உலகச் செய்திகள்

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம்-இஸ்ரேலிற்கு ஆயுதங்கள் வெடிமருந்துகளை வழங்குவதை தடுக்க முயல்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் இணக்கம்

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி 

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை- 20 பேர் பலி

உக்ரைன் மீதான போரை 50 நாட்களுக்குள் நிறுத்தவில்லை என்றால்…” - ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

உக்ரைனிற்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புகின்றார் டிரம்ப் - புட்டின் மீது கடும் விமர்சனம்



காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம்-இஸ்ரேலிற்கு ஆயுதங்கள் வெடிமருந்துகளை வழங்குவதை தடுக்க முயல்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் இணக்கம் 

Published By: Rajeeban

17 Jul, 2025 | 11:34 AM

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யப்போவதாக கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை தடுக்கப்போவதாகவும இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான ஆறு நடவடிக்கைகள் குறித்த இணக்கப்பாட்டுடன் கொலம்பிய மாநாடு முடிவடைந்துள்ளது.

கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் ஹேக் குழு என  அழைக்கப்படுகின்றன. இந்த குழுவில் பொலிவியா கொலம்பியா இந்தோனேசியா கியுபா ஈராக் மலேசியா உட்பட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன.ஆயுதங்கள் வெடிமருந்துகள் இராணுவ எரிபொருள் தொடர்புடைய இராணுவ உபகரணங்கள் மற்றும் இரட்டை பயன்பாட்டு பொருட்களை இஸ்ரேலுக்கு வழங்குவதையோ அல்லது மாற்றுவதையோ தடுப்பது;

இஸ்ரேலுக்கு மேற்கூறிய பொருட்களை எடுத்துச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ள எந்தவொரு துறைமுகத்திலும் கப்பல்களின் போக்குவரத்துஇ நறுக்குதல் மற்றும் சேவையைத் தடுப்பது;

பங்கேற்கும் நாடுகளில் கொடியிடப்பட்ட கப்பல்களில் அத்தகைய பொருட்களை கொண்டு செல்வதைத் தடுத்தல்;

இஸ்ரேலின் பாலஸ்தீன சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஆதரிப்பதிலிருந்தும் அதன் சட்டவிரோத இருப்பை நிலைநிறுத்துவதிலிருந்தும் பொது நிறுவனங்கள் மற்றும் நிதிகளைத் தடுக்க அனைத்து பொது ஒப்பந்தங்களையும் அவசரமாக மறுஆய்வு செய்யத் தொடங்குதல்

சர்வதேச சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான இஸ்ரேலிய குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான கடமைகளுக்கு இணங்குதல்; மற்றும்

பாலஸ்தீனத்தில் செய்யப்படும் சர்வதேச குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான தேசிய சட்ட கட்டமைப்புகள் மற்றும் நீதித்துறைகளில் உலகளாவிய அதிகார வரம்பு கட்டளைகளை ஆதரித்தல்ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.   நன்றி வீரகேசரி 




காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி 

Published By: Rajeeban

18 Jul, 2025 | 08:02 AM

முன்னாள் பாப்பரசர் பிரான்சிஸ் நாளாந்தம் தொடர்பை பேணிய காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

தேவாலயத்தின் பணியாளர் ஒருவரும் தேவாலயத்தின் வளாகத்தில் உள்ள கரித்தாஸ் கூடாரத்தில் உளவியல் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரும் அவருடன் இருந்த மற்றுமொரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனல்ஸ் தெரிவித்துள்ளது.

உயிர்தப்புவதை நோக்கமாக கொண்டு தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனலின் செயலாளர் நாயகம் அலிஸ்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

இவர்களின் மரணம் முற்றுகையின் கீழ் பொதுமக்கள் மருத்துவஉதவியாளர்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை மீண்டும் நினைவுபடுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் ஏற்பட்ட இழப்புகள் குறித்து நாங்கள் துயரடைகின்றோம் சம்பந்தப்பட்ட தரப்பினரை வாழ்க்கையின் புனிதத்தினையும் அதனை பாதுகாப்பதற்கான தளத்தையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

பத்துபேர் காயமடைந்துள்ளனர் சிலருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன எறிகணை சிதறல்களால் காயங்கள் ஏற்பட்டுள்ளன என அல் அஹ்லில் அராபிய மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்ப்ராஹிம்சகல்லா  கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்.

தேவாலயம் தாக்கப்பட்டதாக மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்டதாக சகல்லா கூறினார். "நான் ஆம்புலன்ஸில் ஏறி நேராக தேவாலயத்திற்குச் சென்றேன்" என்று அவர் மேலும் கூறினார். "இந்த இஸ்ரேலியஇராணுவம் திமிர்பிடித்தது - அது கிறிஸ்தவரா அல்லது முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை அது ஒரு தேவாலயமா மசூதியா வீடா அல்லது ஒரு பள்ளியா என்பது கூட கவலையில்லை. நாங்கள் ஒரு கொடூரமான போரின் நடுவே வாழ்கிறோம்.

21 மாத காலப் போரின் போது குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த தேவாலய வளாகத்தையும் ஷெல் தாக்குதல் சேதப்படுத்தியது. தேவாலயத்திற்கு அடுத்துள்ள ஒரு பள்ளியில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த 75 வயது கிறிஸ்தவரான அட்டாலா டெர்சி கூறினார்: “நான் சில நிமிடங்கள் வெளியே இருந்த பிறகு வகுப்பறைக்குத் திரும்பியபோது ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. போர் தொடங்கியதிலிருந்து வெடிப்பின் சத்தம் இவ்வளவு தீவிரமாக இருந்தது இதுவே முதல் முறை

ஏப்ரல் மாதம் இறப்பதற்கு முன்பு முன்னாள்பரிசுத்த பாப்பரசர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த கேப்ரியல் ரோமனெல்லியை ஒவ்வொரு மாலையும் அழைப்பார். ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் காசாவில் பேரழிவுப் போரை தூண்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகுஇ அக்டோபர் 9 2023 அன்று அவர் வழக்கத்தைத் தொடங்கினார்.   நன்றி வீரகேசரி 






காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை- 20 பேர் பலி

16 Jul, 2025 | 03:39 PM

காசாவின் தென்பகுதியில் உள்ள உணவுவிநியோக மையத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக 20 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு காசாவில் உள்ள ஒரு உதவி விநியோக மையத்தில் "குழப்பமான மற்றும் ஆபத்தான சூழ்நிலையின் மத்தியில்" உணவு பெற முயன்ற இருபது பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கான் யூனிஸ் பகுதியில் உள்ளல் நடந்த "துயரமான சம்பவத்தில்" பத்தொன்பது பேர் மிதித்து கொல்லப்பட்டனர் மற்றும் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று காசா மனிதாபிமான அறக்கட்டளை தெரிவித்துள்ளது..

ஹமாஸ் ஆதரவாளாகள் சிலர் தூண்டிய குழப்பம் காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன என அறக்கட்டளை தெரிவித்துள்ளது

எனினும் இதனை உடனடியாக உறுதிசெய்யமுடியவில்லை என பிபிசி தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 






உக்ரைன் மீதான போரை 50 நாட்களுக்குள் நிறுத்தவில்லை என்றால்…” - ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

15 Jul, 2025 | 11:08 AM

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்விளாடிமிர்  ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கஜனாதிபதி பர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அவர் “நாங்கள் இரண்டாம் நிலை வரிகளை அமல்படுத்த இருக்கிறோம். 50 நாட்களில் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால் ரஷ்யா மீது 100 சதவீத வரிகள் விதிக்கப்படும். புட்டின் மீது நான் மிகவும் அதிருப்தியில் இருக்கிறேன். தான் சொல்லும் விஷயங்களை செய்யக்கூடிய நபராக நான் அவரை நினைத்திருந்தேன். அவர் மிகவும் அழகாக பேசுவார். ஆனால் இரவில் மக்கள் மீது குண்டுகளை வீசுவார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்களில் பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் பேட்டரிகள் இடம்பெறும்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசும்போதும் கூடபுட்டின் மீதான அதிருப்தியை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார்.   நன்றி வீரகேசரி 




உக்ரைனிற்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புகின்றார் டிரம்ப் - புட்டின் மீது கடும் விமர்சனம்

14 Jul, 2025 | 01:01 PM

அமெரிக்கா உக்ரைனிற்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேட்டோ தலைவர் ருட்டேயுடனான சந்திப்பிற்கு முன்னதாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பலவகையா நவீன தொழில்நுட்ப ஆயுதங்களை நாங்கள் உக்ரைனிற்கு அனுப்பவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அதற்காக எங்களிற்கு 100 வீதம் செலுத்தப்போகின்றனர் என தெரிவித்துள்ள டிரம்ப் உக்ரைனிற்கு மிகவும் அவசியமாக உள்ள பட்ரியட்களை அனுப்பவுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

புட்டின் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் அவர் நல்லவர் போல பேசுகின்றார் பின்னர் குண்டுகளை வீசுகின்றார் ஆகவே இது பிரச்சினையாக உள்ளது எனக்கு இது பிடிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 

No comments: