இந்திய சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை பெற்றுக் கொண்டவர்
எல் . வி. பிரசாத். ஆந்திர மாநிலத்தில் பிறந்து , பிழைப்பு தேடி பம்பாய் சென்று , அங்கே சாதாரணத் தொழிலாளியாக பணியாற்றி படிப் படியாக முன்னேறி நடிகனாக, இயக்குனராக, படத் தயாரிப்பாளராக, ஸ்டுடியோ அதிபராக உயர்ந்தவர் இந்த பிரசாத்.
1950துகளில் தமிழில் இவர் இயக்கிய மனோகரா, மிஸ்ஸியம்மா, மங்கையர் திலகம், கடன் வாங்கிக் கல்யாணம் போன்ற படங்கள் ரசிகர்களின் ஆதரவை பெரியளவில் பெற்றுக் கொண்டது. படம் பார்க்கும் ரசிகர்களை தியேட்டரில் அழ வைப்பதில் ஆகட்டும், வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் ஆகட்டும் இரண்டு விதமாகவும் படம் இயக்குவதில் திறமை பெற்றவர் பிரசாத். திரைப் படங்களில் நடிக்கும் போது மேடை நாடகங்களில் நடிப்பது போல் சத்தம் போட்டு பேசி நடிகத் தேவையில்லை இயல்பாக நடித்தால் போதும் என்று சிவாஜிக்கு எடுத்துச் சொன்னவரும் பிரசாத்தான். 1963ம் வருடம் சிவாஜி நடிப்பில் கறுப்பு வெள்ளை படமாக இருவர் உள்ளம் படத்தை தயாரித்து டைரக்ட் செய்த இவர் இரண்டு ஆண்டுகள் கழித்து கலரில் ஒரு படத்தை தயாரித்தார். படத்துக்கு பாட்டெழுத வந்த கண்ணதாசன் படத்தின் கதையை கேட்டு விட்டு படத்துக்கு இதயக் கமலம் என்று பெயர் சூட்டினார்.
புதிதாக திரைக்கு அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்து கொண்டிருந்த
இளம் நடிகர்களான கே. ஆர். விஜயா, ரவிச்சந்திரன் இருவரும் இதில் ஜோடியாக நடித்திருந்தனர். ரவிச்சந்திரனுக்கு இது இரண்டாவது படம். கே ஆர் விஜயாவுக்கு இதுவே அவர் நடித்த முதல் வண்ணப் படம். கதாநாயகன், கதாநாயகி இருவரும் கண்ணுக்கு குளிர்ச்சியான இளம் ஜோடிகள் என்றால் படமும் கண்ணுக்கு குளிர்ச்சியாக கலரில் இயற்கை காட்சிகளை கொண்டிருந்தது.
இளம் நடிகர்களான கே. ஆர். விஜயா, ரவிச்சந்திரன் இருவரும் இதில் ஜோடியாக நடித்திருந்தனர். ரவிச்சந்திரனுக்கு இது இரண்டாவது படம். கே ஆர் விஜயாவுக்கு இதுவே அவர் நடித்த முதல் வண்ணப் படம். கதாநாயகன், கதாநாயகி இருவரும் கண்ணுக்கு குளிர்ச்சியான இளம் ஜோடிகள் என்றால் படமும் கண்ணுக்கு குளிர்ச்சியாக கலரில் இயற்கை காட்சிகளை கொண்டிருந்தது.
கல்லூரித் தோழர்களான கமலா, பாஸ்கர் இருவரும் காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். இடையே உயர் கல்விக்காக பாஸ்கர் லண்டன் செல்கிறான். திடிரென்று ஒரு நாள் கமலா இறந்து விட்டதாக தகவல் வர நாடு திரும்பும் பாஸ்கர் மனைவின் பிரிவை எண்ணி எண்ணி துன்பப்படுகிறான். இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு பெண் தான்தான் பாஸ்கரின் மனைவி கமலா என்று உரிமை கொண்டாடுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அதிர்ச்சியடையும் பாஸ்கர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் அவள் தன் மனைவி அல்ல என்று மறுக்கிறான். ஆனால் கமலா என்று கூறிக் கொள்ளும் பெண் தனக்கும், பாஸ்கருக்கும் இடையே நடந்த சம்பவங்களை நீதி மன்றில் கூறி தான்தான் கமலா என்று வாதாடுகிறாள். அவள் யார் அவள் கூறுவது உண்மையா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்!
படத்தில் அடிக்கடி நீதிமன்ற காட்சிகள் வருகின்றன , ஆனால் அவை ரசிக்கும்படி அமைக்கப்பட்டிருந்தன . ஜட்ஜாக வரும் எஸ் வி சகஸ்ரநாமம் நல்ல ஜட்ஜ்! சில காட்சிகளில் வந்தாலும் ஸ்ரீராமின் பாத்திரம் கதைக்கு உதவுகிறது. படத்தின் உதவி இயக்குனரான ஆரணி ராமசாமிதான் இதில் காமெடின். ஏனோ அவரால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை .
படத்தின் ஹீரோயின் கே ஆர் விஜயா அழகும், இளமையும் ஒருங்கே சேர காட்சியளிக்கிறார். அதே சமயத்தில் நடிப்பிலும் முத்திரை பதிக்கிறார். ஒவ்வொரு தடவையும் தன்னை கமலா என்று நிரூபிக்க அவர் எடுக்கும் முயற்சிகளில் அவரின் நடிப்பு கவரும்படி இருந்தது. ரவிச்சந்திரன் டூயட் பாடி ஆடுகிறார், அவ்வப்போது சோகமாகவும் வலம் வருகிறார். இவர்கள் மத்தியில் ஷீலாவும் நடமாடுகிறார், நடனமாடுகிறார். டீ. எஸ் பாலையா படத்தில் கலகலப்பை ஏற்றப்படுத்த முயற்சி செய்கிறார். இவர்களுடன் எஸ் வி சகஸ்ரநாமம், ஆர் எஸ் . மனோகர், பாலாஜி, குமாரி ருக்மணி ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்தில் இடம் பெற்ற பாடல்களை கண்ணதாசன் இயற்றினார். கே.
வி மகாதேவன் இசையமைத்தார். இருவரின் கூட்டு முயற்சியும் சக்ஸஸ். சுசிலாவின் குரலில் ஒலித்த உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல பாடல் இதமாக மனதை வருடியது. மலர்கள் நனைந்த பனியாலே பாடல் அமைதியாக பூபாளம் பாடியது. இது தவிர நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன், தோள் கண்டேன் தோளே கண்டேன் , என்னத்தான் ரகசியமோ இதயத்திலே பாடல்களும் கவரும் வண்ணம் இசைத்தன.
வி மகாதேவன் இசையமைத்தார். இருவரின் கூட்டு முயற்சியும் சக்ஸஸ். சுசிலாவின் குரலில் ஒலித்த உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல பாடல் இதமாக மனதை வருடியது. மலர்கள் நனைந்த பனியாலே பாடல் அமைதியாக பூபாளம் பாடியது. இது தவிர நீ போகும் இடம் எல்லாம் நானும் வருவேன், தோள் கண்டேன் தோளே கண்டேன் , என்னத்தான் ரகசியமோ இதயத்திலே பாடல்களும் கவரும் வண்ணம் இசைத்தன.
படத்தின் கதை வசனத்தை ஆரூர்தாஸ் எழுதினார். மராட்டிய மொழியில் வெளிவந்த ஒரு படத்தின் கதையை செம்மைப்படுத்தி தமிழுக்கு தந்திருந்தார் அவர். கே எஸ் பிரசாத் தனது ஒளிப்பதிவின் மூலம் கலரில் இயற்கை காட்சிகளை படமாக்கினார்.
படத்தை கே எல் பிரசாத்தின் துணை இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீகாந்த் டைரக்ட் செய்தார். தொய்வில்லாமல் படத்தை நகர்த்திஇருந்ததை பாராட்ட வேண்டும். நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு நடுவே வெளியான இதயக் கமலம் நூறு நாட்கள் ஓடி வெற்றி படமானது. ஆனாலும் இந்தப் படத்துக்கு பிறகு எல் வி பிரசாத் ஏழாண்டுகளுக்கு மேல் தமிழில் படங்கள் எதுவும் எடுக்கவில்லை. அதன் பிறகு அவர் எடுத்த பிரியாவிடை படம் தோல்வியடைந்ததுடன் தமிழ் சினிமாவுக்கு பிரியாவிடை கொடுத்து விட்டார் எல் வி பிரசாத்!
No comments:
Post a Comment