.
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்க சிட்னிக் கிளையினரின் மலரும் மாலை 2024 பத்தாவது வருடமாக திருமதி நளினி விமலேஸ்வரனின் தலைமையில் சிட்னியில் இடம் பெற்றது. August மாதம் 31 ஆம் நாள் சனிக்கிழமை மாலையில் Castle Hill இல் அமைந்திருக்கும் பொயினியர் தியேட்டரில் ( Pioneer Theatre) இடம் பெற்றது. சங்கத்தின் பழைய மாணவியும் போசகருமான திருமதி கலையரசி சின்னையா அவர்களும், திரு சின்னையா அவர்களும் மங்கல விளக்கை ஏற்றி வைத்தார்கள். பழைய மாணவிகளின் கல்லூரி கீதத்தோடு நிகழ்ச்சி ஆரம்பித்தது. இளவல்களான வித்தியா பாலகுமார், ஷாலினி முருகானந்தன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஆரம்பித்து வைத்தார்கள். ஆங்கிலத்திலும் தமிழிலும் அருமையான ஒரு தொகுப்பாக அவர்கள் ஆரம்பித்து வைத்த பின்பு தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சிட்னியின் கம்பன் கழகத்தின் தலைவராக இருப்பவரும் சிறந்த அறிவிப்பாளருமான திரு சஞ்சீவன் குணரட்ணம் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இயல்பாகவே அவருக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வோடு மிக நகைச்சுவையாகவும் அழகாகவும் நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்தது மக்களை கவர்ந்து கொண்டது. நிகழ்ச்சிக்கு தலைமை உரையை வழங்குவதற்காக தற்போதைய நடப்பாண்டின் தலைவியான திருமதி நளினி விமலேஸ்வரன் அவர்கள் வந்து தலைமையுரையை வழங்கினார். தாங்கள் செய்கின்ற செயல் திட்டங்கள், பாடசாலைக்கான செயல் திட்டங்கள், தமிழ் மக்களுக்கான செயல் திட்டங்கள் என்பவை பற்றி சுருக்கமாக விவரித்திருந்தார்.
அதனை தொடர்ந்து இசை கதம்பம் என்ற நிகழ்வு ஆரம்பித்தது. இசை கதம்பம் என்றவுடன் கர்நாடக இசை பாடல்கள் ஒலிக்கப் போகின்றதோ என்று பார்த்துக் கொண்டிருந்தபோது அருமையான இசை கருவிகளின் சங்கமமாக அந்த நிகழ்வு மெருகூட்டியது. இசை கதம்பத்திலே ஸ்ரீமதி திலகா ஜெயநாதன் அவர்களுடைய கோகுலதர்ஷன் மியூசிக் அகாடமி மற்றும் ஸ்ரீமதி லாவண்யா விதுஷன் அவர்களின் ராகமாளிகா மியூசிக் அகடமி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டு மிக அருமையாக இசை கருவிகளை மீட்டினார்கள் புல்லாங்குழல், வயலின், வீணை, மிருதங்கம், தபேலா, ஒக்டோபாட், கீபோட், கடம் இப்படி அந்த இசை கதம்பம் மிக அருமையாக அமைந்தது. அந்த வாத்திய இசையிலே புதிய பாடல்கள், பழைய பாடல்கள் என்று எல்லோரையுமே மகிழ்விக்க கூடியதாக பாடல்களை இசைத்தார்கள். அதிலும் பாட்டுப்பாடாவா மற்றும் அதோஅந்த பறவைபோல என்ற இருபாடல்களையும் கலந்து கொடுத்ததட்கு பாராட்டுக்கள் . இந்த இலவல்கள் இவ்வளவு அருமையாக வாசிக்க வைத்த அந்த இசை நிகழ்ச்சியாளர்களுக்கு நிச்சயமாக ஒரு பெரிய பாராட்டை கொடுக்க வேண்டும்.
அதை தொடர்ந்து கலைமகள் ஆடல் என்ற ஒரு நிகழ்வு நடன நிகழ்வாக இருந்தது. இங்கும் பல நடன ஆசிரியர்கள் இணைந்து இந்த நடனங்களை ஒரே மேடையிலே வழங்கி இருந்தது உண்மையிலேயே ஆச்சரியப்பட வைத்தது. அதிகமான நிகழ்வுகளில் ஒரு ஆசிரியையுடைய மாணவிகள் வருவார்கள் ஆடுவார்கள் ஆனால் இங்கே அந்த ஆடல் நிகழ்ச்சியை அமைத்த போது அத்தனை ஆசிரியர்களின் மாணவர்களும் ஒன்றாக ஆடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள். மக்களுடைய கரகோஷத்தை அது பெற்றுக் கொண்டது. நடன ஆசிரியர்களான ஸ்ரீமதி பூரணி ஸ்ரீகரன் , ஸ்ரீமதி அபிராமி குமார தேவன், செல்வி ஆருதி குமணன் ஆகியோரின் மாணவிகள் அருமையான ஒரு நடன நிகழ்வை கொடுத்திருந்தார்கள் .
இறுதி நிகழ்வாக உறவுகள் என்ற நாடகம் அரங்கேறியது . உறவுகள் நாடகத்தை எழுதி தயாரித்து நெறியாள்கை செய்திருந்தவர் நமக்கு எல்லோருக்குமே நன்கு பரிச்சியமான நடராஜா ரமேஷ் அவர்கள் அந்த நாடகம் புலம்பெயர்ந்து வந்த ஒரு குடும்பம், அவர்களுடைய வாழ்க்கை அவர்கள் சொந்த மண்ணிலே இருந்த போது அந்த உறவுகள் எப்படி இருந்தது, புலம்பெயர்ந்து வந்த போது அந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற வகையிலே அந்த நாடகத்தை கொண்டு சென்றார்கள். அதில் நடித்த அத்தனை பேருமே மிக அருமையாக நடித்திருந்தார்கள் அதிலே குறிப்பாக ஒரு சிறுமி அந்த நாடகத்திலே மகளாக நடித்திருந்தார் நான் நினைக்கின்றேன் ராகவி ரகுவரன் இந்த சிறுமிக்கு விசேடமான ஒரு பாராட்டை கொடுக்க வேண்டும் அவருடைய தமிழ் ஒரு மழலை தமிழ்ப் போல், ஏனென்றால் இங்கே பிறந்து இங்கே வளர்ந்த ஒரு சிறுமி என்ற காரணத்தினாலே ஒரு மழலை தமிழ் இருந்தாலும், அவருடைய அம்மம்மா கூட இருக்கின்ற அந்த பாசத்தை அவர் காட்டிய விதம் புலம்பெயர்ந்த பின் அது எப்படி இருந்தது என்பதை காட்டிய விதம் எல்லாமே மிக நன்றாக அமைந்திருந்தது. அதேபோல் இந்த நாடகத்திற்கு சில பாடல்களை உயிரோட்டமாக பாடியிருந்தார்கள் சிவமதி விக்னராஜன், சிவசங்கரி கௌரிசங்கர் உண்மையிலேயே அந்த பாடல்கள் உயிரோட்டம் உள்ளதாகவும் மக்களின் மனதை அப்படியே கொள்ளை கொள்வதாகவும் இருந்தது. அவர்களுக்கும் விசேடமான பாராட்டுக்கள்.
அது தவிர நாடகத்தில் நடித்த பூரணி முருகானந்தனுடைய நடிப்பாக இருந்தால் என்ன மதுமதி ரஞ்சித்தினுடைய நடிப்பாக இருந்தால் என்ன சிவசங்கரி கௌரிஷங்கர் உடைய நடிப்பாக இருந்தால் என்ன சங்கீதா மனோகரனுடைய நடிப்பாக இருந்தால் என்ன கோனேஸ்வரி தியாகேசன் உடைய நடிப்பாக இருந்தால் என்ன எல்லாமே மிக அருமையாக அமைந்தது.
உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு விடயத்தை மிக அழகாக காட்டிச் சென்றார்கள் ஒரு பாராட்டு.
1 comment:
இலங்கையின் மிக முக்கியமான தேர்தலான நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே எஞ்சியுள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான நான்கு முக்கிய வேட்பாளர்களின் விவரங்களின் கண்ணோட்டம் இது.
ரணில், சஜித், அநுர, நாமல் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?
Post a Comment