இலங்கையில் தேனிலவைக் கொண்டாடும் அதிநவீன சொகுசு இரயில்கள் !

தேனிலவைக் கொண்டாடும் அதிநவீன சொகுசு இரயில்கள் இலங்கையில்!

புதிதாக திருமணம் முடிந்தவுடன் தம்பதிகளை தேனிலவுக்கு அனுப்பி வைப்பது வழமை. அது நட்சத்திர ஹோட்டல்களாக, பிரசித்தமான சுற்றுலா பிரதேசங்களாக, ஏன் வெளிநாடுகளாகக் கூட அமையும் அது அவரவர் வசதியினைப் பொறுத்தது.


ஆனால் தம்பதிகள் ரயிலில் தமது தேனிலவினை கழிக்கும் வாய்ப்பு இலங்கையருக்கு கிடைக்கப் போகிறது.



இதன் அடிப்படையில் அதிசொகுசு ரயில்களை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வர ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதனை இருமாத காலப்பகுதிக்குள் இறக்குமதி செய்யவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கும் இரண்டு சொகுசு ரயில்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ரெஸ்டூரண்ட், சொகுசு அறைகள் குறிப்பாக புதுமணத் தம்பதிகள் தமது தேனிலவினை கழிப்பதற்கான வாய்ப்பு போன்ற நவீன வசதிகளை பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை ரயில்வே திணைக்கள பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் செயற்படவிருக்கும் இந்த ரயில் சேவையினை நாட்டின் பிரதான ரயில் நிலையங்களுடாக இயக்குவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி tamilcnn .கொம்

2 comments:

Ramesh said...

அப்ப இனி ரெயின்ல கசமுசாதான் ஈஈஈஈஈஈஈஈஈ

வாழ்க சீனன்

kirrukan said...

Quote

Ramesh said...
அப்ப இனி ரெயின்ல கசமுசாதான் ஈஈஈஈஈஈஈஈஈ

வாழ்க சீனன்

ரமேஸ் அது சிறிலங்கா மக்களுக்கு மட்டும்தானாம்.....
புலம்பெயர்ந்து விடுதலைக்கு மட்டும் சிறிலன்காவுக்கு செல்லும் மக்கள் பாவிக்க (பயணம் ) செய்ய தடையாம்.....கி...கி..கி