- சங்கர சுப்பிரமணியன்.
நிறைகுட மென்றும் கூத்தாடா திருக்கும்
குறைகுடம் என்றும் கூத்தாடித் தீர்க்கும்
கற்றோர் நிறைந்த அவையில்
கற்றறியான் மொழிந்த கவிய தாகுமே
நல்லதை சொன்னால் நாடும் போற்றும்
இல்லையா னாலுமொ ன்றுங் கெடாது
அல்லவை தேய்ந்து அறமாக
சொல்வதில் பிழை ஒன்றும் வாராதே
வள்ளல் குணமே வறியோர்க் கீதல்
தெள்ளத் தெளிவா யதும் அறமாம்
உள்ளத் தெளிவொடு இருந்தால்
அள்ளக் குறையா செல்வம் பெருகுமே
வற்றா ஆறும் வறண்டிடாது போன்று
கற்றோர் கல்வி எந்நாளு மிருக்கும்
பெற்றதில் அதுவே பேறாகிட
உற்றார் உறவும் போற்றும் கற்றதனாலே
தன்னிலை மறவா மன்னனு மிருந்தால்
பொன்னும் பொருளும் தந்து மகிழ்வான்
இன்னும் வேண்டு மென்றாலும்
தன்னையே தந்தும் மகிழ்ந்து நிற்பானே
குறைகுடம் என்றும் கூத்தாடித் தீர்க்கும்
கற்றோர் நிறைந்த அவையில்
கற்றறியான் மொழிந்த கவிய தாகுமே
நல்லதை சொன்னால் நாடும் போற்றும்
இல்லையா னாலுமொ ன்றுங் கெடாது
அல்லவை தேய்ந்து அறமாக
சொல்வதில் பிழை ஒன்றும் வாராதே
வள்ளல் குணமே வறியோர்க் கீதல்
தெள்ளத் தெளிவா யதும் அறமாம்
உள்ளத் தெளிவொடு இருந்தால்
அள்ளக் குறையா செல்வம் பெருகுமே
வற்றா ஆறும் வறண்டிடாது போன்று
கற்றோர் கல்வி எந்நாளு மிருக்கும்
பெற்றதில் அதுவே பேறாகிட
உற்றார் உறவும் போற்றும் கற்றதனாலே
தன்னிலை மறவா மன்னனு மிருந்தால்
பொன்னும் பொருளும் தந்து மகிழ்வான்
இன்னும் வேண்டு மென்றாலும்
தன்னையே தந்தும் மகிழ்ந்து நிற்பானே
No comments:
Post a Comment