உலகச் செய்திகள்

அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

பாலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்களை இலக்குவைக்குமாறு டிரம்ப் உத்தரவு - யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சி

காசா மக்களை ஜோர்தான் எகிப்தில் மீள்குடியேற்றும் டிரம்பின் யோசனை - இரு நாடுகளும் நிராகரிப்பு

பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு வீராங்கனைகளை விடுதலை செய்தது ஹமாஸ் 


அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம் 

Published By: Digital Desk 3

30 Jan, 2025 | 10:12 AM
image

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரில் பயணிகள் விமானமொன்று ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது.

இதனை அமெரிக்காவின் போக்குவரத்து திணைக்களம் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) தெரிவித்துள்ளது.

இவ்விமானம் ரீகன் வொஷிங்டன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும்போது இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும்  நிறுத்தப்பட்டுள்ளதோடு, மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விபத்து இடம்பெற்றபோது விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்துள்ளதோடு, ஹெலிகொப்டரில் மூன்று அமெரிக்க இராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், "இப்பாரிய விபத்து" குறித்து தனக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகால உதவியாளர்களின் பணிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.   நன்றி வீரகேசரி 





பாலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்களை இலக்குவைக்குமாறு டிரம்ப் உத்தரவு - யூத எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முயற்சி 

Published By: Rajeeban

30 Jan, 2025 | 10:44 AM
image

யூதஎதிர்ப்பு நடவடிக்கைகளை அமெரிக்காவில் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பாலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்களை இலக்குவைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

யூதஎதிர்ப்பு நடவடிக்கைகளிற்கு எதிராக போராடுவதற்கான உத்தரவில்டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

மாணவர்கள் உட்பட பாலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு டிரம்ப் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்களின் போது சட்டங்களை மீறிய வெளிநாட்டு மாணவர்களை நாடு கடத்துவது உட்பட யூதுஎதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு சட்டத்தில் எவ்வாறான வழிவகைகள்உ ள்ளன என  அதிகாரிகள் ஆராயவேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த 60 நாட்களிற்குள் அதிகாரிகள் வெள்ளை மாளிகைக்கு இது குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்கவேண்டும்.

ஹமாஸ் ஆதரவு சுவரோவியங்கள் பல்கலைகழகங்களில் அச்சுறுத்தல்  போன்ற நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவின் நீதி திணைக்களம் ஆராயவேண்டும் எனவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

காசாமீதான இஸ்ரேலின் யுத்தத்தினை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்களில் இலக்குவைக்கும் விதத்திலேயே இந்த உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 





காசா மக்களை ஜோர்தான் எகிப்தில் மீள்குடியேற்றும் டிரம்பின் யோசனை - இரு நாடுகளும் நிராகரிப்பு 

Published By: Rajeeban

29 Jan, 2025 | 11:18 AM
image

காசாவின் மக்களை எகிப்து ஜோர்தானில் மீள்குடியேற்றவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை எகிப்தும் ஜோர்தானும் நிராகரித்துள்ளன.

எகிப்திய அரசாங்கம் பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலங்களில் வசிக்கவேண்டும்,அவர்களின் நியாயபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவேண்டும்,சர்வதேச சட்டங்களை மதிக்கவேண்டும் என்பதை ஆதரிக்கின்றது என அறிக்கையொன்றில்  எகிப்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனியர்களை எகிப்தில் மீள்குடியேற்றுவதை எகிப்திய மக்கள் எதிர்க்கின்றனர்.

பாலஸ்தீனியர்கள் சிலரை சினாய் மீள்குடியேற்றுவது சுலபம் ஆனால் அவர்களை எகிப்திற்குள் உள்வாங்கவேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்வது கடினம் என எகிப்தின் ஜனாதிபதி அப்தெல் பட்டெல் சிசி சமீபத்தில் எகிப்தின் இராணுஅதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்களை எகிப்தில் மீள்குடியேற்றுவதை எகிப்திய மக்கள் எதிர்ப்பார்கள் என கெய்ரோவின் அமெரிக்க பல்கலைகழகத்தில் கற்பிக்கும் பேராசிரியர் போல் சுலிவன் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க விரும்பும் எகிப்தின் ஜனாதிபதி எவரும் இந்த யோசனையை  ஏற்றுக்கொள்ள முடியாது டிரம்பின் இந்த யோசனையை எகிப்தினை ஸ்திரதன்மை இழக்க செய்யும்; பிராந்தியம்ஸ்திரதன்மையை இழக்கும் நிலையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை டிரம்பின் யோசனையை நிராகரித்துள்ள ஜோர்தானின் வெளிவிவகார அமைச்சர் பாலஸ்தீன் பாலஸ்தீனிற்கானது ஜோர்தான் ஜோர்தானிற்கானது என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜோர்தானும் எகிப்தும் மேலும் அதிகளவில் காசா மக்களை உள்வாங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்துகாசாவில் இனச்சுத்திகரிப்பு குறித்து அச்சம் வெளியாகியுள்ளது.

காசாவை சுத்தம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ள டொனால்;ட் டிரம்ப் காசாவிலிருந்து மேலும் அதிகளவு மக்களை எகிப்தும் ஜோர்தானும் உள்வாங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்தை பாலஸ்தீன ஜிகாத் அமைப்பு கண்டித்துள்ளது.இது யுத்த குற்றவாளிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

டிரம்பின் கூற்று கண்டித்தக்கது என தெரிவித்துள்ள பாலஸ்தீனிய ஜிகாத் அமைப்பு டிரம்பின் கருத்துக்கள் யுத்த குற்றவாளிகளை ஊக்குவிக்கும் கட்டமைப்பிற்குள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்குள் பொருந்தக்கூடியவை, எங்கள் மக்களை தங்கள் நிலத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவது குறித்து டிரம்ப் கருத்து தெரிவி;க்கின்றார் என குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் இந்த கூற்றை கருத்தில்கொள்வது அவசியம் கடந்த ஒன்றரை வருட யுத்தத்தின்போது இவ்வாறான கருத்து ஏற்கனவே வெளியாகியுள்ளது என தெரிவித்துள்ள கத்தாரில் உள்ள ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக பேராசிரியர் அப்துல்லா அல் அரியன்,யுத்தத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேலிய அதிகாரிகளும் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளனர்,பாலஸ்தீனிய நிலப்பரப்பை முடிந்தளவு இனச்சுத்திகரிப்பு செய்வது குறித்து கருத்து வெளியிட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்   நன்றி வீரகேசரி 






பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு வீராங்கனைகளை விடுதலை செய்தது ஹமாஸ் 

25 Jan, 2025 | 05:34 PM
image

ஹமாசின் பிடியில் பணயக்கைதிகளாகயிருந்த நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகள்  விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

அவர்கள் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளனர்.

காசாவின் பாலஸ்தீன சதுக்கத்தில் இவர்கள் விடுதலைசெய்யப்பட்டவேளை ஆயுதமேந்தியவர்களும் பொதுமக்களும் அப்பகுதியில் பெருமளவில் காணப்பட்டனர் என பிபிசி தெரிவித்துள்ளது.   நன்றி வீரகேசரி 




No comments: