பாரதி
இளமுருகனார்
(வாழ்நாட் சாதனையாளர்)
உரைநடை இலக்கியங்கள் அனைத்திற்கும் மிகவும் உரிமையுடையவை உலக
வழக்குச் சொற்களான இயற்சொற்கள் என்பதைப் பற்றியும், சில இயற்சொற்கள் எவ்வாறு
இழிவழக்குச் சொற்களாய் மாற்றமடைந்து வழங்கப்பெற்று வருகின்றது என்பது பற்றியும்
சென்ற வாரத் தமிழ் முரசு இதழிலே சுட்டிக் காட்டப்பெற்றது. உரைநடை இலக்கியங்களுக்கு எவ்வாறு இயற்சொற்கள் முக்கியமாக இருப்பது
போலச் செய்யுள் வழக்குக்கு இயற்சொல்லும், திரி சொல்லும், வடசொல்லும், திசைச் சொல்லும் முக்கியமானவையே!. இந்த நான்கினும் மிகவும் முக்கியமானது
திரி சொற்களே. இதை வலியுறுத்துவதுபோலவே, தொல்காப்பியனாரும் திரி சொற்களைச் செய்யுள் மொழி என்றார். இயற் சொற்களுக்கு அவற்றின்
பொருள் வெளிப்படையாக விளங்கும்.
ஆனால், திரிசொற்களுக்கு அவற்றின் பொருளை அறிந்து விளங்கவேண்டும். ஒரு திரி சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பதையும் பல பொருள்களுக்கு ஒரு சொல் குறிப்பதையும்
படித்திருப்போம்.
சுருங்கச் சொல்வதற்கும், சுவைபடச் சொல்வதற்கும் பெரிதும் உதவுவது
திரிச்சொற்கள். குறிப்பாக எதுகை மோனையுடன் செய்யுள்
இயற்றுவதற்கும், கவி நடை சிறப்பாக
அமைவதற்கும், ஆழமான பொருளை எளிதாகவும் சுருக்கமாகவும் அணி
நலன்களுடன் வெளிப்படுத்துவதற்கும் திரி சொற்கள் இன்றியமையாதவை. திரி சொற்கள் இல்லாவிடத்துக் கவிதைகள் சோபிக்காது.
திசைச் சொற்கள்
தமிழ் நாட்டின் வடக்குத் திசையிலிருந்து வந்து தமிழுடன் கலந்த வட
திசைச் சொற்கள் ஆரியச் சொற்களாம். ஒரு
காலத்திலே ஆரியச் சொற்கள் செந்தமிழ்ச் சொற்களுடன் கலந்து எழுதப்பெற்று வந்தன. ஆரியச் சொற்கள் செயற்கை ஒலிகளை உடையவை. இயற்கை ஒலிகளைக் கொண்டு இனிமைமிகுந்த ஓசைவளங் கொண்டது செந்தமிழ். சில
இடங்களிலே, காலங்காலமாக ஆரியச் சொற்களுக்குச் சமமான தமிழ்
எழுத்துகளைப் பயன்படுத்தாது செந்தமிழின் இனிய சொற்களுடன் அவை கலந்து எழுதப்பெற்று வந்ததால் தமிழின்
இனிய ஓசை வளம் திரிபடையத் தொடங்கி
இறுதியிலே பேசப்பட்டுவந்த அந்தக்
கலப்பு மொழி முழுமையாகத்
திரிபு அடையப்பெற்று மலையாளம் - கன்னடம் - தெலுங்கு என மாறியமை வரலாறாகும்.
தொல்காப்பியர் காலந்தொட்டு இன்றுவரை
தமிழ்ச் சான்றோர்கள் ஆரிய
எழுத்துக்களுக்குச் சமமான தமிழ் எழுத்துகளை வழங்கிச் செந்தமிழ் வழக்கைச் சிதையாது
பாதுகாத்து வந்துள்ளார்கள். ஆரிய வடதிசைச் சொற்கள் இறைவழிபாட்டுக்கு
மந்திரங்களாகப் பாவித்துவந்தமையால் தமிழ் நடைபெற்ற அச்சொற்கள் வடசொற்கள் எனத் தனிப்படச் சான்றோராலே நியமனம்
பெற்றது. ஏனைய வழிகளால் தமிழொடு கலந்த சொற்கள் திசைச் சொற்கள் என நியமனம் பெற்றது.
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே! –
இது தொல்காப்பியனார் வகுத்த இலக்கணவரம்பு. இங்கே வடசொற் கிளவி என்பது ஆரிய சொல்லுக்கே உரிமையான சிறப்பெழுத்தை
அதற்கும் செந்தமிழுக்கும் பொதுவாகிய எழுத்தால் ஆக்கப்பெற்ற சொல்லைக் குறிப்பதாகும். தொல்காப்பியனாரைப் போன்று ஏறத்தாழ 800 ஆண்டுகளுக்கு முன்பு செந்தமிழ் வழக்கைப் பேணிவந்த பவணந்தி முனிவர் ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவான
சொற்களால் வடமொழி ஆக்கத்தைச் சிறப்புறச் செய்து தமிழுக்கு அணிசேர்த்தார். மணிப்பிரவாள நடைஆட்சிசெய்த சில நூற்றாண்டுகளிலும் அதைத் தொடர்ந்து
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் செந்தமிழ் நடை பின்னடையத் தொடங்கிற்று. இவற்றையெல்லாம் தாண்டிச் செந்தமிழ் நடை செந்தமிழ்ப் புலவர்களால்
மெல்லமெல்லப் பாதுகாக்கப்பெற்று வந்துள்ளது. அண்மைக் காலத்தே வாழ்ந்த யாழ்ப்பாணத்துச்
சுன்னாகத்தில் வாழ்ந்த குமாரசுவாமிப்புலவர் அவர்களால் வடமொழி ஆக்கம் மறுமலர்ச்சி கண்டது. இவரைத் தொடர்ந்து நவாலி ஊர் சோமசுந்தரப் புலவர் (தங்கத் தாத்தா) - மாவைக் கவுணியன் வெண்ணெய்க் கண்ணனார் -
புலவர்மணி இள}முருகனார் - வித்துவான் பொன்.
முத்துக்குமாரன் - பண்டிதர்கள் ஆசீர்வாதம் -- மயில்வாகனம் - ஆசிநாதன் போன்றவர்களால் பேணப்பட்டுவந்துள்ளது. இதே காலத்தில் புதுமை
எழுத்தாளர்கள் சிலராலும், வணிகநோக்குடன் செயற்பட்ட செய்தித்
தாள்களினாலும் செந்தமிழ் மரபு சிறிதுசிறிதாகச் சிதைக்கப்பெற்று வந்துள்ளது. இன்றும் இந்தநிலை தொடர்வது மிகவும் கவலைக்கிடமாகிறது. இன்று வெகு வேகமாக வளர்ந்துவரும் கொடுந்தமிழ் வழக்கு
நிறுத்தப்பட்டுச் செந்தமிழ் நடை வளஞ்செய்யப்பட்டாலே செந்தமிழ் வழக்கு நிலைகொள்ளும். காலங்கடத்தி வருவார்களானால் செந்தமிழ் மொழி இன்னும் சில
நூற்றாண்டுகளில் வேறு வடிவம் எடுத்துத் திரிபடையும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஆரிய மொழிச் சொற்களைக் (வட எழுத்துக்களுக்குச் சமமான தமிழ் எழுத்துகளைப்
பாவிக்காது ) கொடுந்தமிழ்ச் சொற்களாகப்
புதுமை எழுத்தாளர் சிலர் இன்று பெருமளவிலே பாவித்து வருகிறார்கள்
அவர்களின் படைப்புகளில் இருந்து சில உதாரணங்களைக் கீழே பார்க்கலாம்.
ஆரியச் சொற்கள தமிழுடன்
கலக்கப்பட்டு வருவது கண்கூடு. உதாரணத்துக்குச் சில வடமொழிச் சொல்லாக்கம் பெற்ற
(தமிழ் நடைப்படுத்தப்பெற்ற) சொற்களை ஆராய்வாம்-- மேலே தரப்பெற்ற
ஆரியமொழிச் சொற்கள் வடசொல்லாக்கம் பெற்றுத் தமிழொடு வழங்கப்பெற்று வருவது----
ஜலம் - ஜனம் - ஜகம் - ஜங்கமம் - ஜனகன் - ஜனனம் - ஜயம் - ராஜ்யம் - சமாஜம் - விஜயன் - துவஜம்- ஜாதகம் - ஜாதி – ஜாலம்- ஜாக்கிரதை - ஜீவன் - ஜீரணம் ஜீரகம் - ஜூவாலை – ராஜன் - ராஜா - ராஜாத்தி - புஜம் - போஜனம் - ஜெந்து - பிரஜை - பூஜை - ஜோதி - குஷ்டம் - அதிஷ்டம் - கிருஷ்ணன் - சிருஷ்டி -துஷ்டன் - நஷ்டம் - பாஷை - அபிஷேகம் - ஷண்முகம் - சீஷன் - நிமிஷம் வருஷம்- வேஷம் - ஷேமம் - ரிஷி - அஷ்திரம் – அஷ்தமனம் - அவஷ்தை – உத்ஷவம் - கஸ்தூரி – சரஸ்வதி - ஸாஸ்திரம் – ஜடம் - வாஸம் - விஸ்தாரம் ஸபா- ஸக்தி - ஹரி – ஹனுமான் - ஹிதம் - ஹேது - ஸ்நேஹம் - லக்ஷ்மி – ராமன் - ரகஸ்யம்
ரஞ்சிதம் ரசாயனம் - ரத்தம் - ராணி – ராணுவம் - ராத்திரி –
ருக்மணி - - ரோகிணி - ரதம் - ரதி – ரவி - ராகம் -ரோமம் - லஞ்சம் – லாபம் -லோகம் -லிங்கம்.
தமிழொடு வழங்கப்பெற்று வருவது----
சலம் - சனம் - சுகம் – சங்கமம் - சனகன் - சனனம் - சயம் – இராச்சியம் –
சமாசம் - விசயன் – துவசம் - சாதகம் - சாதி
- சாலம் - சாக்கிரதை –
சீவன் - சீரணம் - சீரகம் - சுவாலை - இராஜன் – இராசா - இராசாத்தி - புயம் - போசனம் - செந்து - பிரசை- பூசை
- சோதி - குட்டம் - அதிட்டம் –
கிருட்டிணன் - சிருட்டி - துட்டன் - நட்டம் - பாசை - அபிடேகம் –
சண்முகம் - சீடன் - நிமிடம் - வருடம் - வேடம்
- சேமம் - இருடி –
அத்திரம் - அட்டமனம் - அவத்தை - உற்சவம் - கத்தூரி
சரசுவதி – சாத்திரம் – சடம் - வாசம் - வித்தாரம் - சபா - சத்தி -
அரி - அனுமான் - இதம் - கேது - சிநேகம் - இலக்குமி - இராமன் - இரகசியம் -
இரஞ்சிதம் - இ ரசாயனம் – இரத்தம் - இராணி - இராணுவம் - இராத்திரி – உருக்மணி- உரோகிணி - இரதம் - இரதி - இரவி - இராகம் – உரோமம் - இலஞ்சம் –
இலாபம் -உலோகம் - இலிங்கம்
திசைச்
சொற்கள்
மேலே குறிப்பிட்ட சொற்கள் பலவற்றிற்கு
ஏற்ற தூய தமிழ்ச் சொற்கள் உண்டு. ஆனால் அவற்றைப் படித்தவர்களும் பாவிப்பவர்களும்
மிகவும் குறைந்துவிட்டனர்.
மேலே கூறப்பெற்றதுபோல ஆரியச் சொற்களை வடசொற்களாக தமிழ்
நடைப்படுத்திப் பாவிப்பதுபோல வேறு திசைகளிலிருந்து தமிழுடன் கலந்துவிட்ட
திசைச்சொற்களையும் தமிழ் நடைப்படுத்தி
அவற்றை இன்றியமையாது தேவைப்படும் சில இடங்களிலேமட்டும் பாவித்தல்
வேண்டும். பிற நாடுகளுடனான வாணிகத் தொடர்பு - பல்லின மக்களின் நட்புறவு - ஆட்சியிலுள்ள மொழியின்
தாக்கம் - மேலைநாட்டுக் கலாசாரக் கலப்பு ஆகிய காரணங்களால் தமிழர் பேசும்
தமிழ்மொழியிலும் திசைச்சொற்கள் அதிகமாகக் கலந்து வந்துள்ளது.
அத்தகைய கலப்பு ஏற்படாது
தமிழ்மொழியின் புனிதத்தன்மையைக் காப்பதும்,
கலக்கக்கூடிய திசைச் சொற்களுக்கு நேரான புதிய தமிழ்ச் சொற்களைத் தமிழோசைக்கு
இயைபுபடத் தமிழ்நடைப்படுத்தி ஆக்குவதும் தமிழிற் புலமைகொண்டோரின் தலையாய கடமையாகும். இதை விடுத்து,
வடமொழிச் சொற்களையும் ஆங்கிலம் - தெலுங்கு - கன்னடம் - இந்தி போன்ற திசைமொழிச் சொற்களையும் வரம்புமீறி
எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களிலே பயன்படுத்தி வருவார்களானால் எமது இனிமைத்
தமிழ்மொழி, ஒருசில நூற்றாண்டுகளில் வேறொரு மொழியாக
மாறுமென்பதிலே மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்பது தமிழ்ச் சான்றோரின் முடிபு.
இந்த உண்மையைப் பரிந்துகொள்ளமுடியாத இக்கால எழுத்தாளர் பலர் தமது
ஆக்கங்களிலே கொடுந்தமிழ்ச் சொற்களையும்,
அயன்மொழித் திசைச் சொற்களையும்,
இலக்கண அமைதியில்லாச் சொற்றொடர்களையும் தமது விருப்பம்போல வழங்கிவருகின்றார்கள்.
இவர்களின் இத்தகைய தரமற்ற ஆக்கங்களைப் படிக்கும் தமிழ் மாணவர்கள் கொடுந்தமிழை
எழுதவும், பேசவும் தயங்கமாட்டார்கள் அன்றோ?. இதன்
விளைவு தமிழ் அழிவு என்பதை ஒவ்வொரு
தமிழனும் நன்கு உணரவேண்டும்.
இக்காலப் புதுமை எழுத்தாளர்களின்
ஆக்கங்களிலிருந்து அவர்கள் கையாண்ட
திசைமொழிச் சொற்ககள்
( கொடுந்தமிழ்) சிலவற்றைப் பார்ப்போம்!
பப்பு - போக்கர் மெசினில் -
கலறிங் - சைக்கிள் - சூட்கேஸ் -
கரியரில் - கேர்ள்பிரணட் - லாச்சி -
ரேண் - ஓஃபிஸ் - றூம் - றோஸ்ரர் - அஜஸ்ட் - சேர் - என்கேச்மென்ட -
கார்ட்ஸ் - அஷிஸ்டென்ற் - ஹெவி றக்
– செக்கியூரிட்டி - பக் லோடர் - டியூசன் -
புல்டோசர் - சிற்றுவேசன -
வைபிறேஷன் மிஷின்கள் - அட்வைஸ் - வைவின்கெல்த் லெற்றர் பியூற்றிப் பாளர்;
சைறன் - ரோய்லட் சீட் - மம் - டாட் - மொபைல் - றோட் கேசு -கோட்டு -போட்டோ - லீவ் - யூனிட்
-- பொலீஸ் - ஏயர்லைன்ஸ் - எஸ்கலேட்டர் - ரெயில் - ஏயர்ஹெஸ்ரெர்ஸ் - டிறே –
பார்ஸ்போர்ட் - ஸ்டாம்ப் - பென்சில் -
பைனான்ஸ் கொம்பனி - பைல் - கசினோவு - மார்க் - டொமொஸ்டிக் வயலன்ஸ் - பங்கருக்குள்
- எபார்ட்மென்ட் - ரகளை - தாஜா பண்ணுறாய் - மைனர் - ஜால்றா – றேரன் – டோசர் - பிரஜை - என்ட…
ஃப்றலய்ட் – மகளின்ட - அங்கில்! – அன்டி – ரவிக்கை – ஆன்டி- ஒபரேசனின் - ஸ்பெசல் லைசன்ஸ் – டொக்டருடன்
- தாங்க் கோர்ட் - கப்பில் கிறீன் டீ - புரோக்கர்மார் - எண்டு சொன்னியே – பிரெக்னன்டா
டிவோசியா – ரிஜஸ்டர் - உண்ட
அம்மாவை - பேஸ்புக் மெசெஞ்சரில் - மெசெஜில் –
தமிழ்நாட்டுக் கொடுந்தமிழ் வளர்ப்போரிடம் இருந்து
தொற்று நோய் போன்ற இந்தக் கொடுந்தமிழ் வழக்கானது பல தசாப்தங்களாகத் தொடர்ந்து எங்கள் தாய்நாட்டு
எழுத்தாளர் சிலரிடம் பற்றிக்கொண்டு வந்துள்ளது.
அதைப் புலம்பெர் தமிழ் எழுத்தாளர்கள் கூத்தாடிக் கூத்தாடிச் செழிப்பாக வளர்த்து வருகிறார்கள்.
மேலே தரப்பெற்ற இந்தச் சொற்கள் செந்தமிழ்
வழக்குக்கோ உரைநடை மரபுக்கோ பயனற்றவை. இவை,
சிட்னியிலே அண்மையிலே பிரசுரிக்கப்பெற்ற கதைகளில்
இருந்தே எடுக்கப்பெற்றவை. இவர்கள், தமது
ஆக்கங்களிலே வழங்கிவரும் சொற்களால் செந்தமிழின் இனிமையும், புனிதத்
தன்மையும் சிதையத் தொடங்கியுள்ளது.
புலம்பெர்
தமிழ் எழுத்தாளர்கள் கவனத்திற்கு!
உலகப் பொது மொழியாக ஆங்கிலம் இருப்பதாலும், புதியபுதிய கலைச் சொற்கள் அந்த மொழியிலிருந்து
மொழி பெயர்க்கப் படுவதாலும் ஆங்கிலச் சொற்கள் தமிழுடன் கலக்கவேண்டிய நிலை வரலாம்.
இவற்றைக் காரணமாக வைத்துக்கொண்டு ஆங்கிலத்தைத் தமிழுடன் கலந்து எழுதிவருவதால்
பெரும் ஆபத்தான பின்விளைவுகள் ஏற்படும். ஆனால், இன்றியமையாத கட்டத்திலே தேவைப்படும் ஒரு சிற்சில
இடங்களிலே மட்டும் ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களை ஓசையாலும் எழுத்தாலும் தமிழ்
நடைப்படுத்திப் பாவிக்கலாம் என்று சான்றோரால் வரையறை செய்யப்பெற்றுள்ளது. ஆனால், அதுவும் நூற்றுக்கு ஒன்று இரண்டு விழுக்காடாக மட்டும் பாவிக்கலாம்
என்றும் விதித்துள்ளார்கள். அத்துடன்
நாடகப் பாணியிலே எழுதும்பொழுது கல்வி கற்ற ஒருவர் கல்வி அறிவு குறைந்தவருடன்
பேசும்பொழுது அவர் இலகுவாக விளங்கும் பொருட்டு இழிந்தோர் வழக்குச் சொற்களைக்
குறைந்த அளவு தேவைக்கு ஏற்றப் பாவிக்கலாம் என்றும் வரையறை செய்துள்ளார்கள்.
அதற்காக முழுக் கதையிலும் அடிக்கடி இழிந்தோர் வழக்குச் சொற்களைப் பாவிப்பது
கொடுந்தமிழ் வளர்ப்பதற்கு ஒப்பாகும் என்பதும் சான்றோர் கருத்தாக
இருந்துவந்துள்ளது.
- ……செந்தமிழ் நடையும் கொடுந்தமிழ் நடையும் தொடரும்
No comments:
Post a Comment