காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி- குழந்தை மருத்துவராக பல வருடங்களாக மருத்துவசேவையாற்றியவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்ட தாங்க முடியாத கொடூரம்
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்
காசாவில் மனித உரிமை மீறல்கள் - இஸ்ரேலுடனான வர்த்தக உறவு குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் பாடசாலை பேருந்தை இலக்குவைத்து தாக்குதல் - நான்கு மாணவர்கள் பலி
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும்: ட்ரம்ப் அறிவிப்பு
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் மருத்துவரின் 9 பிள்ளைகள் பலி- குழந்தை மருத்துவராக பல வருடங்களாக மருத்துவசேவையாற்றியவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்ட தாங்க முடியாத கொடூரம்
Published By: Rajeeban
25 May, 2025 | 11:00 AM
வைத்தியர் அலா அல் நஜார் என்பவரின் வீட்டை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் அவரது கணவரும் பிள்ளையொன்றும் காயமடைந்துள்ளனர் என நாசெர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவரின் உயிர்பிழைத்த 11 வயது மகனிற்கு சத்திரசிகிச்சையை மேற்கொண்ட பிரிட்டிஸ் மருத்துவர் கிரேஸ் குரூம் குழந்தை மருத்துவராக குழந்தைகள் சிறுவர்களிற்கு பல வருடங்களாக மருத்துவசேவையாற்றிய தாயார் ஒருவர் தனது அனைத்து சொந்தங்களையும் இழக்க நேரிட்டது தாங்க முடியாத கொடுரம் என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
வைத்தியரின் கணவர் கடும்காயங்களிற்குள்ளாகியுள்ளார்,தலையை குண்டுசிதறல்கள் தாக்கியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தந்தையும் மருத்துவர் நான் அவரிடம் கேட்டதற்கு அவர் தனக்கு அரசியல் இராணுவ தொடர்புகள் இல்லை சமூக ஊடகங்களில் நான் பிரபலமாகயில்லை என தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர் அலால அல் நஜாரின் குடும்பத்தினை பொறுத்தவரை இது நினைத்து பார்க்க முடியாத நிலைமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாசின் மருத்துவ பிரிவினரால் வெளியிடப்பட்ட பிபிசியினால் உறுதி செய்யப்பட்ட வீடியோக்களில் ஹான்யூனிசின் இடிபாடுகளிற்கு இடையிலிருந்துn சிறிய எரியுண்ட உடல்கள் மீட்கப்படுவதை காண்பித்துள்ளன.
வைத்தியரின் கணவர் தனது மனைவியை மருத்துவமனையில்விட்டுவிட்டு வீட்டிற்கு வந்த ஒரிருநிமிடங்களில் அந்த வீடு தாக்குதலிற்குள்ளானது என ஹமாசின் சுகாதார அமைச்சின் இயக்குநர் வைத்தியர் முனீர் அல்போர்ஸ் தெரிவித்துள்ளார்.மூத்த மகனிற்கு 12 வயது என அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்
புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் சர்வதேச மத்தியஸ்தத்தால் குறிப்பாக அமெரிக்காவின் செல்வாக்கால் ஏற்படவில்லை என்றுஇந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.நெதர்லாந்து ஊடகம் ஒன்றுக்கு எஸ்.ஜெய்சங்கர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. ஏனென்றால் அந்த நடவடிக்கையில் ஒரு தெளிவான செய்தி இருந்தது. ஏப்ரல் 22-ம் தேதி நாம் கண்டது போன்ற செயல்கள் (பஹல்காம் தாக்குதல்) நடந்தால்இ அதற்கு பதிலடி தரப்படும் என்பதுதான் அது. போர் நிறுத்த முயற்சி மே 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தால் தொடங்கப்பட்டது. போரை நிறுத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் ஹாட்லைனில் கூறியது.
அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றினோம். போர் நிறுத்தம் முற்றிலும் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையால் ஏற்பட்டது. சர்வதேச மத்தியஸ்தத்தால், குறிப்பாக அமெரிக்காவின் செல்வாக்கால் இது ஏற்படவில்லை.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ என்னிடம் பேசினார். பிரதமர் மோடியிடம் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசினார். அவர்களின் பங்கு கவலை தெரிவிப்பதாக மட்டுமே இருந்தது.
அமரிக்கா மட்டுல்ல, எங்களிடம் பேசிய அனைத்து நாடுகளுடனும் ஒரு விஷயத்தை நாங்கள் தெளிவாக கூறினோம். பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய விரும்பினால் அதை அந்நாடு எங்களிடம் சொல்ல வேண்டும் என்பதுதான் அது. பாகிஸ்தான் ஜெனரல் நமது ராணுவ ஜெனரலை அழைத்து பேசிய பிறகே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் தனது தலையீடு இருந்ததாகர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறிவரும் நிலையில் அமைச்சர் ஜெய்சங்கர் அதனை மீண்டும் நிராகரித்துள்ளார். நன்றி வீரகேசரி
காசாவில் மனித உரிமை மீறல்கள் - இஸ்ரேலுடனான வர்த்தக உறவு குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
21 May, 2025 | 11:27 AM
காசாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து இஸ்ரேலுடனான வர்த்தக உறவு குறித்து மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட இராஜதந்திரி கஜா கலாஸ் இதனை தெரிவித்துள்ளார்.
பிரசல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் இந்த சந்திப்பில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டார்கள் என தெரிவித்துள்ளார்.
காசாவில் காணப்படும் நிலைமை தாங்க முடியாதது என ஐரோப்பிய நாடுகள் கருதுவதையே இஸ்ரேலுடனான வர்த்தக உறவுகள் குறித்து மீள்பரிசீலனை செய்யும் தீர்மானம் தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட இராஜதந்திரி கஜா கலாஸ் நாங்கள் மக்களிற்கு உதவ விரும்புகின்றோம்,மனிதாபிமான உதவிகள் மக்களிற்கு சென்றடைவதை உறுதிசெய்ய விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன பகுதிகளில் பேரழிவு நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இஸ்ரேல் அனுமதித்துள்ள உதவிகளை வரவேற்கின்றோம் ஆனால் ஆனால் இது சமுத்திரத்தின் சிறுதுளியே,எந்த தடையுமின்றி மனிதாபிமான உதவிகள் செல்லவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நன்றி வீரகேசரி
பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் பாடசாலை பேருந்தை இலக்குவைத்து தாக்குதல் - நான்கு மாணவர்கள் பலி
21 May, 2025 | 11:07 AM
பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் பாடாசாலை பேருந்தினை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நான்கு பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
வெடிப்புசம்பவத்திலேயே உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
குஸ்டார் மாவட்டத்தில் பாடசாலை பேருந்து ஜீரோபொயின்ட் என்ற பகுதியில் தாக்குதலிற்குள்ளாகியுள்ளது.
கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் காயமடைந்தவர்களை குவட்டா கராச்சிக்கு கொண்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நன்றி வீரகேசரி
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும்: ட்ரம்ப் அறிவிப்பு
20 May, 2025 | 01:01 PM
ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக தளத்தில் ’‘ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் எனது இரண்டு மணி நேர உரையாடலை நிறைவு செய்தேன். அது மிகவும் சிறப்பாக நடந்தது என நான் நம்புகிறேன். ரஷ்யாவும் உக்ரைனும் உடனடியாக போர் நிறுத்தம் தொடர்பாக இன்னும் முக்கியமாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க உள்ளனர். அதற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்த ரத்தக்களரியான பேரழிவு முடிந்ததும் அமெரிக்காவுடன் பெரிய அளவிலான வர்த்தகம் செய்ய ரஷ்யா விரும்புகிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ரஷ்யாவுக்கு மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை உருவாக்க மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது. அதன் ஆற்றல் அளவில்லாதது. அதேபோல்இ உக்ரைனும் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வர்த்தகத்தில் பெரும் பயனாளியாக இருக்க முடியும். ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும்.
புதினுடனான அழைப்புக்குப் பிறகு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஜெர்மனி ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ் பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோருக்கு நான் தகவல் தெரிவித்துள்ளேன். போப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாடிகன் இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளது. செயல்முறை தொடங்கட்டும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment