நான்கு குமாரர்கள்

      .
                              
ஹரே கிருஷ்ணா! மீண்டும் இந்த வாரம் உங்களை சந்திப்பதில்  மிக்க மகிழ்ச்சி.
சென்ற வாரம் பகவானின்  திரு அவதார சிறப்பை பார்த்தோம், இந்த வாரம்  அவர் பக்தரும்  பிரஹ்மாவின் மைந்தர்களான 4 குமாரர்கள் பற்றி காண்போம்.
ஆதியில் உலகம் உருவாகும் போது பிரஹ்மா நிறைய குழந்தைகளை சிருஷ்டி செய்தார். அவர்களை உலகில் மக்கள் தொகையை பெருக்க கட்டளை  இட்டார். 


இந்த வகையில் 4 குமாரர்களாகிய சனக,  சநாதன, சனந்தா, மற்றும் சனத்த குமாரன் ஆகிய நான்கு பேருக்கும் உலகின் தொகையை அதிகரிக்க ஆணை இட்டார். ஆனால் பிரஹ்மா  ஏமாற்றம் அடைந்தார். அந்த நான்கு குமாரர்களும், உலகியல் வாழ்வில் ஈடுபட்டு அதில் சிக்கிக்கொள்ள விருப்பம் இல்லை  என்று  கூறி விட்டனர். மேலும் நாங்கள் பிரஹ்மசாரியாக இருந்து அந்த பகவானின் திவ்ய நாமம்களை  உலகிர்க்கு உபதேசம் செய்ய போகிறோம் என்று கூறினர்.
4 குமாரர்களும் நிறைய அறிந்த சாதுக்கள். அவர்கள் ஆதிமூலத்தை அறியும் வழியை உபதேசம் செய்து வந்தனர். அவர்கள் குழந்தைகழாகவே அவர் வாழ்நாள் முழுவதும் சம்சாரத்தில் சிக்கிக்கொள்ளாமல் பகவானை சிந்தனை செய்து உலகை சுற்றி பகவானின் நாமன்களை உபதேசித்து வந்தனர்.
கண்ணன் கீதையில் நான்கு வித பக்தர்களை பற்றி இவ்வாறு கூறுகிறார்.
சதுர்-வித பஜந்தேமாம் ́
ஜனா:̣ சுகிர்̣தினோ'ர் ஜுன
ஆர்த்தோ ஜிக்யாஸூரர்தார்த்தீ
ஞானீ ச பரதஷப                         [BG 7.16 ]
அர்த்தம்:
பரதர்களின் சிறந்தவனே  நான்கு விதமான நல்லோர்  எனக்கு தொண்டு செய்கின்றனர் - துயருற்ரோர் , செல்வத்தை விரும்புவோர், கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவை தேடுவோர் . என்பவர் ஆவார்.
இதில் 4 குமாரர்கள் பூரணத்தை தேடுபவர்கள் ஆவார்கள்.
ஒரு முறை இந்த 4 குமாரர்களும் வைகுந்த லோகத்தை அடைந்து அந்த பகவான்  விஷ்ணுவை தரிசிக்க சென்றனர். வைகுண்டத்தின் வாயில் காப்பாளர்கள்  ஜய, விஜயர்கள் இவர்களை தடுத்து நிறுத்துகிறார்கள். இதனால் கோபம் அடைந்த 4 குமாரர்கள் அவர்களை பூலோகத்தில்  அசுர குலத்தில்  பிறக்க சபிக்கின்றனர். வாயிலில் நடக்கும் சம்பவத்தை அறிந்த அந்த பகவனான விஷ்ணு அந்த இடத்திர்க்கு தாயாருடன் (லக்ஷ்மி) தன் பக்தர்களின் குழப்பத்தை போக்கவும் அவர்களை சாபத்தில்  இருந்து ரக்ஷிக்க தான் வாயிலுக்கு வருகிறார். 
பகவானின் தாமரை பதங்களை கண்ட 4 குமாரர்கள் அவர் திருவடி தாமரையில் இருக்கும் துளசியை  முகர்த்து தங்கள் கோபத்தில் சபிதத்தை நினைத்து வருந்தி பகவானின் பாதங்களில் சரண் அடைகின்றனர்.
தஸ்யரவிந்த-நயனசிய பாதரவிந்த-
கிஞ்சல்க மிஸ்ர -துளசி -மகரந்த-வாயு: ̣
அந்தர் -கதவ ̣ ஸ்வ-விவரென: ̣சாக்கிர தேஷம் ́
சங்க்ஷோபம் அக்ஷர ஜூஸம் அபி சித்த -தநொவஹ          [பகவாதம் 3.15.43]
அர்த்தம்: எப்போது துளசியின் நறுமணம் பகவானின் பாத கமலங்களில் இருந்து அவர்கள் சுவாச துவாரங்களை அடைந்ததோ அப்போதே அவர்கள் மனத்திலும் உடலிலும் மாறுதல் ஏற்பட்டது.
பகவானின்  ஸ்வரூபம்  மிகவும் அழகானது. அதை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காண விரும்பாது அவரை பாடிய வாய் வேறெதுவும்  பாட விரும்பாது. 
4 குமாரர்களின் வரலாற்றில் இருந்து எளிமை, கடவுளிடம் மாறாத காதல் , தவம், எப்போதும் பகவத் சிந்தனை போன்ற  நல்ல பண்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி. வாருங்கள் அவர் நாமம்களை வாயார பாடி மனதார மகிழலாம்  என்று எல்லோரையும் வேண்டி அமைகிறேன்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!
என்றும்அன்புடன்,
ஆண்டாள்
No comments: