பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - -- தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி - ----------------------- யசோதா -

 

 தமிழ் வளர்த்த சான்றோர் விழாவிலே  செஞ்சொற் செல்வர் சிவத்திரு

ஆறு  திருமுருகன் அவர்கள் பிரம்மசிறீ வீரமணி ஐயர் அவர்களின் சா தனைகளும் சிறப்புகளும் குறித்து நிகழ்த்திய  பேருரை                             

 இறைவணக்கத்துடன் தனதுரையை இப்படி  ஆரம்பித்தார்

"சான்றோருக்;கு விழா எடுக்கின்ற பெருமைக்குரிய வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் ஐயா அவர்களே! சபையில் இருக்கின்ற சான்றோர் பெருமக்களே! எல்லோருக்கும் எனது பணிவன்பான வணக்கம்   



- பிரம்மசிறீ
வீரமணி ஐயர்      

பாரதி ஐயா அவர்களுக்கு ல்லாம் அமிர்தமாகத் தேனாகச் சான்றோர் விழாவைக் கொண்டாடவேண்டும் என்று விருப்பம். உங்களில் வீரமணி ஐயரை நேரிற் பார்த்தவர்கள் இருப்பீர்கள். அவருடைய பாடலை - இசையை இரசித்தவர்கள் இருப்பீர்கள். நான் அவர் பிறந்த ஊரைச்சேர்ந்தவன் என்ற காரணத்தால் அவரோடு சிறுபிராயம்முதல் பழகியவர். இயலிசைவாரிதி நடராச  ஐயர் வீரமணி ஐயர் யாழ்ப்பாணத்து இணுவிலிலே பரராசசேகரப் பிள்ளையார் கோயில் வீதியிலே 1931ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 15ஆம் திகதி பிறந்தவர். சின்ன வயதிலே இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையிலே  - இப்ப இணுவில் இந்துக் கல்லுரி என்று பெயர்-   முத்தமிழ் வித்தகர் அம்பிகைபார் தொடக்கிய பாடசாலையிலே - இவர் படித்துக்கொண்டிருந்த பொழுது இவருக்கு ஐந்து வயது. இவருடைய முதலாவது ஆசிரியர் என்னுடைய தாயார். என்னுடைய தாயாரிடம்தான் இவர் அரிவரி படித்தவர். அம்மா அந்தப் பாடசாலையிலே ஆசிரியராக இருந்தவர்.

அந்தக் காலத்திலே பெற்றோர் தினவிழா பெரிதாக நடக்கும். அப்பொழுது சரவணமுத்துப் புலவர் - அவர் ஒரு பெரும் புலவர் - அவர் ஒரு நாடகம் தயாரித்தார். அவர் இளம் வயதிலே இறந்துவிட்டார். ஒரு பிள்ளை இரு தாய் ;   என்ற இலக்கிய  நாடகம்.. என்னுடைய தாயைத் தாயார் பாத்திரமாகவும் வீரமணி ஐயரைப் பிள்ளைப் பாத்திரமாகவும்.      இரண்டு தாய்மார்களும் அழுதழுது நடிக்கிறார்கள் இது என்ரை பிள்ளை இது என்ரை பிள்ளை என்று. வீரமணி  ஐயர் இனியில்லையென்ற அழகான குழந்தை. சின்னனிலேயே தலையிலே குடும்பி வைத்திருந்தார். தாயார் இரண்டு பேரும்  அழுதது நடிக்க  வீரமணி ஐயர் ஒரு குறும்பைச் செய்திட்டார். வீரமணிக்குச் சொல்லிக் கொடுத்தது உண்மையான தாய் என்று சரசுவதியைக் காட்ட. வீரமணி  ஐயர் இரண்டுபேரும் நல்லாய் அழ   வீரமணி இரண்பேரும் அம்மா என்று சொல்லிவிட்டார். சரவணமுத்துப் புலவருக்குச் சரியான கோபம். வீரமணியின் அந்த நடிப்பு சபையிலே இருந்த கலையரசு  சொர்ணலிங்கத்தைத் திடுக்கிடவைத்தது. அவர்தான்  இந்த வீரமணி ஐயரை மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குக் கொண்டுபோய்    6ஆம் வகுப்பிலே  ஆங்கிலக் கல்வி மூலம் படிக்கச் செய்தவர்;. இவரின் தந்தையார் கையிலே ஒரு  ~கார்மோனியப் பெட்டியைச் சைக்கிளிலை கட்டிக்கொண்டு வீடுவீடாகச் சங்கீதம் படிப்பிக்கச் செல்வார்களாம் என்று தாய் சொல்லுவார்.

வீரமணி ஐயர் மானிப்பாய் இந்துக்கல்லூரிக்குப் போய் அங்கே நாடகம் பாட்டு எல்லாற்றிலும் மிக்க ஆற்றல் உள்ளவராகத் திகழ்ந்தார். அப்படிப் படித்துக்கொண்டிருக்கும் காலத்திலே ஒருதம்பியை இழந்தார். தாயார் சிறு வயதிலே இறந்துவிட்டார்  வறுமை!  வீரமணி ஐயரின் உடன்பிறந்த தமையன் கந்தசாமி  ஐயர்  எல்லோரும் வீரமணி  ஐயரைப் பாராட்டப் பாராட்ட இவரை எப்படியாவது இந்தியாவுக்கு அனுப்பிப் படிப்;பிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். அப்பொழுது பரமேசுவராக் கல்லூரியிலே ஒரு தமிழ் விழா. அந்த விழாவுக்கு நடேசபிள்ளை நடன வித்தகர்களை -  பெரிய பாடகர்களை எல்லோரையும் அழைத்தார். அப்பொழுது அங்கே சந்தித்த சில பெரியவர்ளுடைய தொடர்பினாலே  இந்தியாவுக்குப் போய் நடனக்கலையைக் கற்றவர்தான் ஏரம்பு சுப்பையாபிள்ளை. மிகப்பெரிய நடன வித்தகராக ஏரம்பு சுப்பையாபிள்ளைக்கு பரமேசுவராக் கல்லூரித் தொடர்பு. அவருக்குப் பின்னாலே இரண்டு  மூன்று ஆண்கள் போய் அங்கே சங்கீத வித்துவான்களாக யாழ்ப்பாணத்துக்கு வந்தார்கள்.

வீரமணிஐயரின் குடும்பம் ஒரு சாதாரணமான ஏழைப் பிராமணக்; குடும்பம். வீரமணி  ஐயரின் தமையன் கந்தசாமி ஐயர் இவரை இந்தியாவுக்குப் பாடல்  படிப்பதற்காக ஒரு குருவை நாடிக் கொண்டுபோய்விட்டு விட்டு வந்தார். அப்ப ஒருமாதம் 15 ரூபாய் 20 பாய்தான் கந்தசாமி ஐயரால் அனுப்ப முடியும். ஒரு மணி ஓடர் எடுத்து அனுப்புவார். வீரமணி ஐயர் ஒரு அறை எடுத்து இருந்து படிக்கிற காலத்திலேயே 15 - 16 வயதிலேயே  அவருக்குப் பாட்டியற்றுகிற ஆற்றல் இருந்தாலும் ; அவருடைய பாடலை ஒருவரும் அங்கீகரிக்கவில்லை.

இசை படிக்கப்போனவர். இசை படிக்கப் போன இடத்திலே  அந்தக் குருகுலவாசத்திலே அவருக்கு  அதிகம் பொருந்தவில்லை. அப்போ அவர் படிப்பை விட்டுவிட்டு

அருண்டேல் உருக்மணி ஒரு பிரபல நடன மேதை அவரிடம்போய் எனக்கு நடனம் படிக்க ஆசையாக இருக்குது. என்று  சொல்லி நடனத்தைப் படிக்கத் தொடங்கிவிட்டார். சங்கீதம் படிக்கச் சென்றவர். அருண்டேல் உருக்மணி அம்மாவுக்குத்; தொண்டு எல்லாம் செய்து படித்துக் கொண்டிருக்கின்ற பொழுதுதான்தான் பாவநாசசிவம் என்ற மிகப்பெரிய வாத்தியக்காரரை வீரமணி சந்தித்தார் அவரிடத்திலேதான் இந்த நாட்டிய நாடகம் பாட்டு எல்லாம் எப்படி எழுதுவது என்பதைக் கற்றுக்கொண்டார். அவரிடம் இருந்து பணிவிடை செய்தார். இந்த நுட்பங்களை எல்லாம் அறிந்தார்

பாவம்.! சென்னையில் இருக்கிறார். தமையன் அனுப்புகிற மணி ஓடர் வரவில்லை.  சரியான கஸ்ட்டம். இரண்டுபேரிடம் கடன் பெற்றுவிட்டார் சரியான கஸ்ட்டம்.    

அந்த நேரம்தான் கபாலீஸ்வரர் கோயிலுக்குச்; போன வீரமணிஐயர்  ஒரு பாட்டு எழுதினார். அந்தப் பாட்டுத்தான் பிரபல்யமாகிய பாட்டாகிய கற்பக வல்லி.

ஏனிந்த மௌனம் அம்மா ஏழை எனக்கு

ஆனந்த பைரவியே  ஆதரிப்பாய் அம்மா!    

கபாலீஸ்வரத்தில் இருக்கிற கற்பகாம்பாளுக்கு முன்னாலே போயிருந்து தாயே விட்டிட்டுப் போகவும் வழியில்லை. அண்ணை பாவம் கஸ்ட்டப்பட்டு  அனுப்பினவர்

ஏனிந்த மௌனம் அம்மா ஏழை எனக்கு ஆனந்த பைரவியே ஆதரிப்பாய் அம்மா  - அந்தப் பாடலைப் பாடிவிட்டு வீட்டுக்குப் போக 25  ரூபா மணி ஓடர் வந்திருக்கு. பின்னர் அந்தப் பாட்டுக்கு எல்லாம் முன்னுக்குப் பின்னுக்குச் சேர்த்து கற்பகாம்பிகைக் குறவஞ்சிப் பாடலாக எழுதி இரண்டு   பேரிடம் காட்டினார். அவர்கள் ஒருவரும் கருத்திற் கொள்ளவில்லை. பாவம் அவர் கையிற் கொண்டு திரிகிறார். சென்னையில் இருக்கிற பல்கலைக் கழகத்திலை டி. எம் சௌவுந்தரராஜனை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். அது கொத்தமங்கலம் சுப்பு என்ற கலைஞரின் ஏற்பாடு. இதைப் பத்திரிகையிலே பார்த்துவிட்டுச் சௌவுந்தரராஜனைப் பார்க்கவேணும் என்று இந்தப் பாட்டையும் எடுத்துக்கொண்டு கடைசித் தொங்கலில் இருந்த வீரமணி கஸ்ட்டப்பட்டுக் கஸ்ட்டப்பட்டுக் கிட்டப்போய் சௌந்தரராஜனிடம் 'ஐயா நான் யாழ்ப்பாணத்திலிருந்து படிக்க வந்தனான். பாட்டெழுதினனான்  நீங்கள் இதைப் பாடினால் சந்தோசம்'. பெரிய எழுத்திலே எழுதிக் கொண்டு வந்தவராம். சௌந்தரராஜன்  வாங்கி அந்தச் சபையிலேயே ஒரு 15 நிமிடத்திலேயே கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் என்ற அந்தப் பாடலைப் பாட அந்த மண்டபம் முழுக்கக் கைதட்டி ஆரவாரம் செய்ததுதான்   மகாவித்துவானாக இந்த உலகம் போற்றுகின்ற வீரமணி. அன்றைக்கு சௌந்தரராஜன் அந்தப் பாட்டைப்  பாடியதும் வீரமணியிடமிருந்து அந்தப் பாட்டை 'உந்தக் கடதாசியைக் கொண்டுவா' என்று  கொத்தமங்கலம் சுப்பு வாங்கிவைத்துக் கொண்டார். வீரமணி வெறுங்கையுடன் வீட்டுக்குப் போனார். ஓரிரு மாதங்களில் வீரமணிக்கு ஒரு நண்பன் சொல்கிறார். 'கேள்விப்பட்டாயா?  நீ கொடுத்த பாட்டு சௌந்தரராஜன் பாடிய பாடலைக்  கொத்தமங்கலம் சுப்பு இசைத் தட்டாகப் பதிவு செய்து அது விற்பனைக்கு வந்துவிட்டது. இப்ப இந்திய வானொலிலை  கூட அந்தப் பாட்டைப் போடுகிறார்கள்.'

பாவம் அந்த இளைஞர்!. அந்தத் தட்டை தோசைக் கல்லுமாதிரி இருக்கும் தட்டு - கஸ்ட்டப்பட்டுப்போய்க்  காசு கொடுத்து வாங்கிக்கொண்டு இப்ப வீட்டுக்கு வாறார் விடுமுறைக்கு.  வீட்டிலே அப்படி ஒரு 'றெக்கோட் பிளேயர கிடையாது. தமையனுக்குச் சொல்கிறார் என்ரை பாட்டு அங்கை பாடிற்று இங்கை பாடிற்று என்று!  எங்கை பாடிற்று? .நண்பர்களுக்கு உறவினர்களுக்கெல்லாம் சொன்னார். ஒருவரும் நம்பவில்லை.

இந்த வீரமணி ஐயர் ஒரு மலேயன் பென்சனியரின் வீட்டிலே இந்த 'றெக்கோட் பிளேயர்' இருக்குதென்று கேட்டு அதை எடுத்துவந்து  உற்றார் உறவினர்களைக் கூட்டிவந்து

அந்தத் வீட்டுத் திண்ணையிலே 'றெக்கோட் பிளேயரை' வைத்துக் கையாலே  'வைன்' கொடுத்து  ----

அந்தப் பாட்டுப் பாட ஆனந்தக் கண்ணீர் விட்டாராம்

கந்தசாமி ஐயர். உறவினர் எல்லாம் அழுதார்களாம். பிறகு கொஞ்சக் காலத்திலே இலங்கை வானொலியிலும் அந்தப் பாட்டைப் போடத் தொடங்கிவிட்டார்கள்;.

எப்படி இருக்கும் இந்த இளைஞருக்கு! அந்தப் பெரிய மகா மகா கவிஞரான வீரமணி ஐயர் முதலிலே ஒரு பாடலை அரங்கேற்றுவதற்கு என்ன பாடுபட்டார். 

அடிக்கடி எனக்குப் பலதடவை  சொல்லியிருக்கிறார். கற்பகாம்பபாள் போட்ட பிச்சையடா!  பிச்சையடா! என்று.

அதன்பிறகு வீரமணி  ஐயருக்கு ஒரு மதிப்பு வந்தது. யாழ்ப்பாணம் வந்து பலவருடமாக வேலை இல்லை   என்றதையும் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலே ஆசிரிய வேலை நியமனம் பெற்ற கதையையும்      விரிவாகப் பேசிய செஞ்சொற்செல்வர்

'ஆசிரிய நியமனம் கிடைச்சு மானிப்பாய் இந்துக் கல்லு ரியிலே ஆசிரியராய்ப்போய் அங்கே படிப்பித்துக்கொண்டிருந்தார்

இப்ப நடனம் தான் அவரின் பட்டம். ஒரு ஆண்மகனிடம் நடனம் படிக்க வாருங்கள் என்றால் பெண்பிள்ளைகள் படிக்கப் போகாயினம். அப்படிப்   போன ஒரு மாணவிதான் சிவப்பிரகாசபிள்ளை அங்கயற்கண்ணி தம்பதிகளின் மகள்  சிவசக்தி. குண்டுமணி மாஸட்;டர் என்றால் எல்லோருக்கும் தெரியும். அவர்களின் மகள் சிவசக்தி அவருடைய முதல் மாணவி. அதற்குப்பிறகு கனபேர் படித்தார்கள். வீணை வித்துவான் பாலச்சந்திரரைப் பிரதம விருந்தினராக அழைத்து யாழ்ப்பாணத்திலே சிவசக்தியின்  அரங்கேற்றம் நடந்தது.

நான் அப்பொழுது பாடசாலை மாணவன். அரங்கேற்றத்துக் கெல்லாம் போய்க் கொண்டாடினோம்.  பாலச்சந்திரர் வீணைவித்துவான் எல்லாம் வந்து பெரிய விழா! வீரமணி யருக்குப் பெரிய மதிப்பு. அது என்ன மதிப்பென்றால் அந்த நடனத்தில் வரும் உருப்படிகள் பலவற்றிற்க்கு வீரமணிஐயர் தன்னுடைய  சொந்தப் பாடல்களையே எழுதி அரங்கேற்றினார். பெரிய சான்றோர்;கள் எல்லாம் வந்து வீரமணி ஐயரை வாழ்த்தத் தொடங்கினார்கள். நடன ஆசிரியர்கள் எல்லோரும் வீரமணியிடம் பாட்டுக் கேட்டார்கள். எழுதத் தொடங்கினார் பாரதி மாதிரி எழுதுவதற்கு. 

பாரதியாரின் ஒரு பாட்டு. நடனத்திலே எல்லோரும் பாடுவார்கள்

'தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன்

தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை'. 

பாட்டு ;எல்லோருக்கும் தெரியும்..

வீரமணிஐயர் அதற்கு நிகராய் ஒரு பாட்டு எழுதினார். என்ன பாட்டு கண்ணனின் குறும்பை வைத்துப் பாடினார்.

'மந்திரக் காரன்டி அம்மாண்டி - அவன்

மயக்குமோர் எண்ணங்கள் கொண்டான்டி

தந்திரமாகவே பேசி என்னைத்

தாலி கட்டும்படி சொன்னான்டி'   

இந்தப் பாட்டுக்கு அபிநயம் எல்லாம்  செய்து   வீரமணி  ஐயரே அதற்கு நடனமாடி சிவசத்தியின் அரங்கேற்றத்திலே  அந்த உருப்படியைக்  கொண்டுவந்தார்.

'மந்திரக் காரண்டி அம்மாண்டி - அவன்

மயக்குமோர் எண்ணங்கள் கொண்டான்டி

தந்திரமாகவே பேசி என்னைத்

தாலி கட்டும்படி சொன்னான்டி! '

எல்லோருக்கும் பெரிய  அதிசயம். இந்தியப் பாட்டுக்கு நிகராகக் கண்ணனுடைய குறும்பைக் கொண்டுவந்து பாடல் இயற்றுகின்ற  அதுவும் நடனத்துக்கு உரிய முறையைக் கையாளுகின்ற ஒரு பெரிய கலா இரசிகனாக வீரமணி 

 ஐயரைப் போற்றத் தொடங்கினார்கள். 

வீரமணிஐயர் நிறையப் பாட்டுகளை எழுதத் தொடங்கினார். எத்தனையோ விதமான பாட்டுகளை எழுதினார். சிலபேர் பாடல்களை இந்தியாவுக்குக் கொண்டுபோய் இந்தியாவிலே பாடி அப்படியெல்லாம்; செய்தார்கள். அவருடைய பாட்டுகள் மிகப் பெறுமதியான பாட்டுகள்

எப்படிச்  சௌந்தரராஜன் எல்லாம்  பாடி இந்தச் சிறப்புப் பெற்றதோ 

இப்ப முருகப் பெருமானுக்கு ஒரு அபினயப்  பாடலை உருவாக்கின்ற முயற்சி.  

'செல்லக் கனிவாயால் சொல்லடா முருகா'

இந்தப் பாட்டு   எல்லோரையும் உருக்குகிற ஒரு பாடலாக இருந்தது. செல்லக்கனிவாயால் சொல்லடதா முருகா என்ற அந்தப் பாடல் தொடங்கி அதிலே முருகனுடைய குறும்புகள் எல்லாம் சொல்லி அந்தப் பாடல்; நல்லூருக்குச் சமர்ப்பணமாக இயற்றப்பட்டது. அதே போல சில அற்புதமான பாடல்களுக்காக நடன ஆசிரியர்கள் எல்லாம் தேடித் தேடி வீரமணி ஐயரிடம் வரத் தொடங்கினார்கள். அப்பொழுது வீரமணி  ஐயர் பாடல்களை இயற்றுவது மட்டுமன்றி அரங்கேற்றங்களுக்கும் பாடத்தொடங்கினார்  சமீபத்திலே மறைந்த ரங்கா விவேகநனந்தன்   குச்சுப்புடி நடனத்தை கேரளாவிலே படித்துவிட்டு வந்தவர். ஆழிச்சுடர் ஆனந்தனின் கூடப் பிறந்த சகோதரி ரங்கா விவேகானந்தன். ரங்கா விவேகநனந்தன் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இந்தியாவிலே பெரிய விற்பன்களிடம் படித்தவர். யாழ்ப்பாணத்திலே  நிகழ்ச்சி என்றால் வீரமணி ஐயரின் பாடல் சேர்த்தால்தான் மேடைக்கு வருவேன என்றதும் அவவுக்கு உடனே ஒரு பாட்டு இயற்றிக்கொடுத்துப் பாராட்டுப் பெற்றவர். இதுபோலப் பலபேருடைய அரங்கேற்றங்களுக்கெல்லாம் அவர் பாட்டெல்லாம் எழுதிக்கொடுத்துப் பெருமை பெற்றுக்கொண்டிருந்தார். அந்த வகையிலே வீரமணி ஐயருடைய பாடல்கள் சிறப்புப்பெற்றன. அவரும் அரங்கேற்றங்களுக்கு நடன ஆசிரியராக இருந்துவந்தார்.

 

 பின்னர் பலாலி ஆசிரியர் கலாசாலைக்கு விரிவுரையாசியராகி    பிறகு கோப்பாய் ஆசிரிய கலாசாலையிலே விரிவுரையாளர்.  பிறகு யாழ்ப்பாண பல்கலைக் கழக இசைத் துறை ஆரம்பமானதும் நடனத்துறையிலே வருகை விரிவுரையாளராக இருந்தார். இது ஒரு பக்கம். எல்லாக் கோயில்களுக்கும் ஊஞ்சற் பாட்டு! எல்லாருக்கும் வாழ்த்துப் பாட்டு! எனக்கும் பேசத்தொடங்கிய காலத்திலே பத்து நாள்கள் தொடர்ந்து தொடர் பேச்சு முடிந்தால்   வீரமணி ஐயருடைய வாழ்த்துப் பாடல் வரும். வீரமணி  ஐயர் வந்து மேடையிலே பாடுவார்.

அன்புக்குரியவர் அவருக்குக் குழந்தை இல்லை புன்னாலைக்கட்டுவன் கணேசையருடைய பேரப்பிள்ளை முறையான ருக்மணி அம்மாவைத் திருமணம் செய்து குழந்தைகள் இல்லை. எல்லாக் பிள்ளைகளையும் தடவி எனக்குப் பிள்ளையில்லை    எல்லாம் என்ரை பிள்ளைகள்தான்; என்பார்.  குழந்தைகளுக்குப் பெயர் வைப்பார். இப்படியெல்லாம் செய்வார்.

அந்த வீரமணி ஐயர் மிகச் சிறப்புற்று  இருந்த காலத்திலே

சீர்காழி கோவிந்தராஜன் யாழ்ப்பாணத்துக்கு வருகிறார்.

சுட்டிபுரம் அம்மன் கோயிலுக்கு  அழைத்து வந்தார்கள். சீர்காழி கோவிந்தராஜன்  வந்து எஸ். ரீ . ஆர்.  தியாகராஜன் வீட்டிலே தங்கி இருக்கிறார். அப்ப நான் உயர்தரவகுப்பு மாணவன். நாங்கள் போய் கோவிந்தராஜனை ஒருமுறை பார்க்கவேண்டும் என்று எஸ். ரீ. ஆர் வீட்டு வாசலிலே நிற்கிறோம்.; உள்ளுக்கு விடுகிறார்களில்லை. பெரிய  கூட்டம் றோட்டிலே நிற்குது சீர்காழியைப் பார்க்க. சீர்காழி    அகத்தியர் என்று நடித்த படத்திலை நல்ல பாட்டுப் பாடினவர்  என்று அவரைப் பார்க்கச் சனம் வெளியிலே திரண்டுபோய் நிற்;குது. வீரமணி ஐயர் பாவம். மோட்டார் சயிக்கிளில்   வந்திறங்கினார். உடனே உள்ளுக்குக்  கூட்டிக்கொண்டு போனார்கள். வீரமணி ஐயர் திரும்பி வந்தார்கள்.  பின்னேரம்  கச்சேரி இருக்குது என்னை வரச்சொல்லியிருக்கிறார்கள் நான் போக வேணும். வீரமணி ஐயரைப் பின்னாலே  காரிலே  கூட்டிக்கொண்டு போகிறார்கள.; மாலையிலே கச்;சேரி. பொழுது சாய்ந்த நேரம். சுட்டிபுரம் எங்கே இருக்கிறதென்று வீரமணி ஐயருக்குத் தெரியாது. சீர்காழி வரும்பொழுதே சொல்லிவிட்டார். நீங்கள்  ஒரு பாட்டுத் தரவேண்டும்  நான் பாடவேண்டும் என்று. கற்பகவல்லியை இயற்றிய வீரமணி ஐயா எனக்கு நீயொரு பாட்டுத் தரவேண்டும். சுட்டிபுரத்துக்குத்தான் பாட்டெழுதவேண்டும் சுட்டிபுரம் என்ன நிறமென்று தெரியாது வீரமணிக்கு. இந்தக் கார் பின்னாலே போகுது. இங்காலே வயலிலியிருந்து மாடுகள் எல்லாம் பொழுதுபட அங்காலே போகுது. காருகள் நின்றுவிட்டன மாடுகள் போகும்மட்டும். பக்கத்திலை சுட்டிபுரக்காரர் ஒருவர் காருக்குள்ளை இருக்கிறார் அவரிடம் வீரமணி ஐயா  கேட்டார் 'இந்த மாடுகள் எல்லாம் ஆருடையதென்று? '

அதெல்லாம் கோயிலுக்கு நேர்ந்து நேர்ந்து ஆள்;கள் விடுகிறார்கள். மாடுகள் மேய்ந்துவிட்டு வருகுது. பாட்டெழுதவேணும். கோயிலிலே போய் இருந்து அம்பாளே அம்பாளே பாட்டெழுதவேண்டும் 

சுட்டிபுரம் வாழுகின்ற சுந்தரியே கண்ணகியே

கட்டி உன்றன் கால் பிடித்தேன்

கருணைக்கண்ணால் பாருமம்மா

பட்டிப் பசு இனங்களெல்லாம்  

பாலாபிே சகம் செய்யும்

கட்டி உன்றன் கால் பிடித்தேன்

கருணைக்கண்ணால் பாருமம்மா!

சுட்டிபுரச் சனத்துக்கென்றால் சந்தோசத்துக்கு எல்லையில்லை

மிகப்பெரிய  கலைஞர். கோவிந்தராஜன் உச்சமாகப் பாடிவிட்டார் அந்தப் பாட்டை. மாடுகளை  வைச்சுக்கொண்டு வீரமணி ஐயர் பாடிவிட்டார். இந்தப் பாட்டு இன்றைக்கு மிகப் பிரபல்யமான பாட்டு.  வீரமணி ஐயருக்குக் கிடைத்த சந்தர்ப்பம் மாடுகள் குறுக்கை வந்ததுதான்.

பெரிய அற்புதமான ஒரு கலைஞர். இரண்டாம்

தரமாகப் புங்கிடு தீவுக்கு வாருகிறார். எல்லோரும் வந்து எங்கடை ஊருக்கும் ஒரு பாட்டெழுதக் கேட்கினம். வீரமணி யருக்குப் பாட்டே வருகுதில்லை. புங்கிடு தீவுக்கு என்ன பாட்டென்று!   கோயிலுக்குப் போனாயிற்று!.  கடதாசி எடுத்தாயிற்று!. பேனை எடுத்தாயிற்று! என்னடா பாட்டு வரவில்லை. இப்ப பிராமணர்கள் கொஞ்சப் பேர்கள் வந்து சொன்னார்கள்.  ஐயா கழஞ்சி  அறைக்குள்ளே பிராமணர்கள் தேத்தண்ணி குடிக்கப் போகிறார்கள். நீங்களும் வாருங்கள் என்று. வீரமணிஐயர் அங்கே போயிருக்கிறார். அங்கே இரண்டு அலுமாரிக்ககுள்ளே அம்மனுக்குச் சேலைகள் அடுக்கிக் கிடக்குது. இப்பவும் ஏலத்திலை வித்து எத்தனையோ இலட்சத்துக்குப் போனது. அவர்கள் சொன்னார்கள் காலையிலே ஒன்றைக் கட்டுவம் பின்னேரம் ஒன்றைக் கட்டுவம் என்று.

வீரமணி ஐயர் பேனை எடுத்தார்

'வண்ணவண்ணச் சேலைகட்டும் மீனாட்சி

என்தன் காமாட்சி

உள்ளமெல்லாம் நீஆட்சி'

உண்மையிலே சீர்காழி  ஆலாபரணம் பண்ணி அந்தப் பாட்டைப் பாடினார். 

வண்ணவண்ணச் சேலைகட்டும் மீனாட்சி

இப்படி ஒரு பாட்டு எங்கள் ஊருக்கு வீரமணி  ஐயர் பாடினாரென்று தலையிலை தூக்கிவைத்தார்கள்.….

என்ன பாட்டு! என்ன பாட்டு! – சத்தியமாக வீரமணி சொனனார்  கோயிலுக்குள்ளே கழஞ்சி அறையுக்குள்ளே தேத்தண்ணி குடிக்கையிலேதான் இந்தப் பாட்டு வந்தது. அதுதான் வீரமணி. மிகப்பெரிய  அற்புதமான ஒருகலைஞர.; அவர் யாத்த பாடல்கள் எத்தனையோ! இந்தியாவிலே பலர் வியந்து போற்றியிருக்கிறார்கள். 

வசந்த கல்யாணி இராகம் மிகக் கஸ்ட்டமான இராகம். 72மேளகர்த்தா கீர்த்தனைகளை எழுதிவைத்துவிட்டு     அச்சடிப்பதற்கு வழியில்லாமல் பட்டுத்துண்டுகளாலே கட்டி வைத்துவிட்டு                                   திருமுருகா திருமுருகா இங்கை நான் சாகப்போறேனடா    இதை யாரிடம் கொடுத்தாவது அச்சேற்றவேண்டும் அச்சேற்றவேண்டும். போர்! போரச் சூழலிலேதான் வாழ்க்கை. கொஞ்சக் காசுதான்தான் பென்சன். கற்பகவல்லிப் பாட்டாலே உழைத்தது கொத்தமங்கலம் சுப்புவும் சவுந்தரராஜனும்.;  வீரமணிக்குப் பத்துச்சதம்  கூடக் கொடுக்கவில்லை. மாபெரும் கலைஞன் தவித்தார். அப்படி இருக்கிறபோதுதான்தான் கல்யாண வசந்தம் அந்த இராகத்திலை வீரமணி ஐயா நீங்கள் பாடவேண்டும் என்று கேட்டார்கள். அதுவும் எந்தக் கோயிலுக்கு -  பொன்னாலை வரதராஜப் பெருமாளுக்கு இந்த இராகத்திலை பாட்டுப் பாடவேணும்

வீரமணிஐயர் அந்த இராகத்துக்கு ஒரு பாட்டு இயற்றினார். ஒரு நுட்பம் செய்தார் பாட்டில்  ஏதாவது  யாரும் செய்யாததைச் செய்யவேண்டும். கம்பர்- இராமாயணத்திலே ஒரு பாட்டு - இராமனுக்கும் சீதைக்கும் கல்யாணம்.   சீதை வந்து இருக்கிறாள். மணமகன் இருக்கிறார்.  மொட்டை மாடியிலே பூ  எறிந்த பெண்தானோ என்று பார்க்கவேண்டும் இராமனுக்கு . இராமன் இந்தச் சீதையின் அழகை ஒருமுறை பார்க்கவேணும். இப்ப இந்தச் சீதைக்கும்  தான் பூப்பந்தை எறிந்ததும் திரும்பிப் பார்த்தவ. இப்ப இந்தப் பெரிய தனுசினை எடுத்து முறித்தவர்.;  மணமகனாய் வந்திருக்கிறார்  பார்க்கவேணும். அவரைப் பார்க்கவேணும் பெரிய சபை இருக்குது. இப்பவெல்லாம் வடிவாய்கப் பார்க்கிறார்கள் நல்லாய்க் கதைக்கிறார்கள். முந்தி அப்படி இல்லை 'நெற்றை'ப் போட்டு விடுவார்கள். இப்ப 'நெற்றை' வேண்டாம் என்று  கேட்கினம் பெண்;பிள்ளைகள். என்ன நெற் என்று கேட்கினம் நல்லாய்த் தெரிந்த ஆளுக்குப் பிறகு ஏன் 'நெற்றை'ப் போட்டுக்கொண்டு போகவேணும் என்று இப்பெல்லாம் கேட்கினம்.

இராமனுக்கும் சீதைக்கும் கல்யாணம் நடக்குது.  இப்ப சீதை அந்தரப்படுகிறாள் இராமன்ரை அழகைப் பார்க்க. புரோகிதர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

மன்னாதி மன்னர்கள் எல்லாம் இருக்கிறார்கள். திரும்பிப் பார்த்தால் மரியாதை இல்லை. சீதை என்ன செய்தாள். நிறையக் காப்புப் போட்டிருந்தவள்.

கைவளை சரிசெய்யக் கண்ணால் கண்டாள்

என்றுகம்பன் பாடுகிறான்

கையை எடுத்துக் காப்பைச் சரி செய்வது போலசந் சீதை பார்த்திட்டாள்.   வடிவாய்த்தான் இருக்கிறார். இராமனை இவர்தான் என்று பார்த்திட்டாள்.  

வீரமணி என்ன செய்தார்  இராதைக்கும் பொன்னாலை கிரு ணனுக்கும் கல்யாணம் என்று கல்யாணவசந்த இராகத்திலே பாட்டு எழுதினார்

ஓமப் புகைநடுவே  ஓரக்கண்ணால் பார்த்தானடீ - என்ன நுட்பம் பாருங்கோ?

கல்யாணத்திலே புரோகிதர்கள் ஓமம் வளர்க்கிறார்களாம் அது புகை மண்டலமாக இருக்குதாம். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கோமளக் கண்ணன் அந்த ஓமப் புகையுக்குள்ளால் அவளும் பார்;த்தாள் அவனும் பார்த்தான் அந்தப் பாடலைத் தானே பாடிக்காட்டி இதைப்போய்ப் பாடுங்கடா  கல்யாண வசந்த மண்டபத்தில் அம்மிக் கல்லில் கால் தூக்கிவைத்தான் என்ற அந்தப் பாட்டிலே ஓமப் புகை நடுவே கண்ணன் ஓரக் கண்ணால் பார்த்தானடி இப்படி ஒரு  மேதை

 

 

 

இப்படி ஒரு கவிஞர் எம்முடைய மத்தியிலே வாழ்ந்தார் என்று நினைத்திட ஆச்சரியமாக இருக்குது. எத்தனையோ

கவிஞர்கள் பிறந்தார்கள். சில கவிஞர்களுடைய  பாட்டை வாசிக்க முடியும். சிலர் பாட்டுகளை அற்புதமாகப் படைத்து  இன்னொருவரிடம் பாடக் கொடுக்க முடியும். இந்த வித்துவானுக்குத்தான் அந்தப் பாட்டைத் தானும் பாடமுடியும். அந்தப் பாட்டுக்கு அபிநயம் சொல்லிக்கொடுக்கவும் முடியும். நவரசங்களைஎப்படி  அந்தப்    பாடல்களுக்கு ஊடாக வெளிப்படுத்த முடியும்.

 

 மாமேதை!  அந்த மேதை எங்களோடு இருந்த காலம் சத்தியமாக எனக்குச் சங்கீதம் தெரியாது. சத்தியமாய் எனக்கு நடனம் தெரியாது. ஆனால் நான் வாய் பார்த்துக்கொண்டிருப்பேன் வீரமணியிடம் இருந்து வருகிற செய்திகளைக் கேட்க! அந்தக் கலைஞன் எல்லோரையும் பாடுவார். அந்தப் பண்பாடு இருந்தது.. எந்தப் பேச்வாளனுக்கும் எந்தப் பாடகனுக்கும் எல்லோருக்கும் உடனே ஒரு பாடலை எழுதிக் கொடுப்பார். பெரிய நாதஸ்வரவித்துவான் சுந்தரமூர்த்தி என்பவர் புது வீடு கட்டிக் குடி புகுந்தவர். மூன்றாம் நாள் எல்லா நாதஸ்வர வித்துவான்களும் வந்து இணுவில்லை அந்த வீட்டிலை நாத மழை பொழிகிறார்கள.; என். கே. பத்மநாதகன் கோண்டாவில் பாலகிருஸ்ணன் பெரிய பெரிய வித்துவான்கள். வீரமணிஐயர் நீ இதை வாசி அதை வாசி என்று சொல்லிக்கொண்டிரந்தார் நாங்கள் கொஞ்ச இளம்பெடியன்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்ப என.; கே. பத்மநாதன் கல்யாணி இராகத்திலேஅற்புதமான பாடல்களை நாதஸ்வரத்திலே வாசித்தவுடனே உருகிப் போனார் வீரமணிஐயர். எட கல்யாணி! என்று சொல்லிவிட்டு என்ன செய்தார் என்றால் தனது கழுத்திலே இருந்த பட்டுச் சால்வையை எடுத்து என் கே பத்மநாதனுக்குப் போட்டார். பக்கத்திலே இருந்த துளசிகாமணி என்ற வடமராட்சியைச் சேர்ந்த  உத்தியோகத்தர்  இரசிகர் - அவர் என்ன செய்தார் என்றால் பக்கத்திலே இருந்த தன் மனைவியின  சங்கிலியை வாங்கிப் பத்மநாதனுக்குப் போட்டார். வந்திருந்த ஒரு வியாபாரி என்ன செய்தாரென்றால் - அவருக்குச் சங்கீதமே தெரியாது தன்ரை மோதிரத்தைக் கழற்றிப் பத்மநாதனுக்குப் போட்டார். பத்மநாதனுக்குப் பெரிய சந்தோசம் கலைஞர்களுக்குச் சந்தோசம். காரிலே பத்மந ாதன் ஏறப்போகிற நேரம.; கையைப் பிடித்துக்கொண்டு வீரமணி  ஐயா பட்டைப் போடடீர்கள் பவுண் பவுணாய் வந்தது. உங்களுக்கு நன்றி என்றார்.  'எடே பக்தா என்னிடம் இருந்த சால்வையைப் போட்டனடா தந்தி;ட்டுப் போடா! இருந்த சால்லையை உனக்குப் போர்த்தனான்! தந்திட்டுப் போடா!'  பத்மநாதன் சால்வையைக் கொடுக்கிறார.; பவுணை நான் கேட்கவில்லை கொண்டு போடா  என். கே.ப த்தமநாதன் ஒவ்வொரு நாளும் மாலையிலே நல்லூரிலே வாசித்துவிட்டு என்னோடை இருந்து கொஞ்ச நேரம்  பேசுவார். சொன்னார்.; 'என்னமாதிரி வீரமணி ஐயர் கல்யாணி இராகத்துக்குப் போட்ட அந்தப் பாட்டு --    சங்கிலி மோதிரம் என்று எனக்குக் கிடைத்ததப்பா'.

 

ஏனென்றால் ஒரு கலைஞனை இன்னொரு கலைஞன்தான முதல் இரசிக்கவேண்டும். ஒரு பேச்சாளனை இன்னொரு பேச்சாளன்தான் மதிக்கவேண்டும். அதைக காட்டித் தந்தவர் வீரமணி ஐயர். ஒரு கவிஞனை இன்னொரு கவிஞன்தான் இரசிக்கவேண்டும். ஒரு எழுத்தாளனை இன்னொரு எழுத்தாளன் தான் இரசித்தேன் என்று  சொல்லவேண்டும். எங்களுக்கெல்லாம் மனம் வராது. வீரமணி ஐயருக்கு வரும்! வீரமணி ஐயருக்கு அதெல்லாம் வரும்!.

அப்படி மகத்தான செயல்களை எல்லாம் செய்த அந்த வீரமணி  ஐயருடைய    அற்புதங்களை - அவருடைய சிறப்புக்களை - அவருடைய 72 மேளகர்த்தா கீர்த்தனைகள் என்கிற நூலை அவருடைய தலை மாணவியாகிய சிவசக்தி சிவநேசனிடம் நான் இலண்டனிலே சொல்லி அவர்கள் பணம் தந்து அதை அச்சேற்றி அதை வெளியடுகின்ற நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. வீரமணி  ஐயர் ஆனந்தக் கண்ணீர் விட்டார். திருந்செந்தூர்க் கீர்த்த னைகள் என்று  நிறையப் பாட்டுகள் எழுதிக் கட்டி வைத்திருந்தார். வீட்டைவந்து சொன்னார் 'பாரடா! 69இல் இருந்து எழுதிவைச்சிருக்கிறேன். ஆரடா கேட்கப்போறார்கள?; அச்சடிக்

அச்சடிக்க இயலாமல் கிடக்குதடா! அருமந்த பாடல்களடா! '

'நான் படிக்கிற காலத்திலே திருச்செந்தூருக்குப் போனனானடா திருச்செந்;தூர்  எவ்வளவ அற்புதமடா! திருந்செந்தூர்க் கீர்த்தனைகள் என்று 50 பாட்டுகள் கிடக்குதடா!. இதை அச்சடடா! நான் இந்தியாவிலே போய் ஆரிடம் கேட்கிறது. நான் சொன்னேன் எப்படியும் அதை அச்சேற்றவேண்டும் என்று இராயகுலசூரியர் எனறவர் கனடாவிலே தனது 60 ஆண்டு பிறந்ததினம் என்றார் நான் சொன்னேன் வீரமணி  ஐயரின் புத்தகத்தை வெளியிடுவோம் என்று. அவர் ஓம் என்று   பணத்தைத் தந்து அந்தப் புத்தகத்தைத் திருச்செந்தூர்க் கீர்த்தனைகளை வெளியிட்டோம். இப்படித்தான வீரமணி ஐயரின் ஒரு சில புத்தகங்கள் அச்சேற்றப்பட்டன.

2003 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்   வீரமணி ஐயா இறக்கிறபொழுது நான் கனடாவிலே. அங்கே இருந்து  தொலைக்காட்சியிலே தாவடி மயானத்திலே கொண்டுவந்து பிராமணரின் சம்பிரதாயம் - பெட்டிக்குள்ளே உடம்பை வைக்காது பாடையிலே கொண்டுவந்து தாவடியிலை தெருவிலே தூக்கிவைக்கிற பொழுது கனடாவிலே  வீடியோவிலே அதைப்  பார்த்துப்; பார்த்துக் கதறி அழுதார்கள். எந்தப் பெரிய அற்புதமான கலைஞனை அந்தத்  தாவடி றோட்டிலே …கடும் யுத்தம் நடந்துகொண்டடிருக்கின்ற காலம்.

இயக்கத்திலே இருந்து சிலர் வந்து நீங்கள் இந்தியாவிலே பாட்டு எழுதினீர்கள். எங்களுக்கும் பாட்டு எழுதவேண்டும் என்று. வீரமணி  ஐயர் 10 - 15  பாடல்கள் இயக்கத்துக்கும் எழுதினார்.

கொடி ஏறுகிற பாட்டுக்  கூட வீரமணி ஐயாதான் எழுதினது. தமிழன் காட்டிக்கொடுக்கிறதிலை தமிழனுக்கு நிகர் தமிழன்தான.; 96 ஆம் ஆண்டு திரும்பி வந்திருக்;;கிறம். ஒருநாள் திடீரென்று ஆமி பொலிஸ் எல்லாம்  வீரமணி ஐயர்வீட்டில் முற்றுகையிட்டு புலிக்குப் பாட்டு எழுதினவர் நீர்;;தானே வாரும் ஏறும். அப்ப  கூட்டிக்கொண்டு போனால் ஆளை முடித்துப்  போடுவார்கள்

அம்மா கதறி அழ - அயலவர்கள் எல்லாம்  ஐயோ பாவி இவர் ஒரு அப்பாவி. அவன்கள் துவக்கோடை வந்து பாட்டு எழுதச் சொன்னாங்கள் பாடினார்  இவரை ஏன் இப்ப பிடிச்சுக்கொண்டு போறியள்? யாருக்கும் தீங்கு செய்யாதவர். அவர் மண்டாடினார். பிள்;ளையாருக்கு ஒரு தேங்காய் உடைத்துவிட்டு வருகிறேன். என்னைக் கொண்டுபோங்கோ. தேங்காய் உடைத்துப்போட்டு மனைவியைப் பார்த்து  நான் திரும்பி வருவேனோ தெரியாது ஊரே கலங்கியது. வீரமணி ஐயரை மறுநாள் விட்டுவிட்டார்கள். வீரமணி ஐயர் உயிரோடு வந்தார். அந்த ஏக்கம்தான் கடைசிமட்டும் அவருக்கு இருந்த ஏக்கம்! நாய் குலைத்தாலும் யார் வருகிறார்களோ? யார் வருகிறார்களோ?

 

பாட்டெழுதின குற்றத்திற்காக இந்த உயிர் போய்விடுமோ? போய்விடுமோ? என்று எங்கி ஏங்கி  அவர் பட்ட பாடு! கதவைத் திறக்க மாட்டார் கொஞ்ச நாள்களாக.

கத்தி நான் வந்திருக்கிறேன் துறவும் என்றாலேதான் துற ப்பார்.

மிகவும் கஸ்ட்டப்பட்டார். நாங்கள் பாரதியாரைப் பற்றி  நாமக்கல் கவிஞரைப்பற்றி அறிந்து வைத்திருக்கிறோம்.  நம்ம ஊர்க் கவிஞர் எப்படி வாழ்ந்தார் என்ற அந்தச் சரித்திரத்தை நாம் உணரவேண்டும்.

இயலிசை வாரிதி வீரமணி ஒரு பெரிய விற்பன்னர். அவர் நாடகங்கள் இயற்றியவர். பாடல்கள் இயற்றியவர். நடன அரங்கேற்றங்கள் எல்லாம் நிகழ்த்தியவர். எத்தனையோ விதமான நடன நிகழ்ச்சிகளை எல்லாம் செய்தவர். கண்ணன் எங்கள் கண்ணனாம் கார்மேக வண்ணனாம் இப்படியான பாடல்களுக்கு நிகராகக் கண்ணனுக்குப்  பாட்டெழுதியவர்.  எந்தப் பெரும் கவிஞனின் பாட்டுக்கு நிகராகப் பாட்டெழுதக் கூடியவர்.

தூது செல்வாயோ முருகனிடம்  என்ற ஒரு பாடல்  மிகப் பாராட்டிச் சொல்லுவார்கள். அந்தப் பாடலை இயற்றும் போது இரண்டு மூன்று இடங்களில் உன்ரை பெயர் வரும் என்று  சொல்லுவார்.   பெரியவர்களைக் கேட்டால் அவர் பெரிய கடல் என்று சொல்லுவார்கள்.   

இதைப்போலத் திருக்குறட்; கீர்த்தனை என்று திருக்குறளை வைத்துக்கொண்டு கீர்த்தனைகளை எழுதினார். அந்த அதிகாரங்களில் வரும் முக்கியமானவற்றை வைத்துக்கொண்டு எழுதினார். இப்படி எத்தனையோ செய்த மகானை - அவர் செய்த சாதனைகளை - இன்றைக்கு இந்தச் சான்றோர் விழாவிலே  சிந்திக்கவைத்த எங்கள் பாரதி  ஐயாவுக்கு நன்றி கூறுகிறேன். ஏனென்றால் வீரமணி  ஐயர் இறந்த காலம் கடும் யுத்தம் நிழ்ந்துகொண்டிருந்த காலம். ஒரு நினைவு அஞ் சலிக்  கூட்டம்  கூட யாழ்ப்பாணத்திலே வைக்க முடியாது. சிறிய அஞ்சலிக்  கூட்டத்துக்கும் அனுமதி எடுக்கவேண்டும். பெரிய கஸ்ட்டம். ஒரு வருடத்துக்குப் பிறகுதான் வீரமணி யருக்கு ஒரு  கூட்டம் வைத்து  பரராசசேகரப் பிள்ளையார் வீதியிலை நான் பேசினேன். இன்றைக்குக்  கூட ஒரு  நினைவுச் சின்னம் இல்லை.   அவரைப் பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். பெரியவர்களைக் கேட்டால் பெரிய கடல் என்று சொல்லுவார்கள். சூலமங்கலம் சகோதரிகள் வந்தபோது பாட்டு எழுதிக் கொடுத்தார். சூலமங்கலம் சகோதரிகள் அந்தப் பாட்டுகளைக் கொண்டுபோய் இந்தியாவிலே பெருமை பெற்றார்கள். ஆனால் வானொலியிலே வீரமணிஐயரின்  பாட்டென்று சொல்லமாட்டார்கள். அதுதான் ஆகப்பெரிய கவலை.

கற்பகவல்லிப் பாட்டை இலங்கை வானொலி இந்திய வானொலி ஒருநாளாவது அது வீரமணி ஐயரின் பாட்டென்று சொல்லவில்லை. வீரமணி ஐயர் தவிப்பார். சொல்லுவார் பாரடா றேடியோவிலை பாட்டுப் போகுது! என்ரை பாட்டுப் போகுது! .சில நடன அரங்கேற்றங்களிலே போடுவார்கள் ஒரு ஐந்து நிமிடம் கூட இந்த வீரமணியால் யாத்துப்பட்டது என்று சொல்லுறார்களில்லை. நிகழ்ச்சி நிரலிலே  கூடப் போட்டிருப்பார்கள் ஆனால் அதிலே  கூட வீரமணியின் படைப்பென்று போடுவதில்லை. எல்லாவற்றையும் இந்த உலகத்துக்குக் கொடுத்துவிட்டுப் போகிறேன். என்றைக்கோ இந்த உலகம் உணரும்.   இதுதான் வீரமணி என்று உருக்கமாகப் பேசித் தனது பேருரையை நிறைவு செய்தார்.

No comments: