மெல்பேர்ணில் பரத நாட்டிய சிறப்பு நிகழ்ச்சி - 'ஆபா' மற்றும் 'நாகமண்டலா' - 16.03.25


கலாவித்யா நடனப் பள்ளியானது அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்துடன் இணைந்து 'ஆபா' மற்றும் 'நாகமண்டலா' எனும், அருமையான உலகத்தரம் வாய்ந்த இரு நடன ஆற்றுகைகளை,மெல்பேர்ணில் - ஞாயிற்றுக் கிழமை 16.03.25 அன்று நடாத்தவிருக்கின்றது.


2017ஆம் ஆண்டு மெல்பேர்ணில் நிறுவப்பட்ட கலாவித்யா நடனப் பள்ளியானது, கலாக்ஷேத்ரா பாணியைப் பின்பற்றி பாரதநாட்டியத்தையும் பாரம்பரியத்தையும் மற்றும் தமிழர் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் நாட்டுப்புற நடனத்தையும் கற்பிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றது.

கலாவித்யா நடனப் பள்ளியின் குறிக்கோளானது, நடனத்திற்கான ஆழமான பற்றை உருவாக்கி, மாணவர்களில் சுய ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்து இந்தப் பழமையான கலைக்கான மரியாதையை ஊக்குவிப்பதாகும்.
  
அந்த வகையில்; கலை கலாசார விழுமியங்களை எம் மெல்பேர்ண் வாழ் கலா இரசிகர்களுக்கு எடுத்துவரும் முயற்சியாக, தன் அபரிமிதமான நாட்டிய வல்லமையால் உலகளவில் புகழ்பெற்றுவரும்  பரதக் கலைஞர் ஸ்ரீ பார்ஷ்வநாத் உபாத்யே அவர்கள், தம் அணியினர் வித்தகி ஸ்ரீமதி சுருதி கோபால் மற்றும் வித்துவான் ஆதித்யா பி.வி அவர்களுடன் தென்னிந்தியாவிலிருந்து மெல்பேர்ண் நகருக்கு வரவழைத்து, இவ்விரு பரதநாட்டிய நடன ஆற்றுகைகளை உங்களுக்காகத் தரவிருக்கின்றோம். அனைவரும் திரண்டு வருகைதந்து ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.     நன்றி.

No comments: