காணிப்புகளை ஆரம்பித்தார்.

ஆப்கானில் தனது முகாம்களை அமைத்தார்.

சூடானில் சிறிது காலத்தின் பின்னர் தனது இருப்பிடத்தை முழுமையாக ஆப்கானிஸ்தானுக்கு மாற்றிக்கொண்டார்.

1990-1991 அமெரிக்கா மீதான தனது எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தார் (வளைகுடா யுத்தத்தின்போது)

1994 சவூதி அரேபியா இவரது பிரஜாவுரிமையை பறித்துக்கொண்டது.

1996 இவர் பட்வா என்ற மதச்சார்பான அறிக்கையை விடுத்தார், அதில் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்படவேண்டியவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

1998 – கென்யா மற்றும் தன்சானியா நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டுத்தாக்குதல்.

அமெரிக்காவுக்கு எதிராக அணி திரளுமாறு இஸ்ரேல், சவூதி நாடுகளுக்கு அழைப்பு விடுத்தமையும் தனது தொடர்புகளை விஸ்தரித்துக்கொண்டமையும்.

2001 – அமெரிக்காவில் அமைந்துள்ள உலக வர்த்தக மையங்களின் மீது விமானத் தாக்குதல் - இதுவே மேற்குலக எதிர்ப்புக்கு பிரதான காரணமாக அமைந்தது.

அதன்பிறகு அமெரிக்காவை எச்சரிக்கும் பல்வேறு வீடியோ காட்சிகள் ஒசாமாவால் ஊடகங்களினூடாக வெளியிடப்பட்டன.

ஒசாமாவைத் தேடும்பணியில் அமெரிக்கப்படைகளுடன் பிரித்தானிய படைகளும் இணைந்துகொண்டன.

2011 – ஒசாமா அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தொகுப்பு: சுஜீவகுமார்
நன்றி வீரகேசரி

ஒசாமாவை இலக்குவைத்தபோது பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருந்தோம் - ஒபாமா தகவல் _


ஒசாமா பின்லேடனை இலக்குவைத்து தம் நாட்டு படையினரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருந்ததாகவும் அவர்களுக்கு இழப்பு ஏற்படாத வகையிலேயே இதனை மேற்கொண்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட செய்தியை பொதுமக்களுக்கு அறிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பின்லேடன் கொல்லப்பட்டமையானது அமெரிக்காவின் முக்கியாமனதோர் சாதனை எனவும் அவர் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி


லிபியாவில் நேட்டோ படைகள் கடும் தாக்குதல்: கடாபியின் இளையன் மகன், 3 பேரக்குழந்தைகள் பலி


லிபியாவின் மீது நேட்டோ படைகள் நடத்திவரும் விமானத்தாக்குதலில் அந்நாட்டு ஜனாதிபதி கடாபியின் இளையமகனான சயிப் அல் அராப் கடாபி மற்றும் கடாபியின் பேரக்குழந்தைகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை அந்நாட்டு அரசின் செய்தி தொடர்பாளர் மூஸா இப்ராஹிம் உறுதி செய்துள்ளார்.

இதேவேளை கடாயின் இளையமகன் கொல்லப்பட்டது குறித்து நேட்டோ படைகள் உறுதியான தகவல்கள் தெரிவிக்கவில்லை.

திரிபோலி நகரில் வசித்து வந்த கடாபியின் இளையமகனின் வீட்டை நேட்டோ படைகள் தாக்கியபோது கடாபியும் அவரது மனைவியும் அங்கேயே இருந்துள்ளனர்.

எனினும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடாபியின் இளையமகனான சயிப் அல் அராப் கடாபி (29) ஜேர்மனியில் கல்விகற்றவர் என்பது குறிபிடத்தக்கது

லிபியாவில் நேட்டோ படைகளின் விமானத்தாக்குதல்களில் கொல்லப்பட்ட கடாபியின் இளையமகனான சயிப் அல்-அராபின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
இந்த ஊர்வலத்தில் கடாபி கலந்து கொள்ளாத போதிலும் அவரது மற்றைய மகன்களான சயிப் அல்-இஸ்லாம் மற்றும் ஹனிபல் ஆகியோர் கலந்து கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடாபியின் ஆதரவாளர்கள் 2000 பேர் வரை இதில் பங்குபற்றி இருந்ததாகவும் பலர் தமது துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேட்டோ படைகள் நடத்திய விமானத்தாகுதலில் கடந்த சனிக்கிழமை கடாபியின் மகன் உட்பட அவரது மூன்று பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி


கனேடிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் ஈழத்தமிழ் பெண்


கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபேசன் என்ற ஈழத்தமிழ் பெண் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காபுறோ ராஃப் – றிவர் பகுதியில் போட்டியிட்ட ராதிகா (29) 23 வருடங்களாக அந்த பகுதியில் வெற்றியீட்டிவந்த லிபரல் கட்சி வேட்பாளர் டெரிக் லீயை தோற்கடித்துள்ளார்.

ஈழத்தில் இருந்து கனடாவுக்கு சென்று குடியேறிய ராதிகா முதல் முதலாக கனேடிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான தமிழ் பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பின் தலைவராக முன்னர் பணியாற்றிய ராதிகா, அந்த பகுதியில் வசிக்கும் இளைய சமூகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் நன்கு பரீட்சையமானவர்.

நன்றி ஈழம் நியூஸ்No comments: