கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதம் நீண்ட காலமாக
சமுதாயத்தில் பேசும் பொருளாக காணப்படுகிறது. அதிலும் தமிழ் நாட்டில் கடந்த எழுபது ஆண்டுகளாக இந்த கேள்வியும் , அதற்கான பதிலும் சர்ச்சைக்குரிய விவாதமாக உலா வருகிறது. மேற்கத்திய நாடுகளில் இந்த கேள்வி இருந்தாலும் எவரும் இதை பற்றி அலட்டிக் கொள்வதில்லை . இஸ்லாமிய நாடுகளில் இந்த கேள்விக்கே இடமில்லை. ஆனால் தமிழ் நாட்டில் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த விவகாரம் விவாதிக்கப் பட்டு வருகிறது. இந்த பிரச்னையை அடிப்படையாக வைத்து 1975ல் வெளி வந்த படம் மனிதனும் தெய்வமாகலாம்.
படத்தின் நாயகன் சிவாஜி. அப்படி என்றால் படத்தில் அவர் ஆஸ்திகரா, நாஸ்திகரா என்ற கேள்வி எழலாம். அதற்கு அவசியம் இல்லாமல் படத்தில் அவருக்கு இரட்டை வேடம் கொடுத்து ஒருவரை ஆஸ்திகராகவும், மற்றவரை நாஸ்திகராகவும் காட்டி விட்டார்கள். ஆகவே இது தொடர்பான மோதலும் இவர்கள் இருவர் இடையில் தான் வருகிறது.
ஊரில் அண்ணண் பக்திமான், கோவில் பூசகர். முருகனிடம்
மானசீகமாக உரையாடுபவர். தம்பியோ பட்டதாரி ஆனால் இறை மறுப்பாளன். பூசகரோ கோவில் கைங்கரியம், பூசை, அபிஷேகம் போன்ற நித்திய கர்மங்கள் சீராக நடக்க வேண்டும் என்பதில் தீவிரமானவர். தம்பியோ ஊரில் மக்கள் பசி தீர வேண்டும், கல்வியறிவு விருத்தி அடைய வேண்டும், ஊழல் ஒழிய வேண்டும் என்பதில் தீவிரமானவன். இவர்கள் இருவருடைய மோதலை தூண்டி விட்டு குளிர் காய்கிறான் ஊர் நாட்டாண்மை. கணவனுக்கும் , கொழுந்தனுக்கு இடையில் சிக்கித் தவிக்கிறாள் அண்ணன் தாரம். தம்பியின் காதலியோ காதலனை பற்றி தப்பபிப்பிராயம் கொண்டு அவனை விட்டு ஒதுங்கி கண்ணீர் சிந்துகிறாள். இறுதியில் ஆஸ்திகமா ,நாஸ்திகமா ஜெயித்தது என்பதை விட , ஊருக்கு நன்மை ஏற்பட்டதா என்பதே படத்தின் ஜீவன்!

பூசகராக வரும் சிவாஜியிடம் அமைதி, அடக்கம்,கனிவு தென்படுகிறதென்றால் சுயமரியாதைக்காரராக வரும் சிவாஜியிடம் நக்கல், நையாண்டி, குதர்க்கம், என்பன காணப்படுகின்றன. ஆனால் ஏழை , வறிய மக்களிடம் அவர் காட்டும் அக்கறை அவரின் பாத்திரத்தை உயர்த்தி காட்டுகிறது. பூசகரிடம் காணப்படும் பக்தியை விட , ஊர் நாட்டாண்மையிடம் அவர் வைத்திருக்கும் விசுவாசம் அவரின் அப்பாவித்தனம் என்பன அவர் மீது பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது.
ஆனாலும் இரண்டு வேடங்களிலும் சிவாஜியின் நடிப்பு கச்சிதம்.
சௌகார் ஜானகி வழக்கம் போல் உருகுகிறார் . உஷாநந்தினி டூயட் பாடுவதோடு ஒதுங்கி விடுகிறார். வி. கே. ராமசாமி, எம் ஆர் ஆர் வாசு இருவரும் ஜாடிக்கேற்ற மூடி, பாத்திரத்திலும், நடிப்பிலும். அதிலும் வி. கே . ஆர் , எம். பானுமதியிடம் அசடு வழிவது வாடிக்கை , வேடிக்கை. இவர்களுடன் சசிகுமார், சுபா, சி. கே. சரஸ்வதி, சுகுமாரி , காத்தாடி ராமமூர்த்தி , வீரராகவன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

பாடல்களை கண்ணதாசன் இயற்ற , குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்தார். பால் பொங்கும் பருவம், காவலுக்கு வேல் உண்டு , வெற்றி வேல் வெல்லுமடா பாடல்கள் கருத்தோடு இசைத்தன. இந்தப் படத்தில் குன்னக்குடிக்கு சக்ஸஸ் !
படத்தை பதிப்பாளரும், பேச்சாளரும், கதாசிரியரும், சிவாஜி மன்றத்
தலைவருமான சின்ன அண்ணாமலை தயாரித்தார். படத்தின் ஒளிப்பதிவு பி. என். சுந்தரம். கங்காவிடம் உதவியாளராக நீண்ட காலம் இருந்த ராதா இப் படத்தின் அரங்க அமைப்பை கவனித்துக் கொண்டார்.
தலைவருமான சின்ன அண்ணாமலை தயாரித்தார். படத்தின் ஒளிப்பதிவு பி. என். சுந்தரம். கங்காவிடம் உதவியாளராக நீண்ட காலம் இருந்த ராதா இப் படத்தின் அரங்க அமைப்பை கவனித்துக் கொண்டார்.
பாலமுருகன் கதை, வசனம் எழுதியிருந்தார். வசனங்களில் அவரின் வீச்சு தெரிந்தது. படத்தை பி. மாதவன் டைரக்ட் செய்தார். ஆஸ்திக , நாஸ்திக விவகாரத்தை நல்ல விதத்தில் பாலன்ஸ் செய்து படத்தின் முடிவையும் நியாயப்படுத்தி விட்டார்.
இப் படத்தின் ஷுட்டிங்கின் போது ஒரு விவகாரம் நடந்தது. படப்பிடிப்பு நடக்கும் போது மது அருந்தி விட்டு நடிக்கும் நடிகர்கள் பலருண்டு. அவர்களுள் ஒருவர் எம் . ஆர். ஆர். வாசு. மேக் அப் ரூமில் தான் வைத்திருந்த விஸ்கி பாட்டிலை திறந்த வாசு அதோடு கலக்க தண்ணீர் தேடினார். கிடைக்கவில்லை. வெளியே வந்து செட் பாயிடம் போய் சோடா வாங்கி வரும் படி சொன்னார். அவன் சென்று சின்ன அண்ணாமலையிடம் விஷயத்தை சொல்ல அதொன்றும் வாங்கத் தேவையில்லை என்று அவர் சொல்லி விட்டார். இதனை வாசுவும் அவதானித்து விட்டார். ரூமுக்குப் போய் கிளாசில் இருந்த விஸ்கியை அப்படியே குடித்து விட்டு செட்டுக்கு நடிக்க வந்து விட்டார். அன்று படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு, இறுதி கட்ட காட்சி. சிவாஜி உட்பட பலர் கலந்து கொள்ளும் காட்சி. ஒரே டேக்கில் முன்னூறு அடி காட்சி எடுக்க வேண்டும். ஷுட்டிங் ஆரம்பமானது.
வாசு பேச வேண்டிய வசனத்தை திரும்ப திரும்ப தவறாக சொல்ல
காட்சி மீண்டும், மீண்டும் படமானது. ஐந்தாவது தடவையும் வாசு தடுமாறவே , சிவாஜி லேசாக முறைத்து என்ன வாசு ஓவரா என்று கேட்க , வாசு மீண்டும் வசனம் பேசி ஒன்பதாவது முறையாக காட்சி படமாகி முடிந்தது. ஆயிரம் அடி கொண்ட பிலிம் ரோல் அன்றைய விலைப் படி மூவாயிரம் ரூபாய். வாசுவால் இக் கட்சி படமாகி முடிய பத்தாயிரம் ரூபாய் செலவானது. படப்பிடிப்பு முடிந்த பின் கவலையுடனும், கோபத்துடனும் நின்ற சின்ன அண்ணாமலையிடம் சென்ற வாசு "சாரி அண்ணே என்னாலே உங்களுக்கு வீண் செலவு , ஒரு ரூபாய்க்கு சோடா வாங்கி கொடுத்திருந்தால் பத்தாயிரம் ரூபாய் மிச்சமாகி இருக்கும் ‘ என்று கூறி விட்டு கிளம்பி விட்டார். அதன் பின்னர் அண்ணாமலை தயாரித்த எந்தப் படத்திலும் வாசு நடிகவில்லை என்பதை சொல்ல வேண்டுமா!

.png)
.png)
.png)
.png)
.png)

No comments:
Post a Comment