உலகச் செய்திகள்

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ ; 9,400 ஏக்கருக்கு பரவியது

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து - ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்எச்சரிக்கை

டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள்

நிம்மதியாக உறங்கினோம் "; - யுத்தமற்ற இரவு குறித்து காசா மக்கள்

டிரம்பின் குடியேற்றவாசிகளிற்கு எதிரான நடவடிக்கை சிக்காக்கோவிலிருந்தே ஆரம்பமாகும் - அமெரிக்க ஊடகங்கள்



லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே மீண்டும் காட்டுத்தீ ; 9,400 ஏக்கருக்கு பரவியது 

Published By: Digital Desk 3

23 Jan, 2025 | 11:37 AM
image

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ்ஏஞ்சல்ஸின் வடப்பகுதியில் புதன்கிழமை (23) புதிதாக காட்டுத்தீ பரவியுள்ளது.

காட்டுத் தீ  பலத்த காற்றினால் பற்றைக் காடுகளில் 9,400  ஏக்கர் நிலப்பரப்புக்கு (32 சதுர கிமீ) வேகமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் 19,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

லொஸ்ஏஞ்சல்ஸின் பெருநகரப் பகுதியில் ஏற்பட்ட இரண்டு பாரிய காட்டுத்தீகளை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு வீரர்களை மீண்டும்  வடக்கே சுமார் 50 மைல் (80 கிமீ) தொலைவில் உள்ள பாரிய காட்டுத்தீயை அணைக்க வரவழைக்கப்பட்டுள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சூறையாடிய இரண்டு பாரிய காட்டுத்தீகளில் ஒன்றான ஈடன் தீ மண்டலத்தின் அரைவாசி அளவுக்கு புதனன்று ஒரு சில மணிநேரங்களில் காட்டுத் தீ பரவியுள்ளது.

காஸ்டிக் பகுதியில் மொத்த சனத்தொகையில் சுமார் 19,000 பேரை கட்டாயம் வெளியேற்ற வேண்டும் என்கின்ற உத்தரவுகளின் கீழ் இருப்பதாக லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 

மேலும் 16,000 பேர் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சான் கேப்ரியல் மலையில் உள்ள  700,000 ஏக்கர் (2,800-ச.கி.மீ) தேசிய பூங்கா மூடப்பட்டுள்ளது.

வேகமாக பரவும் தீயினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தெற்கு கலிபோர்னியாவைச் சுற்றி சுமார் 1,100 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக வள வள மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.   நன்றி வீரகேசரி 




இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் ஆபத்து - ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம்எச்சரிக்கை

Published By: Rajeeban

23 Jan, 2025 | 03:40 PM
image

இஸ்ரேல் மேற்குகரையை தன்னுடன் இணைத்துக்கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.

டாவோஸில் இடம்பெறும் உலக பொருளாதார போராத்தின் உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேற்குகரைய தன்னுடன் இணைத்துக்கொள்வதற்கான தருணம் இது என இஸ்ரேல் கருதும் ஆபத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காசா குறித்து இஸ்ரேல் ஆர்வமாக உள்ளதா என்பது தெரியவில்லை ஆனால் மேற்குகரை குறித்து இஸ்ரேல் ஆர்வம் கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

காசாவில் ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த உதவியமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவரால் அந்த நேரத்தில் வலுவான பங்களிப்பு வழங்கப்பட்டது என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

மேற்குகரையில் உள்ள ஜெனினில் தீவிரவாத அமைப்புகளிற்கு எதிரான நடவடிக்கையில்  இஸ்ரேலிய படையினர் ஈடுபட்டுள்ள நிலையிலேயே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை காரணமாக நால்வர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீனிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இரும்புசுவர் என்ற நடவடிக்கையை செவ்வாய்கிழமை ஆரம்பித்துள்ளது.   நன்றி வீரகேசரி 





டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள்

20 Jan, 2025 | 10:19 PM
image

டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள் ஜோர்ஜ் புஷ் பில்கிளின்டன் பராக் ஒபாமா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.எனினும் மிச்செல் ஒபாமா டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

நன்றி வீரகேசரி 





நிம்மதியாக உறங்கினோம் "; - யுத்தமற்ற இரவு குறித்து காசா மக்கள்

Published By: Rajeeban

20 Jan, 2025 | 05:08 PM
image

2003 ஒக்டோபர் 7 ம் திகதி யுத்தம் ஆரம்பித்த பின்னர்  முதல்தடவையாக நேற்றிரவு நிம்மதியாக உறங்கியதாக தெரிவித்துள்ள காசா மக்கள் தங்களால் இதனை நம்பமுடியாமலுள்ளது என  குறிப்பிட்டுள்ளனர்.

யுத்த ஆரம்பித்தவேளை பல்கலைகழக மாணவனாக காணப்பட்ட ,பின்னர் ஊடகவியலாளராக மாறிய மஹ்மூட் ரொஸ்டொம் யுத்தம் ஆரம்பித்த முன்னர் முதல்தடவை நிம்மதியாக உறங்கினோம் என தெரிவித்துள்ளார்.

எங்கும் எப்போதும் எந்தநேரத்திலும் குண்டுகள் விழுந்து வெடித்ததால் யுத்தத்தின் போது என்னால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை, என பிபிசிக்கு தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பாக உணர்ந்ததால் நேற்று நான் நிம்மதியாக உறங்கினேன் கடந்த 470 நாட்களில் நேற்றே நான் நிம்மதியாக உறங்கினேன் என தெரிவித்துள்ளார்.

நான் கண்விழித்ததும் எனது அயலில் உள்ளசிறுவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் நான் அதிர்ச்சியடைந்தேன்,யுத்தத்திற்கு முன்னர் போல சிறிய உணவுபண்டங்களை விற்பவர்களை நான் பார்த்தேன் மீண்டும் பிறந்தது போலயிருந்தது என அவர்தெரிவித்துள்ளார்.

அச்சமின்றி பதற்றமின்றி உறக்கத்திலிருந்து கண்விழித்தேன்என்பதை என்னால் நம்பமுடியவில்லை என தெரிவித்துள்ள சபா முகமட் என்பவர் என்னால் இதனை நம்பமுடியவில்லை பறவைகளின் சத்தம் இனிமையாகயிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.ஷ

இவர் கான் யூனிசில் முகாமில் வசித்துவருகின்றார், எனது அழகானவீடு முற்றாக அழிந்துவிட்டது,எனினும் நான் அமைதியை மகிழ்ச்சியை அனுபவிப்பேன் என தெரிவித்துள்ள அவர் இன்னமும் துயரத்தி;ற்கும் கவலைக்கும்    நன்றி வீரகேசரி 






டிரம்பின் குடியேற்றவாசிகளிற்கு எதிரான நடவடிக்கை சிக்காக்கோவிலிருந்தே ஆரம்பமாகும் - அமெரிக்க ஊடகங்கள்

Published By: Rajeeban

20 Jan, 2025 | 10:51 AM
image

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் டொனால்ட் டிரம்ப் சிக்காக்கோவில் குடியேற்றவாசிகளிற்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பிப்பார் என பெயர் குறிப்பிடவிரும்பாத அதிகாரிகள் பல ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர் என கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது

சமஸ்டி அதிகாரிகள் சுமார் 300 குடியேற்றவாசிகளை  இலக்குவைத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்,அனேகமாக குற்றப்பின்னணி உள்ளவர்களையே இலக்குவைப்பார்கள் என அதிகாரியொருவர் ஏபிக்கு தெரிவித்துள்ளதன் மூலம்  தேர்தல்காலத்தில் வாக்குறுதியளித்தபடி குடியேற்றவாசிகளை பெருமளவில் நாடு கடத்துவதில் டிரம்ப் ஈடுபடுவார் என்பதை உறுதி செய்துள்ளார்.

குடியேற்றவாசிகளிற்கு எதிரான நடவடிக்கை சிக்காக்கோவிலேயே ஆரம்பமாகும்,என தெரிவித்த அதிகாரியொருவர் தனது பெயர் விபரங்களை வெளியிட மறுத்துள்ளார்.

இந்த வாரம் முழுவதும் கைதுகள் இடம்பெறலாம்.

இதேவேளை குடியேற்றவாசிகளை இலக்குவைக்கும் நடவடிக்கை சிக்காக்கோவிலேயே ஆரம்பமாகும் என வோல்ஸ்ரீட் ஜேர்னலும் செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாய்கிழமை ஆரம்பமாகும் இந்த நடவடிக்கை வாரம் முழுவதும் தொடரும்,100 முதல் 200 அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்கா முழுவதும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்கம் அமுலாக்கல் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் கைதுகள் இடம்பெறுவதையும் மியாமியில் கைதுகள் இடம்பெறுவதையும் நீங்கள் பார்க்கப்போகின்றீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிக்காக்கோ இலினொய்சிலிருந்தே குடியேற்றவாசிகளிற்கு எதிரான நடவடிக்கை ஆரம்பிக்கும் என எல்லைகளிற்கான டிரம்பின் அதிகாரியாக பணியாற்றவுள்ள டொம் ஹொமன் தெரிவித்துள்ளார்   நன்றி வீரகேசரி 





No comments: