ரணிலும் சஜித்தும்

 August 25, 2024


ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்கள் காணப் படுகின்றனர். இவர்களில் அநுரகுமார திஸநாயக்கவுக்கு ஒப்பீட் டடிப்படையில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலைய மக்களின் ஆதரவை பெறுவது மிகவும் கடினமானது – குறிப்பாக ஈழத் தமிழ் மக்களின் ஆதரவை பெறுவது மிகவும் சவாலானது.

இந்தப் பின்புலத்தில் நோக்கினால், அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியாளர்களாக, ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவுமே காணப்படுகின்றனர். இவர்கள் இருவருமே கடந்த காலத்தில் தேசிய இனப்பிரச் னைக்கான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பரிசீலிப்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டவர்கள்.

இவ்வாறு கூறும்போது – எப்போது என்னும் கேள்வி எழலாம். விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையி லான அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது, சமஷ்டி அடிப்படையிலான தீர்வை கண்டடைவதற்காக தொடர்ந்தும் செயல்படுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதுதான், ஒஸ்லோ இணக்கப்பாடு எனப்படுகின்றது. பேச்சுவார்த்தை காலத்தில் ரணில் அரசாங்கத்தில் சஜித் பிரேமதாஸவும் ஒரு முக்கிய நபராவார். ஐக் கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். அப்போது, இது தொடர்பில் சஜித் பிரேமதாஸ எதிர்ப்பு வெளியிடவில்லை.

இந்திய – இலங்கை உடன்பாடு தொடர்பில், தனது தந்தையார் ரணசிங்க பிரேமதாஸ, ஜே.ஆர்.ஜெயவர்தனவுடன் முரண்பட்டது போன்று சஜித் பிரேமதாஸ முரண்படவில்லை. ரணிலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார். அவ்வாறாயின் கொள்கையளவில் சஜித் பிரேமதாஸ சமஷ்டியை எதிர்க்கவில்லை என்றுதானே நாம் பொருள் கொள்ள வேண்டும். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? இரண்டு வேட்பாளர்களுமே சொல்லி வைத்தவர்கள் போன்று, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் பேசுகின்றனர். அவ்வாறாயின் முன்னர் எந்த அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பரி சீலிக்க இணங்கியிருந்தனர்?

அன்று ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்த விடயத்தை ஏன் இன்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை? சமஷ்டி அன்று சரியென்றால் இன்றும் அது சரியாகத்தானே இருக்க வேண்டும்? இது தொடர்பில் ரணிலும் சஜித்தும் தமிழ் மக்கள் முன்னிலையில் ஒரு பகிரங்க விவாதத்தை எதிர்கொள்ள முடியுமா? அல்லது அன்று, விடுதலைப் புலிகள் இயக்கம் தனிநாட்டுக் கோரிக்கையுடன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தமையால்தான், ரணில் சமஷ்டியை பரிசீலிக்க இணங்கியிருந்தாரா – அதுதான் சஜித்தும் அமைதியாக இருந்தாரா? அவ்வாறாயின் அனைத்தும் இங்கு பலத்தினால்தானே தீர்மானிக்கப்படுகின்றது.

இது எதனை உணர்த்துகின்றது? தமிழ் மக்கள் ஓர் அரசியல் சக்தியாக இருந் தால் மட்டுத்தான், எவரும் தமிழ் மக்களை திரும்பிப்பார்ப்பார்கள் – இல்லாவிட்டால், தமிழ் மக்களை எவருமே திரும்பிப்பார்க்கப் போவதில்லை. இதுதான் அரசியல் யதார்த்தமாகும். இந்த யதார்த் தத்தை புரிந்துகொண்டு செயலாற்றினால் மட்டுமே, தமிழ் மக்க ளுக்கான அரசியலை பாதுகாக்க முடியும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் என்பதுதான், இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கான தனித்துவமான அரசியல் இருப்பாகும். இந்தப் பின்புலத்தில்தான் தமிழ் பொது வேட்பாளர் முக்கியத்துவம் பெறுகின்றார். மற்றும்படி அவர் யார் – அவருடைய கருத்துக்கள் எத்தகையது என்பதெல்லாம் ஒரு பிரச்னைக்குரிய விடயமல்ல.   நன்றி ஈழநாடு 

No comments: