தியானத்தின் மகிமை

 

சிவஞானச் சுடர்

பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

(வாழ்நாள் சாதனையாளர்)

சிட்னி -அவுஸ்திரேலியா


 



உடலுக்கு உரமளிக்க உடற்ப யிற்சி! - எங்கள்

உயிருக்;கு உயர்வுதரும் சிவத்தி யானம்!

சடப்பொருளாய் அழிந்திடுமே மனிதரின் உறுப்பு!   - உயிர்

தான்செயும்;  வினையாலே எடுத்திடும் பிறப்பு!









ஆறறிவு மனிதர்களும் பக்குவம் என்று - வாழ்வில்

ஆற்றிடுவர் அரன்பணியை அறவழி நின்று 

பேரறிவை  நோக்கியவர் எடுத்திடும் பயணம் - ஈற்றில்

பெரும்பயனைத் தரவைக்கும் சிவத்தி யானம்.

  

தியானத்தின் மூலதனம் உளத்தின் தூய்மை - புறத்

தேகத்தின் சுத்தங்கூடப் பலனைக் கூட்டும்!

மயானத்தின் அமைதிநிலை சூழலிற் தேவை - பின்

மனதும்ஒரு முகமாகிpப் பாதையைக் காட்டும்!









தியானமென்ப தெம்மனத்தின் ஒருமுகப் பயணம்! -அது

தெரியாததைத் தெரியவைக்கும் உள்முகப் பயணம்!

நியாயமாகப் பார்த்தாலது உணர்வின் விழிப்பை - எம்மில்

நிலைக்கவைத்து வெளிக்கொணரும் உண்மை பலதை!

 










ஒருமுகமாய் உள்முகமாய் மனதை அடக்கி - நீவிர்

உறுதியுடன் பயணித்தால் அமைதி மலரும்;!

அருமருந்தாய்; விழிப்புணர்வு அன்பொடு கலந்து - எங்கள்

அகத்திலெழப் பொலிவினொளி; முகத்தினில் நிலவும்!














மனநோயை  அகற்றுவதும் தியானம் அல்லவா- மேலும்

மனிதனவன் புத்திதனை  வளர்க்கும் அல்லவா?

இனந்தெரியா நிம்மதியும் பிறக்கும் அல்லவா?- இது

என்றும்மன நிறைவைத்தரும் உபாயம்  அல்லவா?

 

தியானமென்றும் இரத்தழுத்தம் தீர்க்கு மல்;லவா?-- நோயின்

தீவிரத்தை எதிர்க்கும்; சக்தி கொண்ட தல்லவா

வியாதிநீக்கி மேனிதன்னை  மினுங்க வைக்குமே! - இறை

விரும்பியின்பம் தரும்நிலையும் விரைந்து கிட்டுமே!










எம்மிடையே தூங்குகின்ற  இறையின் சக்தியை - நாம்

இயற்றிவரும்  தியானம் என்றும் வெளிக்கொணருமே!

பெம்மானிடம் பத்திவைக்க வழிவ குத்திடும் - அது

பிறப்பறுத்துப் பிறக்கவைக்கும் பேரா னந்தமே!

                                        



 






No comments: