முதன் முதலாக ஐரோப்பாவில் இசை நிகழ்வுக்காக வருகை தந்துள்ள வாகீசன் இராசையா, திசோன் விஜயமோகன், அத்வீக் உதயகுமார் ஆகியோர் நோர்வே, டென்மார்க், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இசை நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.

எனினும், பிரான்சில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் முன்பு தமிழ் சமூக வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட ஒரு தாயகச் செயற்பாட்டாளரின் மீது தாக்குதல் மேற்கொண்டதற்காக பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சோனா சோதிராசா என்ற பெண்ணும், தாயகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் முன்னாள் போராளிகளையும் அவர்களின் குடும்பத்தினையும் அவதூறாக சமூக வலைதளங்களில் எழுதி வருகின்ற அம்மு ரஞ்சித் குமார் என்பவரும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, குறித்த நிகழ்வு பிரான்ஸில் பெரும் சர்ச்சையையும் பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது.


மேலும், இந்த நிகழ்விற்கு முதன்மை அனுசரணை வழங்குபவர்கள் பிரான்ஸில் உள்ள வன்முறை குழுக்களைச் சார்ந்தவர்கள் என்பதும், நிகழ்வின் ஒருங்கமைப்பாளர்களில் ஒருவரும் பிரான்ஸில் செயல்படும் “விழுதுகள்” என்ற வன்முறை கும்பலைச் சேர்ந்தவராக இருப்பதாலும், நிகழ்வில் கலந்துகொள்ள உள்ள வாகீசன் இராசையா, திசோன் விஜயமோகன், அத்வீக் உதயகுமார் ஆகியோர் பிரான்ஸில் சட்டசிக்கல்களில் சிக்கிக்கொள்ளவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக திசோன் மற்றும் இலங்கையில் உள்ள முக்கியக் கலைஞர்கள், பிரான்சில் உள்ள தாயகச் செயற்பாட்டாளர்களுடன் தொலைபேசியில் விளக்கமளித்திருந்த போதும், இதுவரை ஒரு தீர்வுக்கு வராததால், ராப் சிலோன் கலைஞர்கள் நடத்தவுள்ள இந்த இசை நிகழ்வு வன்முறையாக முடிந்துவிடுமோ என்ற கவலையை பிரான்ஸ் தமிழ் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது.


ஐரோப்பிய கலைஞர்கள் சங்கம்-பிரான்ஸ்

பின் இணைப்புகள்: சோனா சோதிராசா அவர்கள் கைதாயி இருத்த கால்ல்துறையின் ஆவணத்தில் பகுதி மற்றும், அவரன் புகைப்படம் இணைப்பட்டுள்ளது

No comments: