காலமும் கணங்களும் - முருகபூபதியின் இலக்கியப் பயணம்! இளவாலை எஸ். ஜெகதீசன்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா என இரு தேசங்களிலும் தனது எழுத்துலகப் பயணத்தைத் தொடரும் சுவை மிகும் எழுத்தாளர் முருகபூபதியின்  "காலமும் கணங்களும்" என்ற புதிய நூல்  அமேசன் கிண்டிலில் வெளியாவது அறிந்து பெரும் மகிழ்ச்சி. 

மேலோட்டமாக ஒரு பருந்துப் பார்வை பார்த்தேன். லயித்தேன்.

கனக செந்திநாதன் முதல் வ. ராசையா வரை, 25 ஆளுமைகளைப் பற்றிய அருமையான பதிவுகளின் திரட்டாய் இந்த நூல் அமைகிறது.

தனது வாழ்விலும் எழுத்துப் பயணத்திலும் மிகவும் நேசித்த கலை இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களின் வாழ்வையும் பங்களிப்பையும் முருகபூபதி அழகிய முறையில் ஆவணப்படுத்தியிருப்பது - ஒரு பொக்கிஷம். 

அவர்களின் அனுபவங்களையும், அரிய தருணங்களையும்,


வரலாற்றுப் பக்கங்களையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.

'காலமும் கணங்களும்' நூல், இலக்கிய உலகிற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. 

கலை, இலக்கியம், ஊடகம், சமூக சேவை எனப் பல்வேறு தளங்களில் பங்களித்த ஆளுமைகளின் நினைவுகளைப் போற்றி, அவர்களின் தியாகங்களையும் சாதனைகளையும் நினைவுபடுத்தும் இந்த நூல், அனைவருக்கும் ஓர்  உத்வேகமாக அமையும்.

முருகபூபதியின் எழுத்துத் திறனையும், சமூகப் பார்வையையும், அரிய தகவல்களைத் திரட்டும் அயராத உழைப்பையும் இந்த நூல் மீண்டும் ஒருமுறை உலகிற்கு வெளிப்படுத்தும்.

 'காலமும் கணங்களும்' மென்மேலும் பல வாசகர்களைச் சென்றடைந்து, அவர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடிக்கும் என்று உறுதி.

இந்த அரிய படைப்பிற்காக முருகபூபதிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், அவரது தொடர்ச்சியான இலக்கியப் பணிக்கு எனது முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கின்றேன் .

                      ---0---

No comments: