அவுஸ்திரேலியக் கம்பன் கழக "ஆடல் வேள்வி 2025"

 


வியன்மிகு பாராட்டுகளை ஈட்டிக் கொண்டிருக்கும்

உலகப்புகழ் பரதக் கலைஞர் ஸ்ரீ பார்ஷ்வநாத் உபாத்யே அவர்கள் (பெங்களூரு),
தம் அணியினருடன் இணைந்து வழங்கும் 'ஆபா' மற்றும் 'நாகமண்டலா' எனும்,
கலை நுணுக்கம் மிகுந்த இரு உயர் பரதநாட்டிய நிகழ்வுகள்,
இவ்வருட ஆடல் வேள்வியினூடு சிட்னியில் அரங்கேற்றவிருக்கின்றன.
நடன ஆச்சார்யார்கள், பரதக்கலை பயிலும் மாணவர்கள் மற்றும் கலாரசிகர்கள்,
அனைவரையும் கண்டு இரசித்து மகிழ வாரீர், எனப் பணிவன்போடு அழைக்கின்றார்கள் அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர்.

இந்நிகழ்விற்காக,
பிரத்தியேகமாகத் தென்னிந்தியாவிலிருந்து முன்னணி ஒளியமைப்பு வித்தகர்
ஒருவரையும் கழகத்தினர் அழைத்து வர இருக்கின்றனர்.
'சிட்னி வாழ் கலா இரசிகர்களினுடைய தொடர் ஆதரவினாலேயே எம்மால் இத்தகைய நல்ல படைப்புகளை,
அவுஸ்திரேலியக் கலை ஆர்வலர்களுக்காகக் கொணர முடிகின்றது'
எனக் கழகத் தொடர்பாளர்கள் அண்மையில் தமிழ் முரசு அவுஸ்திரேயாவுக்கு தெரிவித்திருந்தனர்.

'இந்நிகழ்வின் வெற்றியானது; வருடாந்தம் கழகத்தார் தொண்டுரீதியில் இலவசமாக நடாத்திவரும்,
கம்பன் விழாக்கள், தமிழ் இலக்கிய வகுப்புகள், 'வெல்லும்சொல்' திறனாளர் தேர்வுப் பேச்சுப்போட்டிகள் போன்ற,
பல சேவைகளுக்கு நிதி தந்து உதவும்' என்பதையும் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.

No comments: