நாநிலம் உன்னை வாழ்த்தியே நிற்கும் !

 



















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா 



செல்வம் வேண்டும் திருடல் தீமை
ஆசை அவசியம் அழிப்பது ஆகா
உழைப்பு முக்கியம் ஊழல் களை
ஏழ்மை என்பது இழிவு அல்ல




பொய்மை களவு பொறாமை எல்லாம்
கொல்லும் விஷமே நல்லாய் உணரு
அல்லும் பகலும் அநியாயம் செய்தால்
அமைதி மறையும் ஆனந்தம் அழியும்

மற்றவர் சொத்தை மறந்திட வேண்டும்
மறந்தும் கவர்ந்திட நினைப்பது தவறு
ஏய்த்துப் பிழைப்பது என்றும் நிலைக்கா
இருப்பது மேலென எண்ணிடல் சிறப்பே

உயிரினை வதைக்கா உயிரினை நேசி
உளமதில் என்றும் கருணை இருத்து
நலமதை எண்ணிட மனமதைத் திருப்பு 
நாநிலம் உன்னை வாழ்த்தியே நிற்கும் 

No comments: