பிரதமர் ஜூலியா கில்லார்ட் ஸ்தி ரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கும் சாத்தியமுள்ளதாக தெவித்தார்.

.


பிரதமர் ஜூலியா கில்லார்ட்டுக்கு ஆதரவளிக்க 4 சுயேட்சை பாராளுமன்ற உறப்பினர்களில் ஒருவரான அன்ட் வில்கி முன்வந்துள்ளார்.


தஸ்மானியாவின் டெனிஸன் பிராந்தியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினரான அன்ட் வில்கி,  ஜூலியா கில்லார்ட்டின் தொழிற் கட்சியானது ஸ்திரமான அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கும் சாத் தியமுள்ளதாக தெவித்தார்.






ஏனைய 3 சுயேட்சை வேட்பாளர்களும் ஜூலியா கில்லார்ட்டுக்கா அன்றி அவரது போட்டியாளரான டோனி அப்பொட்டுக்கா ஆதரவு வழங்குவது என்பது குறித்து ஒரு தீர்மானத்துக்கு இன்னும் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜூலியா கில்லார்ட்டும் டோனி அப்பொட்டும் மேற்படி 3 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தம் பக்கம் ஈர்த்துக் கொள்வது தொடர்பில் மும்முரமாக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெற்று இரு வாரங்களாகின்ற நிலையில் தொழிற்கட்சியோ அன்றி டோனி அப்பொட்டின் லிபரல் தலைமையிலான கூட்டமைப்பு கட்சியோ அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான ஆசனங்களை உறுதி செய்யத் தவறியுள்ளன.

முன்னாள் புலனாய்வு அதிகாரியான அன்ட் வில்கி,  முன்னாள் பிரதமர் ஹவார்ட்டின் அரசாங்கம் ஈராக்கிய போர் பங்கேற்றமைக்கு எதிர்ப்பு தெவித்து பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அவரது ஆதரவு ஜூலியா கில்லார்ட்டுக்கு கிடைத்துள்ள போதும், அரசாங்கத்தை அமைப்பதற்கு அவருக்கு மேலும் இரு ஆசனங்கள் தேவைப்படுகின்றன.

No comments: