ஆற்றலில்லா மாந்தருமே ஆற்றல்தான் பெற்றிடவே
அன்புடனே முயன்றிடுதல் ஏற்பீர் – அன்றேல்
அவர்களையே குறைகூறல் தவிர்ப்பீர்!
ஏற்றமுடன் எல்லோரும் வாழ்ந்திடவே
மாந்தரெல்லாம்
இயன்றதொருப் பங்கினையே தாரும் – வையம்
எல்லோர்க்கும் இன்பமென மாறும்!
(1)
ஏற்றமது கண்டிடவே முயல்பவரின்
உழைப்பிற்கே
இயன்றவரை உதவிதன்னைச் செய்வீர் – அன்றேல்
ஏளனமாய்ப் பேசுவதைத் தவிர்ப்பீர்!
போற்றவொரு மனமிருந்தால் போற்றுங்கள்
முயற்சியினைப்
போரிட்டுத் தோற்றோரின் பெருமை – அதுவே
போரிட்டோர் மீண்டெழுப்பும் திறமை!
(2)
------------------------------------------
No comments:
Post a Comment