-சங்கர சுப்பிரமணியன்.\
மின்மினியாய் கண் இமைகளை அடித்தாள்
என்னுள் நீங்கிடாத இடத்தையும் பிடித்தாள்
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழென
தன்னுள்ளே என்னை அன்பால் இணத்தாள்
கரங்களோடு கரங்கள் இணைய வியந்தேன்
அரங்கத்தில் என்னருகிருக்க மகிழ்ந்தேன்
மரங்களடர் சோலையில் நாங்களும் அமர
விரல்கள் விளையாடிட அமைதி காத்தோம்
வருங்காலம் என்ன செய்யலாம் என்றவளிடம்
விரும்பி பெற்றோரிடம் பேசலாம் என்றேன்
அருமையான பெற்றோர் எங்களிருவருக்கும்
கரும்பினும் இனிதானது எங்கள் வாழ்க்கை
அறமெனத் திளைத்திட்ட எங்கள் வாழ்விலே
மறமென வந்திட்டதுவே அந்த புற்றுநோயும்
நிறமிழந்து பட்டமரமாய் நானும் நிற்கிறேன்
உறவாய் வந்தவள் உயிரற்ற சடலமானாதால்
மின்மினியாய் என்பார்வை மங்கிப்போகுதே
என்னுள்ளே எப்போதும் சோகம் தாக்குதே
அன்பின் தேடலால் உள்ளமும் அழுகின்றதே
தன்னந்தனியே என்னுயிர் பிரிந்து போகுதே
No comments:
Post a Comment