தகுதியின்றிப் புகழைத் தேடாதே – அன்பு ஜெயா (பா வகை: வஞ்சி மண்டிலம்)

 

போற்றும் செயலினால் புகழ்வரும்

ஏற்றம் பெற்றிட எண்ணிடு

போற்றும் செயல்களே புரிந்துநீ

ஏற்றம் பெற்றுமே இன்புறு!       (1)

 

உன்னை உயர்த்திடும் உழைப்புமே

என்றும் அவ்வழி ஏற்றிடு,

நன்றாய்ப் போற்றிடும் நாடுமே

இன்பம் பெருகிடும் என்றுமே!     (2)

 

உழைப்பால் ஆயிரம் உயர்ந்தவர்

தழைத்து வாழ்ந்திடும் தளமிது,

பிழைகள் விலக்கிநீ பெரிதுமே

உழைத்தால் போற்றிடும் உலகமே!   (3)

   -----------------------

 

No comments: