ஆஸி நிரந்தரவாசிகளுக்கு பெறுமதியானதோர் வாய்ப்பு

 


ஆஸி நிரந்தரவாசிகளுக்கு

பெறுமதியானதோர் வாய்ப்பு 📚

ஆஸியில் நிரந்தர வதிவுடமை கொண்டோருக்கு புலமைப்பரிசிலோடு முற்றிலும் இலவசமாக  Master of Teaching கற்கை நெறி ஐ சிட்னிப் பல்கலைக்கழகம் (University of Sydney) வழங்குகிறது.
https://mteach.org.au/

பல்லின சமூகத்தில் தமிழ் மொழிப் பாடத்தினைக் கற்பிக்கும் நீரோட்டத்தில் இணைய விரும்பும் ஆசிரிய சமூகத்துக்கும், வேறு விருப்பப் பாட நெறியைக் கற்பிக்க விரும்புவோருக்கும் கூட இதுவோர் பெறுமதியான வாய்ப்பு.
சிட்னிப் பல்கலைக் கழகத்தின் கல்வித்திட்ட இணைப்பாளர்களாக இயங்கி வரும் ஜனார்த்தன் குமாரகுருபரன் மற்றும் பிரணவி
ராஜசிங்கம் ஆகியோர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோருகிறார்கள்.
விரிவான பகிர்வு இதோ

https://www.youtube.com/watch?v=Ii3t5T6bMh8

உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் எதிர்காலத்தைக் கூட ஆசிரியப் பணியில் ஈடுபடுத்த இதுவோர் அரிய வாய்ப்பு.

மே மாதம் 13 ஆம் திகதிக்கு முன்பதாக இந்தப் பெறுமதியான திட்டத்தைப் பயன்படுத்திப் பயன்பெறுங்கள்.

நன்றி
கானா பிரபா

No comments: