1958ம் ஆண்டு தமிழர் இனக்கலவரத்தை நினைவுகூருதல்

 

67 ஆண்டுகளிற்கு முன்னர் இந்த நாளில்  இலங்கையில் சிங்கள காடையர்கள் தமிழர்களை தாக்கதொடங்கினார்கள் பாலியல்வன்முறைகளில் ஈடுபட்டார்கள் கொலை செய்தார்கள்.தமிழ் மக்களிற்கு எதிரான தொடர்ச்சியான பயங்கரமான இனவன்முறைகளில் ஒன்றாக இந்த வன்முறை வரலாற்றில் பதிவாகயிருந்து.

தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் அன்றைய நாட்களில் 300 முதல் 1500 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது.பலர் காயமடைந்தனர், சூறையாடல்கள், தமிழர்களின் வீடுகளை வர்த்தக நிலையங்களை அழித்தல், போன்றனவும் இடம்பெற்றன.

1958ம் ஆண்டு மே மாதம் 27 திகதி இலங்கை அரசாங்கம் அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது.

1956ம் ஆண்டில் சுதந்திர இலங்கையில் முதலாவது இன அடிப்படையிலான கலவரம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் இந்த வன்முறைகள் இடம்பெற்றன.

முதலில் 22ம் திகதி பொலனறுவையிலேயே வன்முறைகள் ஆரம்பமாகின,வவுனியாவில் இடம்பெறவிருந்த சமஸ்டி கட்சிக்கு சென்றுகொண்டிருந்த தமிழர்களை சிங்கள காடையர்கள் தாக்கியதை தொடர்ந்தே இந்த வன்முறைகள் வெடித்தன..

அதன் பின்னர் வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு பரவின.கொழும்பில் இந்து மதகுரு ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.கொழும்பு வீதிகளி;ல் அலைந்து திரிந்த சிங்கள காடையர்கள் தங்களை கடந்து செல்பவர்களால் சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியுமா என பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன, சிங்கள செய்தித்தாள்களை வாசிக்க முடியாதவர்கள் தாக்கப்பட்டனர் கொல்லப்பட்டனர்.

அரசாங்கம் ஐந்து நாட்கள் காத்திருந்துவிட்டு அவசரகாலநிலையை பிரகடனம் செய்தது.

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது அரசியல்வாழ்க்கையை தீர்மானித்தது 1958ம் ஆண்டு இனக்கலவரம் என ஒருமுறை தெரிவித்திருந்தார்.

மார்ச் 1984 இல் பேட்டியொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்

'நான் பாடசாலை மாணவனாகயிருந்தவேளை இடம்பெற்ற 1958ம் ஆண்டு இனக்கலவரம் என் மீது கடும் தாக்கத்தை செலுத்தியது, சிங்கள இனவாதிகளால் எங்கள் மக்கள் எப்படி ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்டார்கள் என்பதை நான் கேள்விப்பட்டேன்.

"எனது நண்பரின் குடும்பத்தை சேர்ந்த விதவைபெண் ஒருவரை ஒருமுறை நான் சந்தித்தேன்,அவர் இனவெறியர்களின் படுகொலை குறித்து விபரித்தார். இனக்கலவரத்தின் போது சிங்கள காடையர்கள் கொழும்பில் உள்ள அவரது வீட்டை தாக்கினார்கள். அவர்கள் கணவனை கொலை செய்தார்கள், வீட்டிற்கு தீ வைத்தார்கள்.அவரும் அவருடைய பிள்ளைகளும் கடும் காயங்களுடன் தப்பினார்கள்,அவரது உடலில் காணப்பட்ட காயங்களை பார்த்தவேளை நான் கடும் அதிர்ச்சியடைந்தேன்."

"சுடுதாரில் குழந்தைகளை வீசியது குறித்து நான் கேள்விப்பட்டேன். அவ்வாறான ஈவிரக்கமற்ற 

இதுபோன்ற கொடுமையான கதைகளைக் கேட்டபோது என் மக்கள் மீது எனக்கு ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டது. இந்த இனவெறி அமைப்பிலிருந்து என் மக்களை மீட்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வம் என்னை ஆட்கொண்டது. நிராயுதபாணிகளான அப்பாவி மக்களுக்கு எதிராக ஆயுத பலத்தைப் பயன்படுத்தும் ஒரு அமைப்பை எதிர்கொள்ள ஆயுதப் போராட்டம் மட்டுமே ஒரே வழி என்பதை நான் உறுதியாக உணர்ந்தேன்".என விடுதலைப்புலிகளின் தலைவர் தெரிவித்திருந்தார்.

கலவரங்கள் தன்னிச்சையாக நடக்கவில்லை என்று கவர்னர் ஜெனரல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில்  தனிப்பட்ட ரீதியில் தெரிவித்தார்  என குயின்ஸ் மாளிகையிலிருந்து செய்தி கசிந்தது.

அவர் கூறியது: ‘ஜென்டில்மேன் இது தன்னிச்சையாக வகுப்புவாதத்தின் வெடிப்பு என்று உங்களில் யாருக்காவது தெரிந்தால் அதை உங்கள் மனதில் இருந்து நீக்கிவிடலாம். 

இதை கவனமாகத் திட்டமிட்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை சரியாக அறிந்தவர்களின் பின்னால் இருந்த ஒரு சூத்திரதாரியின் 

 வேலை இது. இது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட ஒரு டைம்- இப்போதுபொம் வெடித்துவிட்டது.

1958 மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கை மக்கள் அனுபவித்த பயங்கரமும் வெறுப்பும் அந்த அடிப்படைத் தவறின் விளைவாகும். நம்மிடம் என்ன மிச்சம்? இடிந்து விழுந்த ஒரு தேசம் நாம் மறக்க முடியாத சில கொடூரமான பாடங்கள் மற்றும் ஒரு முக்கியமான கேள்வி: சிங்களவர்களும் தமிழர்களும் பிரியும் நிலையை அடைந்துவிட்டார்களா?   நன்றி வீரகேசரி 

No comments: