அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்


அவுஸ்திரேலியாவில் கடந்த  இருபது  வருடங்களுக்கும்  மேலாக  தமிழ்  இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை  கடந்த  2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

 இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம்  இயங்கிவருகிறது.   கடந்த  ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில்,  பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 மீண்டும் இந்த பரிசளிப்புத் திட்டம்  இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. 

   இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும்  விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

 1. கடந்த 2023  ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய  நான்கு துறைகளில் வெளியான    தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

 2. ஒவ்வொரு துறையிலும் சிறந்ததாகத் தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் தலா 50 ஆயிரம் இலங்கை ரூபா பரிசாக வழங்கப்படும்.

 3. நூலாசிரியரின் முழுப்பெயர், வயது, முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை அடங்கிய சுயவிபரக் குறிப்பொன்றினையும் நூலுடன் இணைத்தனுப்புதல் வேண்டும்.

 4. நூலின் இரண்டு பிரதிகள், எதிர்வரும் 15-04-2024 ஆம் திகதிக்கு முன்பதாக கிடைக்கக்கூடியதாக இதில் தரப்படும்  முகவரிக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.

 5. நடுவர்களின் தீர்ப்பையடுத்து  பரிசுக்குத் தெரிவான நூல்கள் பற்றிய விபரம் பத்திரிகைகள்,  இதழ்கள், இணைய ஊடகங்கள்  மூலம் வெளியிடப்படும் என்பதுடன் பரிசு பெற்றவர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் அறியத்தரப்படும்.

 6. நூலாசிரியர் இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும் என்பதுடன்,  வேறெந்த நாட்டின் பிரசா உரிமையோ அல்லது வதிவிட உரிமையோ இல்லாதவராகவும், வேறெந்த நாட்டிலும் இப்பொழுது வசித்துக்கொண்டிராதவராகவும் இருத்தல் வேண்டும்.

 நூல்களை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி :

 Australia Tamil Literary & Arts Society

No 10, THERESA STREET,

BENTLEIGH

VICTORIA 3204

AUSTRALIA

 மின்னஞ்சல்:  

atlas25012016

No comments: