இலங்கைச் செய்திகள்

நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம்

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா   


நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம் 

Published By: Vishnu

22 Nov, 2025 | 05:04 AM



தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை (21) மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பொது ஈகைச்சுடரினை , மாவீரரின் தந்தையான தம்பிராசா ஏற்றி வைத்ததை தொடர்ந்து , கல்லறை உருவகத்திற்கு, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை நினைவாலயத்தில் மாவீரர்களின் உருவ படங்கள் சிலவும் பெற்றோரினால் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்

தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுபற்றாளர்களையும்  மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது.  

தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள்.உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.   




































நன்றி வீரகேசரி 








மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்  

22 Nov, 2025 | 04:23 PM

போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது. 

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. 

அந்தவகையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம் என்றுமில்லாதவாறு கோம்பாவில் புலம்பெயர் தேசத்து உறவுகளும் , கோம்பாவில் மக்கள், இளைஞர்கள் இணைந்து மாவீரர் நாளினை அனுஷ்டிக்க தயார் நிலையில் ஏற்பாடாகியுள்ளது.
















நன்றி வீரகேசரி 









திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா   

19 Nov, 2025 | 04:05 PM

திருகோணமலை - வெருகல் பகுதியைச் சேர்ந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா வெருகல் கலாசார மண்டபத்தில் இன்று புதன்கிழமை (19) காலை நடைபெற்றது.

இதன்போது மாவீரர் பெற்றோர் மேள தாளங்கள் முழங்க விழா மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதன் பின்னர் யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெருகல் பகுதியைச் சேர்ந்த 150 மாவீரர் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












நன்றி வீரகேசரி 

















No comments: