-சங்கர சுப்பிரமணியன்.
ஆலையிலா ஊரில் இலுப்பை பூவினிப்பே
பாலைவனமதில் தனி மரமும் சோலையே
காலையில் மலர்கின்ற தாமரையும் அழகே
மாலையில் மயக்குகிற பொழுதும் இனிதே
பல்லக்கு தூக்குவர் பல்லக்கில் ஏறாரே
சொல்லுக்கு பொருள் தெரியாரும் உளரே
மல்லுக்கு நிற்பதில் மாற்றம் வந்திடாதே
எல்லைக்குள் நின்றால் எதுவும் சிறப்பே
தற்பெருமை கொள்வர் தரணியில் சிலரே
அற்பரும் ஒருநாள் கயமை களைவாரே
கற்றவர் எந்நாளும் அடக்கத்தால் அமரரே
சிற்றோர் என்றுமே சிறப்பின்றி யிருப்பரே
எவரும் வெறுத்திடா மாந்தருமி ங்குண்டே
உவப்ப தலைகூடி உள்ளப்பிரிவர் புலவரே
அவரிவரென குறைகூறா நிற்றலும் பண்பே
சுவரோவிய காட்சி சிந்திக்க வைக்குதே!
No comments:
Post a Comment