தேடியே உதவி செய் - அன்பு ஜெயா (கழி நெடிலடி ஆசிரியப் பன்னிரு சீர் மண்டிலம்)

 

தன்னையும், சுற்றம் தன்னையும் காக்கத்

      தளர்வே இன்றிநாளும்

    தமக்கென உழைப்போர் அடுத்தவர் நலமும்

      சற்றே நினைப்பீரே!

உன்னையும் ஓர்நாள் அடுத்தவர் காப்பர்

      உணர்வீர் அதையும்தான்,

    உலகமும் நமக்கு அளித்தநல் பாடம்,

      உயர்வீர் நேயமதில்!

தன்னலம் மட்டும் காப்பது நன்றோ?

      தனித்தே வாழ்வதேனோ?

    தாயெனும் நாட்டில் வாழ்பவர் எல்லாம்

      தாயின் பிள்ளைகளே!

உன்மனம் மாற்று, உதவியை நாடி

      ஒடுங்கி வாழ்வோர்க்கே

    உற்றவோர் உதவித் தேடியே செய்தால்

      உலகும் உயர்ந்திடுமே!

2 comments:

Anonymous said...

சின்ன வசன கவிதை, ஆழமான பொருள், அருமை இரசித்தேன்.

Anonymous said...

மிக்க நன்றி