இலங்கைச் செய்திகள்

யாழ் - திருச்சி விமான சேவை 30ஆம் திகதி ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது

வவுனியா மாவட்ட செயலகத்தில் மாபெரும் தொழில் சந்தை

வடக்கின் கைத்தொழிலை மேம்படுத்த விசேட நடவடிக்கை ; கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன்

வடக்கின் கைத்தொழிலை மேம்படுத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர்கள் குழு விஜயம்

 '' பிள்ளைகளை ஒவ்வொருநாளும் தேடித்தேடி நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம் '' - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

ஆட்சியாளர்கள் மாறினாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை ; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி

திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி தொடர்பில் இந்திய தூதுவராலய உயர் அதிகாரிகள் கள ஆய்வு  



யாழ் - திருச்சி விமான சேவை 30ஆம் திகதி ஆரம்பம் 

Published By: Digital Desk 3

06 Mar, 2025 | 11:56 AM
image

யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இண்டிக்கோ விமான சேவையினரால் நடாத்தப்படவுள்ள இந்த விமான சேவை திருச்சியில் இருந்து மதியம் 01.25க்கு புறப்படும் விமானம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மாலை 02.25 மணிக்கு வந்தடையும். 

யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 03.10 மணிக்கு புறப்படும் விமானம், திருச்சி விமான நிலையத்தை மாலை 04.05 மணிக்கு சென்றடையும் என விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 




முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது 

Published By: Vishnu

06 Mar, 2025 | 04:22 AM
image

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றால் மேர்வின் சில்வா புதன்கிழமை (5) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொட பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.   நன்றி வீரகேசரி 





வவுனியா மாவட்ட செயலகத்தில் மாபெரும் தொழில் சந்தை  

05 Mar, 2025 | 12:44 PM
image

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் தொழில் சந்தை இன்று (5) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட செயலாளர் சரத் சந்திர, உதவி மாவட்ட செயலாளர் சாபர்ஜா, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) நா.கமலதாசன், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் காஞ்சனா குமார ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.

இத்தொழில் சந்தையில் 30க்கு மேற்பட்ட  நிறுவனங்கள் வருகை தந்திருந்ததுடன், 100க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்பினை பெறும் நோக்குடன் கலந்துகொண்டிருந்தனர். 







நன்றி வீரகேசரி 













வடக்கின் கைத்தொழிலை மேம்படுத்த விசேட நடவடிக்கை ; கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன்  

07 Mar, 2025 | 04:55 PM
image

வடக்கின் கைத்தொழிலை மேம்படுத்த விசேட நடவடிக்கை  இதற்காகவே கள ஆய்வை மேற்கொள்ள  அமைச்சர் குழு வருகை தந்ததாக கடற்தொழில்  அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவித்தார்.

காங்கேசன் துறை தொழிக்சாலைக்கு வருகை தந்து பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் முடப்பட்டுள்ள பாரிய கைத்தொழில் சாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பிலும் குறித்த பகுதிகளை கைத்தொழில் வலயமாக மாற்றுவதற்கான சாதக பாதக நிலமைகளை ஆராய்வதற்கும் அமைச்சர்குழுவினர் வருகை தந்துள்ளனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரிய தொழிற்சாலைகளுக்கு முன் நின்று கருத்துக்களை கூறவேண்டிய நாம் இன்று காடுகளாக உள்ள கைவிடப்பட்டுள்ள தொழிற்சாலைக்கு முன் நின்று கருத்துகளை பகிரவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

மீண்டும் இப்பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு கூடிய கவனம் எடுக்கவுள்ளோம்.

1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு எத்தகைய வியப்புடன் செயலாற்றிய கைக்தொழில் கள் இன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது .

இங்கு மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து  தொழில் சாலைகளை மீள செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை முன்னேடுக்கவுள்ளோம். அவ்வாறு முன்னேடுக்கின்ற வகையில் வடக்கு மாகாணத்தின் கைத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். 

அந்த வகையில் யாழ்ப்பாணத்தில்  முக்கியமாக காங்கேசன் தூறை சீமேந்து தொழிற்சாலையை மீள அமைப்பதற்கு  புனரமைப்பது தொடர்பில் ஆய்வுசெய்வதற்கு வந்துள்ளோம்.

எமது நாடு பல்வேறு பிரச்சினையால் இருப்பதால் எமது இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் இத்தகைய சுழலில் நாங்கள் இத்தகைய முயற்சிகளை செய்கின்றபோது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்க முடியும்  இதற்காக கள ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்காக இங்கு வந்துள்ளோம் என்றார்.    நன்றி வீரகேசரி 







வடக்கின் கைத்தொழிலை மேம்படுத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர்கள் குழு விஜயம்  

Published By: Digital Desk 2

07 Mar, 2025 | 04:44 PM
image

யுத்தம் காரணமாக மூடப்பட்ட இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அமைச்சர் குழு இன்று வெள்ளிக்கிழமை கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டனர்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகிய அமைச்சர் குழுவினரே சீமெந்து தொழிற்சாலையை பார்வையிடனர்.

இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா , யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் குறித்த குழுவினர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் செய்து பார்வையிட்டதுடன் அதன் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தது தேவைப்பாடுகள் பற்றி ஆராய்ந்தனர்.



நன்றி வீரகேசரி 







 '' பிள்ளைகளை ஒவ்வொருநாளும் தேடித்தேடி நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம் '' - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்  


08 Mar, 2025 | 01:56 PM
image

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுவரை தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை சனிக்கிழமை (08)  முன்னெடுத்துள்ளனர்.

கவனயீர்ப்பு போராட்டமானது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாமிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது  வட்டுவாகல் பாலம் ஊடாக பேரணியாக சென்று வட்டுவாகல் பகுதியில் இறுதியாக கையளிக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக வரை சென்று போராட்டம்  நிறைவடைந்திருந்தது.

கவனயீர்ப்பு போராட்டத்தின் போது  சர்வதேசமே பதில் சொல், சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன! , பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம், கொக்குதொடுவாய்  மனித புதைகுழி விடயத்தை  மூடி மறைக்க வேண்டாம்! எமக்கு உண்மையும்  நீதியும் வேண்டும், தமிழரை கடத்தாதே! இனவழிப்பு செய்யாதே! உங்கள் சிறைக்கூடம்  எங்கள் பிள்ளைகளுக்கு என்ன  கல்விக்கூடமா? எமது நாட்டில் நாம்வாழ உரிமையில்லையா? உலகமெல்லாம்  பெண்கள் உரிமை பேசும் இந்நாளிலும் தெருவில் கிடந்து அழவைத்திருக்கிறது அரசு ,போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். 

கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வட்டுவாகல் விகாரைக்கு செல்லும்  வழியில் அதிகளவவான பொலிஸார் கடமையில் ஈடுபட்டடிருந்தமையும் குறிப்பிடதக்கது.





நன்றி வீரகேசரி 






ஆட்சியாளர்கள் மாறினாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை ; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி  


08 Mar, 2025 | 02:10 PM
image

ஆட்சியாளர்கள் மாறுகின்றபோதும் எவருமே காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்துள்ளார். 

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு சனிக்கிழமை  (08) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா மேலும் தெரிவிக்கையில்,

புதிய ஆட்சியாளர்கள் மாறிவருகின்றபோதிலும் தமது குரலுக்கு எவருமே செவிசாய்க்கவில்லை. தமது தொடர்ச்சியான போராட்டங்களின்போது தமது பக்கமாக நின்ற அனுர அரசாங்கமானது தற்போது ஆட்சிக்கு வந்த பின்னராக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம் சாதிக்கின்றது.

காலங்கள் மாறுகின்றபோதிலும் எமது நாட்டில் தொடர்ச்சியாக ஆட்சியாளர்கள் மாறிவருகின்றபோதிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது நிலமை தொடர்கதையாகவே காணப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடி வீதியில் இறங்கி பெண்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கும் இந்த நிலையிலே தற்போது அத்தியாவசிய பொருட்களது விலைகளும் குறைந்தபாடில்லை ஆகையால் தமக்கு எங்கு பார்த்தாலும் இன்னல்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது.

 அதுபோலவே வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக வேலைபார்க்கச் செல்லும் பெண்களது நிலமைகளும் அவர்களது பிள்ளைகளது வாழ்வும் தொடர்ச்சியான இன்னல்களை சந்திக்கும் நிலையாகவே காணப்படுவதுடன் இதிலிருந்து பெண்கள் விடுபட்டு தமது வாழக்கையை நடத்த மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர்  தெரிவித்தார்.


நன்றி வீரகேசரி 








திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி தொடர்பில் இந்திய தூதுவராலய உயர் அதிகாரிகள் கள ஆய்வு  


Published By: Digital Desk 2

08 Mar, 2025 | 09:13 PM
image

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு  எதிர்காலத்தில் மேள்கொள்ளப்பட திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி தொடர்பில்  இந்திய தூதுவரக உயர் அதிகாரிகள் கள  ஆய்வுகளை மேற்கொண்டனர்.

சனிக்கிழமை (08) கள ஆய்வு மேற்கொண்டதுடன், ஆலயத்துக்கு வருகைதந்து பல விடயங்கள் கேட்டறிந்தனர்.  

இதன் போது, அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் ஆறு.திருமுருகன் ஆலய நிர்வாக சபைத் தலைவர் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியப்பிரதமரிடம் கோணேஸ்வரத் திருப்பணிக்கு உதவுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில்  குறித்த  திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி 




No comments: